கிறிஸ்தவர்களே உங்கள் ஒட்டுக்களை சிதறடித்து வீணாக்கி விடாதீர்கள்!

Share this page with friends

கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் ஆதி திருச்சபைகள் நேரடியாக அரசியலில் ஈடுபடாவிட்டாலும், தற்போதைய சூழலில் அரசியலில் கிறிஸ்தவர்கள் தங்கள் கால்களை உரிமை போராட்டம் என்று வைப்பது பெருகி விட்டாலும், அரசியல் மூலம் அரசாங்கத்தை தெரிந்து கொள்ளும் ஒரு அரசியலமைப்பின் உரிமையை இந்திய கிறிஸ்தவ குடிமக்கள் என்கிற நிலையில் நிறைவேற்ற வேண்டியது ஒவ்வொருவரின் தலையாய கடமை ஆகும். எனவே உங்கள் ஒட்டு உரிமையை தெரிந்து கொள்ளும் போது கீழ் கான்பவற்றை கவனிக்க வேண்டும்.

??கட்சிகளின் பெருந்திரள் மக்களின் ஆதரவை கருத்தில் கொண்டு அதில் எந்த கட்சி கிறிஸ்தவ கொள்கைக்கு ஒத்து போகிறது என்று பாருங்கள். பெருந்திரள் கட்சிகளை ஒப்பிட்டு பார்த்து எந்த கட்சி கிறிஸ்தவர்களுக்கு அதிகமாக எதிரி இல்லையோ அதையே தெரிந்து எடுத்து அந்த கட்சியின் வேட்பாளருக்கு உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்.

??அதிலும் மக்கள் பெருந்திரள் ஆதரவு பெற்ற கட்சிகளில், இதுவரை கிறிஸ்தவர்களை இந்திய குடிமக்களாக கருதாமல், கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக பேசி, கிறிஸ்தவர்கள் ஆலயங்களில் இடையூறு தந்து, ஆராதனை நடத்த விடாமல் தடுத்த, அப்படிப்பட்ட செயல்களுக்கு ஆட்சியில் இருக்கும் போதே ஒரு சிறு வருத்தம் கூட தெருவிக்காத, நமது குடியுரிமையில் கூட கை வைக்க பார்த்த கட்சிகளை நிராகரித்து விடுங்கள். அதில் வேறு யோசனை ஒன்றும் தேவை இல்லை.

?? தேர்தல் நேரத்தில் நல்லவர்கள் போல நடித்து, ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களை எதிர்த்து, தேசம் விட்டு துரத்துவோம் என்று சவால் விட்டவர்கள், மற்றும் அப்போது அதை எதிர்க்காமல் அவர்களுக்கு குழல் ஊதி கொண்டு இருந்தவர்கள், இப்போது தேர்தல் நேரத்தில் என்ன நல்ல பிள்ளையை போல நடித்து, உங்களுக்கு அதை செய்வோம், இதை செய்வோம் என்று, எதாவது bishop அல்லது பாதிரியார்களை முன்வைத்து சவடால் விட்டாலும், நீலி கண்ணீர் வடித்தாலும் ஓட்டு போடாதீர்கள் ஏனெனில் இவர்கள் சந்தர்ப்பவாதிகள்.

?? தேர்தல் நேரத்தில் கிறிஸ்தவர்களுக்கு 30 சதவீதம் ஒட்டு இருக்கிறது என்று சொல்லி, நாங்கள் சுயேட்ச்சையாக நிற்கிறோம், பெருந்திரள் கட்சியை நம்பாதிருங்கள், உங்கள் உரிமைக்காக நாங்கள் போராடுவோம், உங்களை காப்பாற்றுவோம், எங்களுக்கு ஒட்டு தாருங்கள் என்று சொல்லி உங்கள் சொந்தகாரரோ, உங்களுக்கு தெரிந்த கிறிஸ்தவரோ, உங்களுக்கு தெரிந்த கட்சி நடத்தும் போதகரோ வந்து ஒட்டு கேட்டால், உங்கள் ஒட்டை போட்டு, நமக்கு நாமே ஆப்பு வைக்காமல் இருக்க வேண்டும். ஏனெனில் நிச்சயம் இவர்கள் வெற்றி பெற போவதில்லை. இவர்கள் சிலரின் கைகூலியாக கூட இருக்கலாம். யார் வெற்றி பெற்றாலும் நமக்கு பிரச்சனை என்று வந்தால், நாமும், நமக்கு உதவி செய்ய கர்த்தரும் தான் கூட உண்டு. எனவே பொது மக்களுக்கு மதம், ஜாதி சார்ந்து பிரச்சனை கொடுக்காத, மத சார்பற்ற, ஜனநாயக பெருந்திரள் கட்சியின் ஓட்டை பிரிக்காமல் செயல்பட வேண்டும். நம்மவர்கள் இன்னும் நல்ல ஒரு சமூக இயக்கமாக மாரட்டும், நாம் கிறிஸ்தவற்களாக இன்னும் அரசியலில் சாதிக்க வெகு தூரம் போக வேண்டும். பின்னாடி அதை பார்க்கலாம்.

??நாங்கள் ஜெபிக்கிறோம் என்று சொல்லி கர்த்தரை, கர்த்தருடைய மக்களை எதிர்க்கும் எதிராலிக்கு ஒட்டு போட்டு, கர்த்தர் விரும்புகிறவர்களை தேர்தலில் தோற்கடித்து விடாதீர்கள்.

??நாம் சமாதானமாக ஜீவனம் பண்ணும் படி, மத தீவிரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் திட்டம் முறியடிக்கப்பட உங்கள் ஓட்டை சரியாக பயன்படுத்துங்கள். ஒட்டு போடாமல் இருந்து எதிராளிக்கு பாதை அமைத்து கொடுக்காதிருங்கள்.

கர்த்தர் தாமே முன்னின்று தமது ஆளுகையை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவாராக!

செலின்


Share this page with friends