சூறையாட நினைக்கும் வஞ்சக மேய்ப்பர்களின் கதி என்ன?

Share this page with friends

திடீரென மரித்த ஊழியர்களின் ஊழியங்களை சபை விசுவாசிகளை சூரையாட நினைக்கும் வஞ்சக மேய்ப்பர்களுக்கு ஐயோ… சடுதியில் நாசமடைவீர்கள்.. எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை

மரணம் எல்லாருக்கும் வரும் அதில் சந்தேகம் இல்லை. ஆனால் என்றுமே இல்லாத நிலையில் கடந்த எட்டு மாதங்களில் எண்ணிக்கைக்கு அடங்காத ஊழியக்காரர்கள் குறிப்பாக இளம் வயது ஊழியக்காரர்கள் அநேகர் மரித்தது என் இதயத்தை மிகவும் வேதனைப்படுத்தியது. எத்தனையோ நாட்கள் அதை நினைத்து எனக்கும் நெஞ்சில் வலி ஏற்பட்டது. தூக்கம் கலைந்தது… நிம்மதியை இழந்தேன்
கண்ணீர் விட்டு கதறி கதறி அழுதேன்…. ஆண்டவரே எதற்காக இந்த மரணங்களும் ஓலங்களும் என்றவாறு….

என்னால் முடிந்த அளவுக்கு மரித்துப்போன ஊழியர்கள் குடும்பத்திற்கு உதவி செய்தேன்.. இளம் வயதில் விதவையான ஊழியரின் மனைவி தகப்பனை இழந்த சிறு பிள்ளைகள்… தகப்பனை இழந்த வாலிப பெண் பிள்ளைகள்… கர்த்தாவே… அவர்களை பார்க்கும் போதே கண் கலங்கி ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்துடுவேன்… என்னமோ தேவன் அப்படி ஒரு இருதயத்தை எனக்கு கொடுத்துவிட்டார்….

ஏற்கனவே தனது கணவனை இழந்து தங்களது தகப்பனை இழந்து தவிக்கும் அவர்களுக்கும் அவர்களது சபைக்கும் ஊழியத்திற்கும் அந்த ஏரியாவை சுற்றியுள்ள ஊழியக்காரர்கள் உதவியாக இருக்க வேண்டும் அவர்களை திடப்படுத்தி நாங்கள் இருக்கிறோம் என்று உற்சாகப்படுத்த வேண்டும் தைரியப்படுத்த வேண்டும். இது தானே தெய்வீக அன்பு மற்றும் மனிதாபிமான செயல். நல்ல ஊழியக்காரர்கள் இதை தான் செய்வார்கள் செய்ய வேண்டும்.

ஆனால் என்ன செய்கிறார்கள் சில வஞ்சக ஆவி உள்ள பொய் ஊழியக்காரர்கள் அவர்கள் விசுவாசிகளை தம் பக்கம் திருப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள். இன்னும் கூடுதலாக மரித்துப்போன ஊழியக்காரரின் சபையை பொருட்களை விலை பேசுகிறார்கள். இப்படி ஒரு அசிங்கமான அவலமான கேவலமான ஊழியத்தை செய்கிறார்கள். கேட்பதற்கு ஆள் இல்லை என்ற செய்யும் கள்ள மேய்ப்பர்களே பிரதான நல்ல மேய்ப்பர் பார்த்து கொண்டிருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்… எச்சரிக்கை நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுப்பீர்கள்.

David Livingston

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends