தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களேஎச்சரிக்கை

Share this page with friends

தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவர்களே, எச்சரிக்கை

சென்னை – கீழ்பாக்கம் – பிஷப் மாணிக்கம் ஹாலில் ‘காஸ்பல் சொசைடி நடந்தும்வேதாகம புகைப்பட கண்காட்சி என்று சொல்லி உங்களை வஞ்சிக்க வரும் பைபிள் ஸ்டூடன்ஸ் என்ற கள்ள உபதேசத்தாரை குறித்து எச்சரிக்கையாயிருங்கள்….மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளேயே …. (அப்போஸ்தலர் 20:29) இவர்கள் நடத்தவிருக்கும் இரண்டு நாட்கள் 28.01.2023 & 29.01.2023 (சனிக்கிழமை & ஞாயிறு) புகைப்பட கண்காட்சி & கூட்டத்திற்கு செல்ல வேண்டாம்… ஏன்? யார் இவர்கள்? இந்த ‘காஸ்பல் சொசைட்டி’ என்பவர்கள் நமக்கு காலம்காலமாக பைபிளை கொடுத்து வரும் இந்திய வேதாகம சங்கம் (Bible Society of India) அல்ல.

அமெரிக்காவில் உருவான ‘யெகோவா விட்னஸ்’ என்ற கள்ள உபதேச குழுவிலிருந்து பிரிந்து ‘பைபிள் ஸ்டூடன்ஸ்’ “வேதாகம மாணவர்கள்(BIBLE STUDENTS)” என்ற குழுவாக உலகமெங்கும் கிறிஸ்தவர்களை வஞ்சித்து வருகின்றனர்.

இப்பொழுது தமிழகத்தில்…. சென்னையில்…..? இவர்கள் சென்னையில் சபைக்கு ஒழுங்காக செல்லும் கிறிஸ்தவர்களை குறிவைத்து மிக தீவிரமாக செயல்படுகின்றனர். 50 மகத்துவமான வேதபாடங்களை சொல்லி தருகிறோம் என்று சொல்லி வசனங்களை புரட்டுவார்கள் இவர்களின் துர்உபதேசங்கள் எவைகள்?

  1. இவர்கள் நமது தேவனின் திரித்துவ தன்மையை (TRINITY/TRIUNITY) மறுதலிப்பவர்கள். பிதா மட்டும் தேவன் (GOD)என்பார்கள், இயேசு சின்ன தேவன்(god) என்று ஆரம்பத்தில் போதிப்பார்கள்.என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.1 யோவா 2 : 1- 2
  2. இயேசு கிறிஸ்து தேவகுமாரன் என்று சொல்லுவார்கள். ஆனால் இயேசு கிறிஸ்து பிதாவுக்கு சமமானவர் அல்ல, இயேசு தேவன் அல்ல என்பார்கள்.சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும் சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.1 யோவா 2 : 20
  3. பிறகு இயேசு கிறிஸ்து வெறும் தூதன் (angel)என்று அவரின் தெய்வீகத்தை உங்களை மறுதலிக்க வைப்பார்கள்.இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்.1யோவா 2 : 22 – 23வருமென்று கேள்விபட்ட அநேக அந்தி கிறித்தவர்கள் இவர்களே இவர்களை விட்டு விலகியோடவும்
  4. பரிசுத்த ஆவியானவர் ஆள்தத்துவமுடையவர் அல்ல என்றும், கடவுள் அல்ல என்றும், பரிசுத்த ஆவி என்பது வெறும் சக்தி (power) என்று தரகுறைவாக போதிக்கிறவர்கள்.நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.யோவா 16 : 7 – 8 ,13 வரை வாசிக்கவும் பரிசுத்த ஆவி யார் என்று உங்களுக்கு புரியும் ஆனால் அந்திகிறித்து வாகிய இவர்கள் அது ஒரு சக்தி என கூறவார்கள் எனவே எமதன்பான கிறித்தவ பிள்ளையே எச்சரிக்கையாக இருங்கள்
  5. நரகம் என்று ஒன்று இல்லை என்று போதிப்பார்கள். இவர்களை கண்டு பிடிப்பது எப்படி? இவர்கள் “யொகோவா சாட்சிகளை” (JW-Jehovah Witness) காட்டிலும் மோசமான வஞ்சக கூட்டம். இவர்கள் பல கிறிஸ்தவ ஊழிய பெயர்களை (உ.தா. நித்திய சுவிசேஷ ஊழியங்கள், பெரேயா வேத ஆராய்ச்சி மையம், எக்ளிஷியா, காஸ்பல் சொசைட்டி …) வைத்துக்கொண்டு வருவார்கள். இவர்களின் ஊழிய பெயர்கள் கிறிஸ்தவ பெயர்கள் போல இருக்கிறதே என்று நம்பி, ஏமாந்து போகவேண்டாம்.

கீழ்க்கண்ட 5 கேள்விகளை நீங்களாகவே கேட்டு பாருங்கள். இவர்களின் போலி முகத்திரை கிழியும்

1) தேவனின் திரித்துவ தன்மையை (TRINITY/TRIUNITY) விசுவாசிக்கிறீர்களா? பதில் ‘ஆம்’ என்றால்பிதா மட்டும் தேவனா? (GOD) அல்லது இயேசுவும் தேவனா(god) ?

2) இயேசு கிறிஸ்து தேவகுமாரனா? பதில் ‘ஆம்’ என்றால் இயேசு கிறிஸ்து பிதாவுக்கு சமமானவரா?

3) இயேசு கிறிஸ்து மிகாவேல் தூதனா(angel)?

4) பரிசுத்த ஆவியானவரை ஆவியானவர் என்ற நபராக சொல்வீர்களா? அல்லது ஆவி என்று சொல்வீர்களா?ஆவியானவர் என்பது ஆவி மட்டுமே என்றால் அவர் கடவுளா? அல்லது வெறும் சக்தி (power) தானா?.

5)நரகம் என்று ஒன்று இருக்கிறதா?நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் நேரடியாக ஆம் அல்லது இல்லை என்று பதிலை மட்டுமே சொல்ல சொல்லுங்கள்.

இவர்கள் பல விதமாக பதில்களை கூறி மழுப்புவார்கள், தங்களது கூட்டத்திற்கு வந்து பதிலை தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி அழைப்பார்கள்… இவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்…. நீங்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் என்ன நடக்கும்…? இவர்களை குறித்து கவனமாக இல்லாவிடில் கிறிஸ்தவர்கள் வேத விசுவாசத்தை விட்டு, இரட்சிப்பை இழந்து, நரகம் செல்வது நிச்சயம். நீங்கள் செய்யவேண்டியது என்ன?

(இதை அதிகமாக எல்லா கிறிஸ்தவ குழுவில் அறியப்பட பகிரவும். இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் வழிவிலகி போகாமல் காப்போம்.) அன்பான ஊழியர்கள் , முதிர்ந்த கிறிஸ்தவ விசுவாசிகள் இவர்களின் வஞ்சகங்களை குறித்து எல்லா கிறிஸ்தவர்களுக்கு எச்சரியுங்கள்.


Share this page with friends