கொரோனாவின் சமத்துவம் கவிதை

Share this page with friends

வெள்ளையனும் கறுப்பினத்தானும்
பார்ப்பானும் தீண்டத்தாதவனும்
ஆண்டையும் அடிமையும்
உயர்ந்தவனும் தாழ்ந்தவனும்
தேவபாஷை பேசுபவனுயும்
நீசபாஷை பேசுபவனையும்
இந்துவும் இசுலாமியனும்
உயரமானவனும் குள்ளர்களும்
வலியவனும் பலவீனனும்
பணக்காரனும் ஏழையும்
அமெரிக்கனும் ஆப்பிரிக்கனும்
ஆணும் பெண்ணும்
படித்தவனும் படிக்காதவனும்
அனைவருமே ஓரினம்தான்
என்று உலகுக்கு உரைக்கிறது
கொரோனா வைரஸ்

மூட மனிதனே!
அதிகாரத்தை வைத்து
பணத்தை வைத்து
சாதியை வைத்து
மதத்தை வைத்து
நிறத்தை வைத்து
மொழியை வைத்து
செல்வாக்கை வைத்து
பிறரை ஆள நினைக்காதே!
அகங்கரிக்காதே!
கண்ணிற்குப் புலப்படாத
ஒரு வைரஸ் போதும்
உன்னையும் உன் இனத்தையும்
கூண்டோடு அழிக்க!


Share this page with friends