• Thursday 9 January, 2025 08:34 PM
  • Advertize
  • Aarudhal FM
ஹெர்னியா என்னும் குடலிறக்கம் உங்களுக்கு வரக்கூடாதா? இதை முதலில் செய்யுங்க

ஹெர்னியா என்னும் குடலிறக்கம் உங்களுக்கு வரக்கூடாதா? இதை முதலில் செய்யுங்க

  • 20250109
  • 0
  • 21

ஹெர்னியா என்னும் குடலிறக்கம் ஏற்படாமல் தண்ணீரை இப்படி குடிங்க!


தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதி வேகமாக செல்லும். அதனால் ஹெர்னியா ஏற்படும்

நின்று கொண்டே தண்ணீரைக் குடிக்கும் போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாட்கள் நின்றவாறு நீரைக் குடித்து வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.


சிறுநீரக பாதிப்பு
தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், அதனால் சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் அதுவே உட்கார்ந்து குடித்தால், நீரானது உடலின் அனைத்து இடங்களிலும் நுழைந்து நச்சுக்களை அடித்துக் கொண்டு சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று, நச்சுக்களை உடலில் இருந்து முறையாக வெளியேற்றிவிடும்.

ஆர்த்ரிடிஸ்
சில ஆய்வுகளில் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால், ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக சொல்கிறது. அதுவும் தண்ணீரை நின்றவாறு குடிப்பதால், அது உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இப்படியே நீண்ட நாட்கள் இப்பழக்கத்தைக் கொண்டால், நாளடைவில் அது மூட்டு வலிக்கு உட்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும்.


பொதுவாக நின்று கொண்டிருக்கும் போது சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பிக்கும். சிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்தால், இதயத் துடிப்பு அதிகமாகும், இரத்த நாளங்கள் விரியும், நரம்புகள் அதிகமாக டென்சனாகும், கல்லீரலில் இருந்து சர்க்கரை வெளியேற்றப்படுவது என்று உடலே சுறுசுறுப்புடன் வேகமாக இயங்கும். அந்நேரம் குடித்தால், நீரானது நேரடியாக சிறுநீர்ப்பையை அடைந்து வெளியேறும். ஆனால் உட்கார்ந்து இருக்கும் போது பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்து, உடல் ரிலாக்ஸ் ஆகி, செயல்பாடுகளின் வேகம் குறைந்து, நரம்புகள் அமைதியாகி, உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் நீரை அனைத்தும் மெதுவாக செரிமான மண்டலத்தில் இருந்து வெளியேற்றப்படும்.
அண்ணாந்திச் குடித்தால் காது நோய் ஏற்படுத்தும்

டம்ளரில் வாய்வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும். தண்ணீரைத் தலை அண்ணாந்திச் குடித்தால் காது நோய்களுக்கு வழிவகுக்கும். தண்ணீரை அண்ணாத்திக் குடித்ததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன.

சில குறிப்புகள்
உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற, போதிய அளவில் தண்ணீரை உட்கார்ந்து குடிக்க வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு குடித்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

காலையில் எழுந்ததும் 1-3 டம்ளர் தண்ணீர் குடிக்கவும்.

மதிய உணவுக்கு முன் 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் குடிக்கவும்.

இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் குடிக்கவும்.

டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும்.

அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும்.

வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.

நம்மில் பலரும் நின்று கொண்டு நீர் அருந்துவதும் , இடது கையால் அருந்துவதும், ஒரே மூச்சில் அவசரமாக அருந்துவதும் சர்வ சாதாரணமாகவே செய்கிறோம்.

Conclusion

இந்த கருத்து பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்

Summary

Could you have a hernia? Do this first.