கொரோனாவே ஓடிப்போ!

Share this page with friends

கொரோனாவே ஓடிப்போ!

கொரோனாவே,
நான் முடங்கிவிட்டேன்
என்றுதானே நினைத்தாய்

இல்லை இல்லை,
என்னைப் போன்றவன்
முடங்கிப் போவானோ?

பலமாய் நீ அசைத்தபோது,
என் வேர்கள் ஆழமாய்
ஊடுருவிச் சென்றதால்
வேர் பற்றியிருக்கிறேன்

யூதா வம்சத்தாரில் தப்பி
மீந்திருக்கிறவர்கள்
மறுபடியும் கீழே வேர்பற்றி
மேலே கனிகொடுப்பார்கள்
என்று ஏசாயா
2600 ஆண்டுகளுக்கு முன்பே
எழுதிவைத்திருக்கிறார்

யாக்கோபு, வேர் பற்றி
இஸ்ரவேல் பூத்துக்காய்த்து
உலகத்தைப் பலனால் நிரப்பும்
நாட்கள் வரும் என்றும்
எழுதப்பட்டிருக்கிறது

நான், விஸ்தாரமான
இந்தியாவின் விசித்திரமான விசுவாசி,
ஏனென்றால்
விசித்திர வினோதமாய் அவர்
என்னை உண்டாக்கியிருக்கிறார்

கொரோனாவே,
இது பனங்காட்டு நரி,
சலசலப்புக்கு அஞ்சாது
பணம்காட்டி என்னை
அசைக்கவும் முடியாது

என்னைப் பனை மரத்திற்கு
என் தேவன் ஒப்பிட்டிருக்கிறார்
நீதிமான் பனையைப் போல
செழித்து லீபனோனிலுள்ள
கேதுருவைப் போல வளருவான்
என்று என்னைக்குறித்து
எழுதப்பட்டிருக்கிறது.

ஏன் தெரியுமா?
நான் கறுப்பாய் இருப்பதினால்
மட்டுமல்ல. வறண்டதும்,
விடாய்த்ததும்,
தண்ணீரற்றதுமான
நிலத்திலும் என் ஆத்துமா
தேவனை நோக்கி
காத்திருப்பதினாலும்
என் மாம்சம் அவரை
வாஞ்சிப்பதினாலும்
நான் ஒரு
நனைந்த பனைமரம்தான்!

மூன்றரை வருஷங்கள்
மழை பெய்யாவிட்டாலும்
என் தலை கவிழ்ந்துபோகாது
என் இலை வாடிப்போகாது
தலை நிமிர்ந்தே நிற்பேன்

உலகமெங்கிலும் ஆலயங்களின் கதவுகளை அடைத்துவிட்டதில் உனக்கிருக்கும் அந்தரங்க மகிழ்ச்சியை அறிவேன்

ஜனங்களின்
வாழ்வாதாரங்களை
கெடுத்துவிட்டதில்
உனக்கிருக்கும் உள்ளார்ந்த
சந்தோஷம் நிலைக்காது

நூறு நாட்களையும் கடந்து
ஓடிக்கொண்டிருக்கிறேன்
என்றுதானே
பெருமிதம் கொள்கிறாய்

இந்தப் பனைமரம்
முள்ளில் நடந்து
முப்பது ஆண்டுகளைக் கடந்து
ஜீவதண்ணீரைக் குடித்து
மகா அருமையும் மேன்மையுமான
வாக்குகளை இதயத்தில்
வைத்து வைத்திருக்கிற மா’மரம்

வீசும் காற்றிலிருந்து
தண்ணீரை வடித்தெடுக்கும்
கருவியைக் கண்டுபிடித்திருக்கிறது
இஸ்ரவேல் என்னும் தேவ தேசம்

நானோ, அவரது
பண்டசாலையிலிருந்து
புறப்பட்டுவரும் (விசுவாசக்) காற்றிலிருந்து
ஜீவதண்ணீரை வடித்து
குடித்துவருகிறேன்

இதற்காகக் கருவியை
ஏற்படுத்தவில்லை,
ஒரு அருவியை உண்டாக்கிவிட்டார்

அந்த யாக்கோபின்
கிணற்றண்டையில்
அந்தப் பாவியான ஸ்திரீக்கு
இலவசமாய் அந்த அருவியை
அறிமுகம் பண்ணின விஷயம்
உனக்கு தெரியுமா?
அதற்குப் பின் அந்த அருவி ஊருக்குள்ளே
பாய்ந்து சென்றது உனக்கு தெரியுமா?

கொரோனாவே உனக்குக் கெடுக்கத் தெரியும் கொடுக்கத் தெரியாது

கொரோனவே, P’சாசே
மனுஷ கொலைபாதகனே
உன்னைப்பார்த்து
உறுதியாகச் சொல்லுகிறேன்
பனைமரம் ஒருநாளும்
பயந்து விடாது, படுத்தும்விடாது

சாய்ந்து நின்றாலும்,
விழாமல் நிற்கும்
முட்டுக்கொடுப்பதற்கு
அது என்ன வாழை மரமா?

உனக்குச் சாவுமணி அடிக்க
உலகமெங்கிலும்
விஞ்ஞானிகளும்
விசுவாசிகளும்
மருத்துவர்களும்
திருத்துவ தூதர்களும்
எழும்பிவிட்டார்கள்

எத்தனையோ தேசங்களில்
சேதங்களையம்
சோகங்களையும்
ஏற்படுத்திவிட்டாய்
போதும், போய்விடு

எழும்புவோம்,
ஹிரோஷிமா,
நாகசாகியைப்போல,
எதுவும் எங்களை அசைக்க முடியாது

சுனாமி எட்டிப்பார்த்துத்
தொட்டுவிட்டுப்போன பூமி இது
ஆனாலும் இன்னமும்
கட்டு விட்டுப் போகவில்லை

கொஞ்சகாலம் பாடநுபவிக்கிற
பனைமர(எ)ங்களைச்
சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி,
பலப்படுத்தி, நிலைநிறுத்த
எங்களுக்கொரு நல்ல,
வல்ல தேவன் இருக்கிறார்
என்பதை
எதிர்காலமே இல்லாத
உன்னைப் பார்த்து
உரக்கச் சொல்லி
உன்னை இந்த
உலகத்தைவிட்டுத் துரத்துகிறேன்

கொரோனா என்ற கொள்ளை நோயே ஒருவழியாய் வந்தாய் ஏழு வழியாய் ஓடிப்போ திரும்பிப் பா(வ)ராதே

என் நினைவுகளைச் சுற்றி வலம்வந்த வசனங்கள்:
ஏசாயா 37:31/ ஏசாயா 27:6/ சங்கீதம் 139:15/ சங்கீதம் 92:12/ சங்கீதம் 63:1/ யாக்கோபு 5:17/ யோவான் 4:10/ சங்கீதம் 119:11/ 2 பேதுரு 1:4/ சங்கீதம் 135:7/ யோவான் 4:6,14/ 1 பேதுரு 5:10/ உபாகமம் 28:7/ .

பாஸ்டர் ஜே.இஸ்ரேல் வித்ய பிரகாஷ், ஜீவதண்ணீர் ஊழியங்கள், மதுரை -14


Corona Flee Away!!

Corona, did you think that I surrendered.
Would a person like me surrender?
Definitely No!

When you rocked me strongly, I stood strong since my roots were deep.

As it is written in Isaiah the surviving remnants of Judah will again take root below and bear fruits above (Is 37:31).

It is written that in the days to come Jacob will take root. Israel will bud and fill the world with fruits (Is 27:6).

I am a distinguished believer in this broad India, because
He had woven me in His intricate design (Ps. 139:15).

Hey Corona, I will not succumb to your threatening.
Money cannot buy me.

The Lord has compared me with the Palm Tree. The Righteous shall flourish like the Palm Tree and grow like cedar in Lebanon (Psalm 92: 12) says the Lord.

You know why I am a wet palm tree? Not just because I am black, but earnestly I seek the Lord; my soul thirsts for Him, my body longs for Him, in a dry and weary land where there is no water (Ps 63:1).

Even if it does not rain in the land for three and a half years, my head shall not bow down and my leaves shall not wither. I shall stand upright. I know the hidden happiness that you have because you have kept all the churches around globe locked.

The happiness that you have by destroying the livelihood of the common man shall not last long.

You are proud that you have survived for more than 100 days.

This strong palm tree had walked on the thorns for more than 30 years and drank the living water (John 4:10) and kept His great and precious promises in it heart (II Pet 1:4, Ps 119:11).

Israel had invented an instrument to extract water from the air.

The Bible says, He causes the clouds to rise from the ends of the earth. He sends lightning with the rain and brings the wind from His storehouses (Ps 135:7).

God did not create an instrument for this extraction, instead created a falls for this.

Do u know about this living water that Jesus introduced for free to the sinful woman near the well of Jacob. Do you that this living water had flown into the city?

And whoever drinks thewater I give him will never thirst. Indeed, the water I give him will become in him a fount of water springing up to eternal life.” (John 4:6,14)

Corona, you know to destroy but do not know to give.
Hey Corona, you Devil, destroyer of men, I strongly tell you that the Palm tree shall never fall.

It may bend but not fall. It isn’t a Banana tree that needs support. To ring your death bell the scientist, believers, doctors and the Trinity Angels have risen.

In many countries you have created destruction and Sorrow. It’s enough loss and it’s time for you to get away.

We will rise like Hiroshima and Nagasaki. Nothing shall shake us. It’s this land that the Tsumani had tried to destroy and still the land has not perished.

For us who go through tribulation for few days,there is a Lord who will perfect, confirm, strengthen and establish us (I Pet 5:10).

I say this to you who has no future and I cast you away from this world.

Hey Corona Pandemic, you came in one way and I command you to flee away in seven ways (Deut 28:7).

Never come back

Pastor J. Israel Vidhya Prakash,
Living Water Ministries, Madurai -14

Translated by:
Prof. Preethy Andrews, Chennai


Share this page with friends