பாம்பை போல புத்திசாலி & புறாவைப் போல அப்பாவி

Share this page with friends

பாம்பை போல புத்திசாலி & புறாவைப் போல அப்பாவி

“ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன், ஆகையால், சர்ப்பங்களைப்போலவினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்” (மத்தேயு 10:16). இந்த வசனத்தின் மூன்று கூறுகள்: ஒரு ஆணை, ஒரு ஆபத்து மற்றும் ஆபத்தை கையாள ஒரு அறிவுறுத்தல்.

1) ஆணை:
பணி செய்வதற்காக தேவன் தனது சார்பாக, பிரதிநிதிகளாக அல்லது தூதர்களாக நம்மை அனுப்புகிறார். சி.எச். ஸ்பர்ஜன், தேவனுடைய முதன்மை உத்தியை எழுதுகிறார்: அதாவது; ஓநாய்களைத் தாக்க தேவன் ஆடுகளை அனுப்புகிறாரா? ஆனால் இயற்கையாகவே ஓநாய்களை விட எப்போதும் ஆடுகள் அதிகம் இருப்பதை இந்த உலகம் நமக்குக் கற்பிக்கிறது என்றும் அவர் எழுதுகிறார். ஆம், உலகளவில் நூறு கோடி (ஒரு பில்லியன்) ஆடுகளும் சுமார் 3 முதல் 6 லட்சம் ஓநாய்களும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஓநாய்கள் மூர்க்கமானவை, ஆனால் இன்னும் அவற்றின் தொகை குறைவாக தான் உள்ளது.

2) ஆபத்து:
ஆடுகளின் சூழலே ஆபத்தானது. முதலாவதாக, தத்ரூபமாகவோ அல்லது அதன் சுபாவமோ எவ்வித காரணமும் (முகாந்திரமின்றி) இன்றி ஓநாய்கள் ஆடுகளை பகைக்கின்றது (யோவான் 15:25). இரண்டாவதாக, ஓநாய்கள் வேண்டுமென்றே பகைக்கின்றது, காரணம்; தான் உயிர் வாழ அது வேற ஆட்டை கொன்று புசிக்க வேண்டியுள்ளது.

3) புறா போன்ற தேர்ச்சி:
பல முறை, கிறிஸ்தவர்கள்; “பாம்புகளைப் போல அப்பாவிகளாகவும், புறாக்களைப் போல ஞானமாகவும் நடந்துகொள்கிறார்களோ?!” பொதுவாகவே புறா ஒரு அசுத்தமற்ற உயிரினம் மற்றும் பலி செலுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டது (லேவியராகமம் 14:22). ஐக்கிய நாடுகள் மட்டுமின்றி கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்திலுமே, அமைதியின் அடையாளமாக புறாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. பரிசுத்த ஆவியின் அடையாளமாகவும் புறா பயன்படுத்தப்படுகிறது (லூக்கா 3:22). புறா அதன் அப்பாவித்தனத்திற்கு பெயர் பெற்றது. கிறிஸ்தவர்களாகிய நாம் பதிலுக்குப்பதில், பழிவாங்குதல், கசப்பு, தணியாச்சினம், மன்னிக்காமை போன்ற சோதனைகளில் விழுந்துவிடக் கூடாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பதிலடி கொடுக்கவோ, சபிக்கவோ, பழிவாங்கவோ இடமளிக்காமல் அதற்கு பதிலாக சிலுவையிலிருந்து மன்னிப்பைத் தேர்ந்தெடுத்தார்.

4) பாம்பை போன்ற தேர்ச்சி:
சாத்தான் ஒரு பாம்பாக மாறுவேடமிட்டு ஏமாற்ற ஒரு தந்திரத்தை பயன்படுத்தினான். எனவே, பாம்பு நுட்பமானதாகவும், வஞ்சகமுள்ளதாகவும், சாதுரியமானதாகவும் கருதப்படுகிறது (ஆதியாகமம் 3: 1). ஆனால் வஞ்சித்தது சாத்தான், பாம்பு அல்ல என்று கருதுபவர்கள் சிலர் இருக்கிறார்கள். மற்ற விலங்குகளைப் போலவே பாம்பும் ஒரு உயிரினம் மட்டுமே. பல வகையான ஞானங்கள் உள்ளன:

இயற்கை ஞானம், புனித ஞானம் மற்றும் மூலோபாய ஞானம். சர்ப்பத்தின் தகவமைப்பு, நெகிழ்வுத்தன்மை, சூழ்ச்சி, எளிதில் நகரும்தன்மை மற்றும் உயிர்வாழும் திறன் ஆகியவை எடுத்துக்காட்டுகள். அவைகள் எல்லா கண்டங்களிலும் வாழ ஆக்கத்திறனையும் மற்றும் மதிநுட்பத்தையும் பயன்படுத்துகின்றன.

நமக்காக அமைக்கப்பட்ட பொறி அல்லது சூழ்ச்சியை நாம் தவிர்க்க வேண்டும். குற்றம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் ஊழியம் செய்யுங்கள்.

நான் பாம்பைப் போல மதிநுட்பமாகவும், புறாவைப் போல வஞ்சகமற்றும் இருக்கிறேனா?

ஜேஎன்மனோகரன்
உயிரூட்டும்மனவெளிச்சம்


Share this page with friends