கணவனோடு உடன்கட்டை ஏறி மரணம் இதனால் ராஜஸ்தனில் ஏற்பட்ட மனமாற்றம்

Share this page with friends

அநேக ஆண்டுகளுக்கு முன் இராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு சிறு பகுதியை வீரமுள்ள இந்து மன்னன் ஆண்டு வந்தான். ஒரு முகமதிய மன்னன் இவனது நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தான். இந்த இந்து மன்னனுக்கு கற்புள்ள ஒரு அழகான மனைவி இருந்தாள். அந்த அழகிய பெண்ணை தனக்கு மனைவியாக கொள்ளும் நோக்கத்திலே அந்த இச்சை நிறைந்த முகமதிய மன்னன் போர் தொடுத்து இருந்ததான். இந்து மன்னன் முகமதிய அரசனை எதிர்த்து கடும் போர் புரிந்து இறுதியில் போர்க்களத்தில் மடிந்து விட்டான்.

போரில் வெற்றி கிடைத்தவுடன் மகிழ்ச்சியுடன் முகமதிய மன்னன் அரசியை தேடி சென்றான். அரசி இருக்கக்கூடிய அந்தபுரம், பள்ளியறை எங்கும் தேடியும் அந்த அழுகுள்ள அரசியை கண்டு பிடிக்க இயலவில்லை. அப்படியே அவன் தேடி வரும் சமயத்தில் அரண்மனையின் வெளி முற்றம் ஒன்றில் கோரக்காட்சியை கண்டாள். நடந்தது என்ன தெரியுமா தனது கணவன் போர்க்களத்தில் மடிந்து விட்டான் என்று கேள்விபட்ட உடன், நெருப்பு வார்த்து, அதில் குதித்து பிடிசாம்பலாகி விட்டாள் (உடன்கட்டை ஏறுதல்) அந்த உத்தம பத்தினி. இதைக் கண்ட முகமதிய மன்னன் கண் கலங்கி இனி மரண பரியந்தம் பெண் ஆசை கொள்ள மாட்டேன், எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்க மாட்டேன் என்று தீர்மானம் செய்தான். இது கட்டுக்கதையல்ல, உண்மையாய் நடந்த சம்பவம். இராஜஸ்தானில் இன்று வரை உடன்கட்டை ஏறுதல் ஆங்காங்கு நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சி நமக்கு மாபெரும் சத்தியத்தை சுட்டிக் காட்டுவதை உணர்ந்து கொள்ளலாம். உன்னதபாட்டில் கர்த்தருக்கும் நமக்குள்ள உறவை கணவன் மனைவி உறவாகவே நாம் காண்கிறோம். இயேசுவின் இரத்தத்தால் என்று நாம் கழுவபட்டோமோ அன்று நாம் அவருக்கு சொந்தம்.

உங்களில் அவனவன் தன் தன் சரீர பாண்டத்தை பரிசுத்தமாக காத்துக் கொள்ளகடவன் (1 தெச 4:5)

கிரயத்துக்கு கொள்ளபட்டீர்களே ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் ஆவியினாலும் சரிரத்தினாலும் தேவனை மகிமைபடுத்துங்கள் (1 கொரி 6-20)


Share this page with friends