தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி வழங்கப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

Share this page with friends

தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி வழங்கப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி வழங்கப்படுகிறது.இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது

தேவாலயம் சீரமைப்பு

தமிழகத்தில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளை மேற்கொள்வதற்கு நடப்பாண்டில் (2021-2022) நிதியுதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து எந்த வித நிதியுதவியும் பெற்றிருத்தல் கூடாது. இது தொடர்பாக சான்றிதழ் அளிக்க வேண்டும்

.விண்ணப்பிக்கலாம்

சீரமைப்பு பணிக்காக ஒருமுறை நிதியுதவி அளிக்கப்பட்ட தேவாலயத்துக்கு மறுமுறை நிதியுதவி 5 ஆண்டுகளுக்கு பின்னரே வழங்கப்படும். விண்ணப்ப படிவத்தை உரிய சான்றிதழ் மற்றும் அனைத்து ஆவணங்களுடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ் www.bcmw@gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டு உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு விண்ணப்பங்களை பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்கள் ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல ஆணையருக்கு நிதியுதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதியுதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னனு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பதிவு: நவம்பர் 29,  2021 தூத்துக்குடி:

ThinaThanthi news

மக்கள் அதிகம் வாசித்தவை:

கிறிஸ்துமஸ் பண்டிகை - தலைவர்கள் வாழ்த்து
உலக தமிழ் கிறிஸ்தவர்கள் சம்மேளனம் சார்பில் நெல்லையில் தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் தினம் சிறப்பாக ...
மதுபான கடைகளினால் இவ்வளவு ஆபத்தா? உஷாருடன் ஜெபிக்க அறைகூவல்
சாத்தான் ஷீக்கள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
கிறிஸ்தவ ஆலயங்களில் ஆன்லைன் மூலம் பிரார்த்தனை
வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள்
ஜெபக்கூடுகையில் நுழைந்து தாக்குதல்; கிறிஸ்தவ கர்ப்பிணி பெண்ணின் கரு கலைந்து குழந்தை பலி
தமிழ்நாட்டின் கல்விக்கு கிறிஸ்தவம்தான் - பழனிசாமி கோவையில் புகழுரை!
முஸ்லிம், கிறிஸ்தவ சங்கங்கள் ரூ. 40 லட்சம் நிதியுதவி
இஸ்ரேல் நாட்டில் இருந்து 1,300 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியா வருகை

Share this page with friends