உன் கணக்கை ஒப்புவி
உன் கணக்கை ஒப்புவி
1. உன்னுடைய சபையில் எவ்வளவு ஏழை ஜனங்கள் இருக்கிறார்கள்?
2. எத்தனை முறை அவர்கள் வீட்டுக்கு சென்றிருக்கிறாய்?
3. எத்தனை முறை அவர்களுடன் கை குலுக்கியிருக்கிறாய்?
3. அவர்களில் தசமபாகம் செலுத்தும் விசுவாசிகளுடைய பொருளாதாரம் முன்னேறியிருக்கிறதா?
4. அவர்களுடைய பொருளாதார முன்னேற்றத்திற்காக ஏதாகிலும் செய்திருக்கிறாயா?
5. அவர்களில் எத்தனைபேர் உண்மையாக தசமபாகம் செலுத்திவிட்டு கிழிந்த பாயில் படுத்திருக்கிறார்கள் என்று உனக்குத்தெரியுமா?
6. தசமபாகம் செலுத்தியும் எத்தனைபேருடைய பிள்ளைகள் படிப்பு கட்டணம் செலுத்த இயலாமல் வீட்டில் இருக்கிறார்கள் என்று உனக்கு தெரியுமா?
7. அவர்களில் எத்தனைபேருடைய பிள்ளைகளுடைய திருமணம் பணம் இல்லாததால் தடை பட்டிருக்கிறது என தெரியுமா?
8. உனது சபையாருக்கு உணவும் உடையும் உறுதி செய்ய முடிந்ததா?
9. எத்தனைபேர் மிக கடனில் இருக்கிறார்கள் என்று தெரியுமா?
11. பல வருடங்களாக ஆலயத்துக்கு வந்தும் ஆவிக்குரிய எந்த முன்னேற்றமும் அடையாமல்
எத்தனைபேர் இருக்கிறார்கள் என்றுதெரியுமா?
12. ஏழை ஜனங்களின் முன்னேற்றத்திற்கென ஏதாகிலும் திட்டங்கள் உள்ளதா?
13. அவர்களை விசாரிப்பதற்கென்று ஏதாகிலும் குழு உள்ளதா?
14. எளியவர்களுக்கு ஆராதனை முடிந்து உணவு வழங்கும் திட்டம் உண்டா?
14. விசேஷித்த தினங்களுக்கு அவர்களுக்கு புத்தாடை வழங்கினாயா?
15. லாக்டவுன் காலங்களில் அவர்களுக்கு உணவுப்பொருள் வழங்கப்பட்டதா?
16. எளியவர்கள் வறுமையிலும் கொடுத்த காணிக்கை தசமபாகங் களை எதற்காக எப்படி செலவிட்டாய்?
16. உன்னுடைய வாழ்க்கைத்தரம் உயர்ந்திருந்தது போல் உனது சபையாருடைய வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறதா?
18. உன்னை சந்திக்க விரும்பும் விசுவாசிகள் எந்த தடையும் தாமதமுமின்றி சந்திக்க முடிகிறதா?
19. உன்னுடைய சபையில் ஏழை பணக்காரன் யாவரும் சமமாக பாவிக்கப்படுகிறார்களா?
20. கடைசியாக எப்போது ஜாதி பார்க்கக்கூடாது என்று பேசினாய்?
21. கடைசியாக எப்போது ஆண்டவர் வருகையைப்பற்றி பேசினாய்?
22. ஜனங்களின் ஆவிக்குரிய எதார்த்த ஆவிக்குரிய நிலையை அறிய எதாகிலும் முயற்சி மேற்கொண்டாயா?
23. உனது சபையில் எத்தனைபேர் வருகைக்கு ஆயத்தமாயிருக்கிறார்கள்
24. உன்னுடைய சபையின் ஆவிக்குரிய நிலமை எப்படி இருக்கிறது?
25. உனது குடும்பம் சபைக்கு மாதிரியாக இருக்கிறதா?
– பகிர்வு செய்தி