கொரோனா-போதகர்கள் கவனத்திற்கு

Share this page with friends

போதகர்கள் கவனத்திற்கு…

இப்படிப்பட்ட காலகட்டங்களில் அனைத்து போதகர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த இரண்டாவது தொற்று மற்றும் வைரஸால் பல போதகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நம் ஜெபங்களில் அவர்களை நினைப்பதோடு மட்டுமல்லாமல், நாமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாய் இருக்கிறது.

ஆகவே…

  1. பொது இடங்களில், குறிப்பாக தேவாலயத்தில் நீங்கள் முக கவசம் அணிவதை உறுதி செய்யுங்கள்.
  2. தயவுசெய்து ஒரு சிறிய சானிட்டைசரை உங்கள் சட்டைப் பையில் வைத்து அடிக்கடி கைகளைக் கழுவுங்கள்.
  3. தேவாலயத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும்.
  4. தயவுசெய்து யார் மீதும் கை வைத்து ஜெபிக்க வேண்டாம். விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்.
  5. இப்படிப்பட்ட நேரங்களில் விசுவாசிகள் வீடுகளை சந்திப்பதை தவிர்க்கவும். தொலைபேசி மூலம் நீங்கள் அவர்களை விசாரித்து ஜெபிக்கலாம்.
  6. திருமணங்களில் 50 பேரை மட்டுமே பங்கேற்க அனுமதியுங்கள். அதில் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை உறுதி செய்யுங்கள். கூட்டம் மற்றும் நெரிசலான இடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
  7. அடக்கம் போன்றவற்றுக்கு தயவுசெய்து தூரத்தை கட்டாயப்படுத்தி கவனித்துக் கொள்ளுங்கள்.
    கோவிட் – 19 நோயாளிகளாக இருந்தால் PPT KITS பயன்படுத்துங்கள். வயதான போதகராக இருந்தால், இளம் போதகர்களிடம் உதவுமாறு கேளுங்கள்.
  8. உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சல் அல்லது இருமல் ஏற்பட்டால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும். முன்கூட்டியே கண்டறிதல் என்பது உயிர்காக்கும். உங்கள் உடல் பலவீனம் தாங்கமுடியாத அளவிற்கு போகும்வரை மற்றவர்களிடம் உதவி கேட்க காத்திருக்க வேண்டாம்.
  9. மூச்சுப் பயிற்சி, நீராவி (வேவு) பிடித்தல், குறுமிளகு சேர்த்துக் கொள்ளுதல், எலுமிச்சை, இஞ்சி மற்றும் மஞ்சள் போன்ற தெய்வீக தன்மை வாய்ந்த ஆரோக்கியமான உணவை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். குளிர் பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை தவிர்க்கவும்.
  10. எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசத்தின் கேடயத்தை பிடித்துக் கொண்டு, கர்த்தருடைய வார்த்தையிலும், இயேசுவின் இரத்தத்தின் மேலுள்ள விசுவாசத்தை கொண்டு எதிராளியை வென்று ஒருவருக்கொருவர் ஜெபத்தில் தாங்குவோம்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!

  • SPC Media

Share this page with friends