இயேசுவை சந்தித்த மனிதனின் வாழ்வில் உண்டாகும் விளைவுகள்.

Share this page with friends

பிரசங்க குறிப்பு

இயேசு அவனை நோக்கி எழுந்திரு , உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார் (யோவா : 5 : 8)

பெதஸ்தா குளத்தருகே 38 ஆண்டுகளாக நோயுற்று படுத்திருந்த மனிதனைக் குறித்துக் இந்தக் குறிப்பில் சிந்திக்கப்போகிறோம். இயேசு சந்தித்த மனிதனின் வாழ்வில் நிகழ்ந்ததை இதில் கவனிக்கலாம்.

வேத பாடம்: யோவா : 5 : 8 — 15

1. இயேசு சந்தித்த அந்த மனிதன் பூரண மனிதனானான்

” உடனே அந்த மனிதன் சொஸ்தமாகி… (யோவா : 5 : 8) இந்த மனிதன் பூரண மனிதனானான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டா யிருக்கவும், அது பரிபூரண படவும் வந்தேன் என்றார். (யோவா : 10 : 10)

38 வருடமாக முடியாத வியாதி இயேசுவை சந்தித்துப் பிறகு அவன் முற்றிலும் பூரணமுள்ளவனாக மாறினான்.

2. இயேசுவை சந்தித்த அந்த மனிதனின் நடை மாறியது.

” தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்துப்போனான்”.. (யோவா : 5 : 9)

38 வருடமாக நடக்க முடியாதவன் இயேசுவை சந்தித்துப் பிறகு நடந்து போனான்.

” என் பிள்ளைகள் சத்தியத்தில் நடக்கிறார்கள் என்று நான் கேள்விபடுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கில்லை ” (3 யோவா : 1 : 4)

3. இயேசுவை சந்தித்த அந்த மனிதனின் வார்த்தை

அவன் அவர்களுக்கு பிரதியுத்தமாக என்னை சொஸ்தமாக்கினவர் உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட வென்று எனக்குச் சொன்னார் என்றான் (யோவா : 5 : 11)

சில யூதர்கள் அவனைப் பார்த்து சொன்னார்கள் ” இது ஓய்வுநாளா
யிருக்கிறதே, படுக்கை
ரை எடுத்துக் கொண்டு
போகிறது உனக்கு
நியாயமல்ல என்றார்
கள். யோவா 5 : 10

நீங்கள் யார் பேச்சுக்கு
கீழ்ப்படிய போகிறீர்கள்
அந்த மனிதன் இயேசு
வின் பேச்சுக்கு கீழ்
படிந்து படுக்கையை
எடுத்துக்கொண்டு
நடந்துபோனான்.

  1. இயேசுவை சந்தித்த
    அந்த மனிதனின்
    ஆராதனை

” அதற்கு பின்பு இயேசு
அவனைத் தேவாலயத்
திலே கண்டு ” ..
யோவா : 5 : 14

38 வருடத்திற்குபின்
அவன் ஆலயத்திற்கு
சென்றான். ஏன் ?
இயேசுவை ஆராதிக்க
வும் , இயேசுவுக்கு
நன்றி சொல்லவும்
அவன் ஆலயத்திற்கு
சென்றான். இந்த
மனிதனிடத்திலிருந்து
நாம் இந்த பண்பை
கற்றுக்கொள்ள
வேண்டும்.

  1. இயேசு சந்தித்த அந்த
    மனிதனின் சாட்சி

” அந்த மனுஷன் போய்,
தன்னை சொந்தமாக்கி
னவர் இயேசு என்று
யூதர்களுக்கு அறிவித்
தான். யோவா : 5 : 15

அன்று யூதர்கள் அவனைப் பார்த்து
ஓய்வு நாளில் அப்படி
செய்யக்கூடாது என்று
சொன்னார்கள். ஆனால்
இந்த மனிதன் யூதர்கள்
மத்தியில் என்னை
சொஸ்தமாக்கினவர்
இயேசு தான் என்று
தைரியமாக சாட்சிக்
கொடுத்தான். இதுதான்
உயர்ந்த சாட்சி. இயேவின் நாமத்தை
மகிமைப்படுத்தினான்.

இயேசு சந்தித்த இந்த
மனிதனிடத்தில் நாம்
கற்றுக்கொள்ள
வேண்டியது இவைகள்.

நீங்கள் இயேசுவை
சந்தித்த பின்பு உங்கள்
ஆவி ஆத்மா சரீரம்
பூரணமாகும். உங்களது
ஆவிக்குரிய நடை
மாறும். இயேசுவின்
வார்த்தைகள் உங்கள்
வாழ்வில் நிறைவேறும்.
அவரை அனுதினமும்
அவரை ஆராதிப்பீர்கள்
இயேசுவைக் குறித்து
தைரியமாக மற்றவர்
களுக்கு சாட்சி
சொல்லுவீர்கள்.

இயேசு சந்தித்த அந்த
மனிதன் 38 வருடம்
முடியாததை எல்லாம்
செய்தான். இதுதான்
இயேசு சந்தித்த
மனிதனின் வாழ்வின் விளைவுகள்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends