வேதாகம பிரசங்க குறிப்புகள் முடிவு

Share this page with friends

வேதாகம பிரசங்க குறிப்புகள்: முடிவு

அவர்கள் ஞானமடைந்து இதை உணர்ந்து தங்கள் முடிவைச் சிந்தித்துக் கொண்டால் நலமாயிருக்கும் என்றார். உபாக : 32 : 29

ஒரு மனிதனின் முடிவு எப்படியிருக்கவேண்டும் என்பதை நாம் சிந்தித்து வாழவேண்டும் என்று வேதம் நமக்கு கற்றுத் தருகிறது. சிலர் தங்கள் முடிவை பாராட்டும்படி வாழ்கிறார்கள். ஒரு சிலரது முடிவு வேதனையளிக்கிற முடிவாய் இருக்கிறது. நிச்சயமாகவே எல்லாருக்கும் முடிவு உண்டு. வருடத்தின் முடிவுக்குள் வந்திருக்கிறோம். இந்த குறிப்பில் முடிவு என்ற வார்த்தையை முக்கியப் படுத்தி எப்படிப்பட்ட முடிவு வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை சிந்திக்கலாம்.

  1. இளைப்பாறும் முடிவு. செய்து முடித்தோம் என்ற நிச்சயம்.

தேவன் தாம் செய்த கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி தாம் உண்டாக்கின தம்முடைய கிரியை களையெல்லாம் முடித்த பின்பு ஏழாம் நாளிலே ஒய்ந்திருந்தார். ஆதி : 2 : 2

  1. வெற்றியுள்ள முடிவு. ஆயுத்தமுள்ள ஒட்டும்

நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஒட்டத் தை முடித்தேன் விசுவாசத்தைக் காத்து கொண்டேன். 2 தீமோ : 4 : 7

  1. நன்மையான முடிவு விட்டுக் கொடுத்து வாழ்தல்

நீங்கள் எனக்கு தீமை செய்ய நினைத்தீர்கள். தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு அதை நன்மையாக முடியப்பண்ணினார் ஆதி : 50 : 20

  1. சமாதான முடிவு உத்தமமாய் செம்மையாய் வாழ்தல்.

நீ உத்தமனை நோக்கி செம்மையானவனைப் பார்த்திரு, அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம். சங் : 37 : 37

  1. மகிமையான முடிவு ஆலோசனை பெற்று வாழ்தல்.

உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர் சங் : 73 : 24

  1. சம்பூர்ண முடிவு கர்த்தரிடம் தெரியப் படுத்தி வாழ்தல்

உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும் உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும் யோபு : 8 : 7

  1. மாம்சத்தின் முடிவு ஆவியின்படி நடத்தல்.

ஆவியானாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுப் பெற போகிறீர்களோ? நீங்கள் இத்தனைபுத்தியீனரா? கலா : 3 : 3

இந்தக் குறிப்பில் முடிவு என்ற வார்த்தையை முக்கியப் படுத்தி சில குறிப்புகளை கவனித்தோம். நமது முடிவு எப்படியெல்லாம் இருக்கவேண்டுமென்பதையும் கவனித்தோம். நமது முடிவு எல்லோருக்கும் பிரயோஜனமுள்ள முடிவாக இருக்குமானால் அது தான் செம்மையான முடிவு.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur


Share this page with friends