பிரச்சினைக்கு வன்முறை தீர்வல்ல என்பதை உள்நாட்டு யுத்தம் புலப்படுத்துகிறது: இலங்கை திருச்சபை

Share this page with friends

Colombo (News 1st) பிரச்சினைக்கான தீர்வு வன்முறை அல்லவென இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தினூடாக புலப்படுவதாக இலங்கை திருச்சபை பேராயர்கள் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு யுத்தத்தின் வருடாந்த நினைவு தினம் தொடர்பில் இலங்கை திருச்சபையினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நடவடிக்கைகளின் போது உயிர்நீத்த அனைவருக்காகவும் காணாமல் போனவர்களுக்காகவும் உடல் மற்றும் உள ரீதியாக பாதிக்கப்பட்டோருக்கும் தடுப்புக்காவலில் உள்ளவர்களுக்காகவும் தாம் பிரார்த்திப்பதாக இலங்கை திருச்சபை பேராயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுதந்திரத்தின் உயர்ந்த குறிக்கோள்களை நிலைநிறுத்த வேண்டுமென்பதனையும் சமத்துவமும் நீதியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்பதனையும் யுத்தத்தின் கடைசி நாட்கள் உணர்த்துவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன், பிரச்சினை எந்த கோணத்தில் வந்தாலும் அதற்கு வன்முறை தீர்வாக அமையாது என்பதையும் உள்நாட்டு யுத்தம் புலப்படுத்துவதாக இலங்கை திருச்சபை பேராயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டில் புரையோடிப்போயுள்ள குரோதம், பகைமை நீங்க உறுதியாக செயற்பட வேண்டுமெனவும் பாரபட்சம் நீங்கி அர்ப்பணிப்போடும் திடசங்கற்பத்துடனும் நீதியை நிலைநாட்ட செயற்பட வேண்டுமெனவும் இலங்கை திருச்சபை பேராயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மக்கள் அதிகம் வாசித்தவை:

கணவன் மனைவி இருவருக்குமே சம உரிமை - குடும்ப கதை
சிறுபான்மை மக்களை ஏமாற்றி அரசு வேலை வாங்கி தருவதாக பிஜேபி பிரமுகர் மோசடி. கைது செய்ய கோரி நெல்லையில்...
இன்று நான் ஒரு யூதனை உன்னிடத்திற்கு அனுப்ப போகிறேன்
ஆமானின் வீழ்ச்சிக்கு காரணங்கள் (அல்லது) ஆமானிடம் காணப்பட்ட கெட்ட / தீய சுபாவங்கள்
மானுடத்துக்கு ரத்தம் சிந்திய மானுடன் பிறந்தநாள்: கவிஞர் வைரமுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து
அமெரிக்கா: தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு - சமய போதகர் மரணம், சிலர் காயம்
அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் கிறிஸ்தவ வேட்பாளர்கள் போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் உலக தமி...
லாக் டவுண் முடிந்து சபை கூடும் போது போதகர்கள் கவனிக்க வேண்டியது.
சிறப்பாக ஜெபிக்க நான்கு வழிகள்
தள்ளாத தேவன்

Share this page with friends