தேவ பிரியம்

Share this page with friends

ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால்,
அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி
செய்வார் (நீதி 16:7)

கருப்பொருள் : பிரியமாயிருந்தால் வரும் ஆசீர்வாதங்கள்

தலைப்பு : தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை

ஆதார வசனம் : நீதி 16:17

துணை வசனம்: தானி 9:23, சங் 40:8; 41:11

1. நம்மை காப்பாற்றுகிறார் (உபா 33:12)

 • சிங்கங்களின் கெபியிலிருந்து காப்பாற்றுகிறார் (தானி 6:22)
 • எரிகிற அக்கினி சூளையிலிருந்து (தானி 3:17,24-25)
 • போகும் இடமெல்லாம் காப்பாற்றுகிறார் (2சாமு 8:6)

2. சிறையிருப்பை திருப்புகிறார் (சங் 14:7)

 • யோபுவின் சிறையிருப்பைத் திருப்பினார் (யோபு 42:10)
 • யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினார் (சங் 85:1)
 • சீயோனின் சிறையிருப்பைத் திருப்பினார் (சங் 126:1)

3. ஜெபத்தைக் கேட்கிறார் (1சாமு 12:22)

 • தாவீதின் ஜெபத்தைக் கேட்டார் (சங் 18:6)
 • தானியேலின் ஜெபத்தைக் கேட்டார் (தானி 9:23)
 • நூற்றுக்கு அதிபதியின் ஜெபத்தைக் கேட்டார் (மத் 8:10)

4. பலனைக் கொடுக்கிறார் (யோபு 33:28)

 • செய்கைகளின் பலனைக் கொடுக்கிறார் (2யோவா 1:8)
 • பிரயாசத்தின் பலனைக் கொடுக்கிறார் (யோவா 4:38)
 • நீதியின் பலனைக் கொடுக்கிறார் (யோபு 33:12)

5. ஜெயங்கொடுக்கிறார் (சங் 41:11)

 • தாவீது கோலியாத்தை மேற்கொள்ளும்படி செய்தார் (1சாமு 17:51)
 • தானியேல் ராஜாக்கள் மத்தியில் ஜெயமுடன் வாழ்ந்தார் (தானி 8:28)
 • பவுல் சரீர பெலவீனத்தை மேற்கொண்டுவாழ செய்தார் (2கொரி 9:12)

6. ஆசீர்வாதத்தை அருளிச் செய்கிறார் (உபா 33:11)

 • ஆபிரகாமை சகல காரியங்களிலும் ஆசீர்வதித்தார் (ஆதி 26:5)
 • சீஷர்களை தம் கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தார் (லூக் 24:50)
 • யோபின் முன்னிலைமையைக் காட்டிலும் ஆசிர்வதித்தார் (யோபு 42:12)

7. எப்போதும் கூட இருக்கிறார் (யோவா 8:29)

 • யோசேப்போடேகூட இருந்தார் (ஆதி 39:2)
 • யோசுவாவோடேகூட இருந்தார் (யோசு 6:27)
 • சாமுவேலோடேகூட இருந்தார் (1சாமு 3:19)


Share this page with friends