குடியிருப்பு வீட்டை மத வழிபாட்டு தலமாக மாற்ற அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

Share this page with friends

குடியிருப்பு வீட்டை மத வழிபாட்டு தலமாக மாற்ற அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

குடியிருப்பு வீட்டை மத வழிபாட்டு தலமாகவோ பிரச்சாரம் செய்யும் இடமாகவோ மாற்ற அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சனி 13, ஆகஸ்ட் 2022 5:33:36 PM (IST)

குமரி மாவட்டம், திங்கள் சந்தையை சேர்ந்த போதகர் மரியா ஆரோக்கியத்திற்கு சொந்தமான தனது குடியிருப்பு கட்டிடத்தில் கிறிஸ்துவ மத போதனை மற்றும் ஞாயிறு ஆராதனை நடத்தி வந்துள்ளார். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு வீட்டில் மதப் பிரார்த்தனை நடத்த தடை உத்தரவு பிறப்பித்தார். இந்த தடை உத்தரவை ரத்து செய்து தனது குடியிருப்பு வீட்டில் கிறிஸ்துவ மத போதனை நடத்த அனுமதிக்க உத்தரவிடக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை நீதிபதி விஜயகுமார் விசாரணை செய்து பிறப்பித்த உத்தரவில் “மனுதாரர் 1996 முதல் 2009 வரை தனது குடியிருப்பு வீட்டை மத வழிபாட்டிற்கு பயன்படுத்தி உள்ளார். இதில் அப்பகுதியைச் சேர்ந்த 80% மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் அடிப்படையில் குடியிருப்பு வீட்டை மத பிரச்சாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசின் விதிமுறைப்படி குடியிருப்பு வீட்டை மத பிரச்சாரம் அல்லது வழிபாடு நடைபெறும் இடமாக மாற்ற அனுமதி இல்லை. அவ்வாறு அனுமதி பெற வேண்டுமெனில் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் தான் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க குடியிருப்பு வீட்டில் மதப்பிரச்சாரம், மற்றும் வழிபாடுகள் (ஆராதனைகள்) செய்யக்கூடாது என தடைவிதித்து உள்ளார்.

மேலும் மனுதாரர் வீட்டிற்கு அருகிலேயே 200 மீட்டர் தூரத்தில் இரண்டு கிறிஸ்துவ ஆலயங்கள் வழிபாட்டுக்கு உள்ளது. 300 மீட்டர் தூரத்தில் இந்து வழிபாட்டுத் தலமும் உள்ளது. இதன் அடிப்படையில் சட்ட ஒழுங்கையும் அமைதியை பாதுகாப்பது மாவட்ட ஆட்சியரின் கடமை எனவே மாவட்ட ஆட்சியரின் உத்தரவை நீதிமன்றம் தடை விதிக்க வேண்டியது இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறிப்பு: கிறிஸ்தவ வீடுகளில் குடியிருப்போர் தங்கள் நண்பர்கள் உறவினர்களை அழைத்து, ஜெபக்கூட்டங்கள் நடத்துவது இன்றைக்கு நேற்று ஆரம்பித்த வழக்கம் அல்ல. ஆதிதிருச்சபை உருவான காலம் முதல் வீடுகள் தோறும் கூடி ஜெபிக்கும் வழக்கமும், வேதத்தை கற்றுக்கொடுக்கும் பழக்கமும் தலைமுறை தலைமுறையாக இருந்துள்ளது. மேலும் இயேசு கிறிஸ்துவும் அக்கால வழக்கப்படி வீடுகளில் சென்று உபதேசித்திருக்கிறார். வீடுகளில் அற்புதங்களை நடப்பித்திருக்கிறார். இந்த வழக்கம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இப்படியிருக்க திடீரென நீதிமன்றம் கொடுத்த உத்தரவு குறித்த கூடுதல் தெளிவு அவசியம் தேவை என்பதே ஒவ்வொருவரின் வேண்டுகோளாக உள்ளது.

சர்ச்சைக்குரிய விளம்பர பலகையை அகற்ற மாநில சிறுபான்மை ஆணையத்தில் புகார்!

ஜெபக்கூட்டம் நடத்த விடாமல் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர் , தாசில்தாருக்கு அபராதம் மனித உரிமை ஆணையம் உத்தரவு

மக்கள் அதிகம் வாசித்தவை:

கொரோனா காரணமாக ஸ்டார்கள்- கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனை 60 சதவீதம் சரிவு
நாம் வெட்கப்பட்டு போவதில்லை
முழு நேர ஊழியர்கள் அரசியல் கட்சிகளில் பொறுப்பு வகிக்கலாமா?
தோட்டத்தை கெடுக்கும் சிறுநரியும் குழிநரியும் - பிரசங்க குறிப்புகள்
சுத்தம்.. Pure
நெல்லையில் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் குறித்த கருத்தரங்கு
நாளை சாம்பல் புதன் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்குகிறது
கிறிஸ்தவம் வெள்ளைக்கார மதம் அல்ல - நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் முதல் நூற்றாண்டிலே கிறிஸ்தவம் இந்த...
கிறிஸ்துமஸ்: உயிர்ப்பின் அடையாளமான கிறிஸ்துமஸ் மரம்
இலங்கையில் பணியாற்றிவந்த அமெரிக்க மிஷனெரி தனது 94 வயதில் காலமாகியுள்ளார். இவர் தான் இலங்கைக்கு வந்த ...

Share this page with friends