கிறிஸ்துமஸ் உள்ளூர் விடுமுறை; மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

16, டிசம்பர் 2020
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி அனைவருக்கும் உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும். இது அரசு விடுமுறையாக தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் கிறிஸ்துவர்கள் அதிகமாக வாழும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருநாள் முன்னதாகவே கொண்டாட்டங்கள் களைகட்டும். இதையொட்டி மேலும் ஒருநாள் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டும் டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்படும்.
நன்றி: சமயம்