ஆன்லைன் வகுப்பை தடை செய்ய கோரி நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பில் தேசிய குழந்தைகள் ஆணையத்திடம் புகார்.

Share this page with friends

நேஷனல் கிறிஸ்டியன் கவுன்சில் சார்பில் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் NCC ஜெபசிங் அவர்கள் கடந்த 3.8.20 அன்று தேசிய குழந்தைகள்  ஆணையத்தில் தமிழ்நாட்டில் ஆன்லைன் வகுப்புகளால் குழந்தைகளின் கண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஏழை எளிய பெற்றோர்களால்  ஆன்ட்ராய்டு கைப்பேசி வாங்க முடியாத சூழலில் பலர் குடும்பங்கள் உள்ளதாலும் ஆன்லைன் வகுப்புகளை தடை செய்ய தேசிய குழந்தைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் 25.8.20 அன்று தமிழ்நாடு மாநில கல்வித்துறை முதன்மை செயலாளர் உடனடியாக மனு மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து தேசிய குழந்தைகள் ஆணையத்தில் இருந்து கடிதம் அனுப்பியுள்ளார்கள். நன்றி


Share this page with friends