கடனாளிகள்

Share this page with friends

கடலில் மூழ்கினால் முத்து எடுக்கலாம் கடனில் மூழ்கினால் சொத்தை இழக்கலாம்” – பொன்மொழி

கடன் வாங்க மாட்டேன் என தீர்மானமாக இருப்போரையும் அதை வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்த நிலைக்கு தள்ளுகிறது இன்றைய சூழல். அதிக வருமானம் உள்ளோரும், கடன் வாங்கினால்தான் காலத்தை கடத்த முடியும் என்ற நிலை இன்றைக்கு. குறைந்த வருமானமுள்ளவர்களை குறித்து சொல்லவே வேண்டாம். வீட்டின் நிலை இப்படி என்றால், நாட்டின் நிலை – கடன்கார நாடுகளில் முதலிடத்தில் நம் நாடு. எது எப்படியோ வாங்கின கடனைத் திரும்ப செலுத்தவும், (2 இராஜா 4:7) வட்டி இல்லாமல் கடன் கொடுக்கவும் தேவ வசனம் கூறுகிறது. மட்டுமல்ல, நாம் திரும்ப செலுத்த வேண்டிய முக்கியமான ஆவிக்குரிய கடன்களையும் சுட்டி காண்பிக்கிறது.

  1. தேவ இராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தை அறிவிக்க கடனாளிகள். ரோ 1:14
  2. தேவ மக்களுக்கு உதவிட கடனாளிகள். ரோ 15:27
  3. தேவ மக்களையும் பிறனையும் நேசிக்க கடனாளிகள். ரோ 13:8
  4. தேவ வசனத்தினிமித்தம் பிறருடைய தப்பிதங்களை மன்னிக்க கடனாளிகள். மத் 6:2
  5. தேவனைப்போல் சகோதரனுக்காக உயிரைக் கொடுக்க கடனாளிகள். 1 யோ 3:16
  6. தேவனை ஸ்தோத்தரிக்க கடனாளிகள் 2 தெச 1:3
  7. தேவ இராஜ்ஜியத்திற்கு ஆத்துமாக்களை ஆதாயஞ்செய்ய கடனாளிகள். பிலே 18 – 19

துன்மார்க்கன் கடன் வாங்கி செலுத்தாமற்போகிறான். சங் 37:21

“தேவனே, ஆவிக்குரிய கடன்களை யாருக்கெல்லாம் நான் கொடுக்க வேண்டியுள்ளதோ அவற்றைக் கொடுத்திட கிருபை தாரும்.”


Share this page with friends