நடிகை கரீனா கபூர் மீது கிறிஸ்தவர்கள் வழக்கு.!! Kapoor. Khan’s Pregnancy Bible.

Share this page with friends

09-Aug-2021

சமீபத்தில் புதிதாக ஒரு குழந்தையை பெற்றெடுத்த பிரபல இந்தி பட நடிகை கரீனா கபூர் கான் தன்னுடைய பிரசவ கால அனுபவத்தை மற்ற பெண்களுக்கு அறிவிக்கும் பொருட்டு கரீனா கபூர் பிரகின்சி பைபிள் என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிட உள்ளார்.

பிரபல ஊடகங்களில் அவர்கள் விளம்பரம் கொடுத்து அதற்கான இந்த போட்டோவை வெளியிட்டார்.

இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அல்பா ஒமேகா கிறிஸ்டியன் மகாசங்கம் என்ற அமைப்பின் தலைவர் ஆஷிஸ் சின்டே, இந்த புத்தகத்தின் தலைப்பு கிறிஸ்தவர்களின் வேத புத்தகத்தை கொச்சைப்படுத்துவது போல் இருப்பதால் இது கிறிஸ்தவர்களின் மனதை புண்படுத்தி விடும் என்ற நோக்கில் இந்த தலைப்பை தடை செய்யும் பொருட்டு மும்பையில் உள்ள சிவாஜி நகர் போலீஸ் ஸ்டேஷன் பிடு என்ற இடத்தில் இவர் மீது வழக்கு பதிவு செய்தனர் ஐபிசி 295 ஏ பதிவு செய்ய வேண்டினர்.

ஆனால் அந்தப் பகுதி காவல்துறை அதிகாரிகளோ இந்த நிகழ்வு இந்த பகுதியில் நடக்க வில்லை எனவே இதை இங்கு பதிவு செய்ய முடியாது என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தனர்.


Share this page with friends