சவுல் பவுலாக மாறினாரா? நடந்தது என்ன?

Share this page with friends

சவுலை பவுலாக மாற்றினீரே…

இந்த வார்த்தையை கிறிஸ்தவர்கள் பாடல்களிலும் பிரார்த்தனைகளிலும் சொல்லப்போனால் பிரசங்கங்களிலும் பயன்படுத்துகிறார்கள். இந்த வார்த்தையை கிறிஸ்தவர்கள் தெரிந்து பயன்படுத்துகிறார்களா அல்லது தெரியாமல் பயன்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை. இந்த வார்த்தையை இப்படி பயன்படுத்துவது தவறா என்று கேட்பீர்கள் என்றால் தவறு என்று தான் சொல்ல வேண்டும். காரணம் என்னவென்றால் இந்த பெயர் ஞானஸ்நானம் பெற்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது அல்ல மாறாக அந்த இரு பெயர்களுமே அவரின் இயற்பெயர் தான்.

சவுல் – – – – – – – யூத பெயர்.
பவுல் – – – – – – – ரோம பெயர்.
அதாவது இவர் யூத குடும்பத்தில் ரோம குடியுரிமைக்கு உரிய சிலாக்கியமுள்ளவராக பிறந்தார். ரோமில் பிறந்த அனைவருக்கும் இரண்டு பெயர் வைத்து கொள்ள வேண்டும் அது வழக்கமாக இருந்தது. . அப்படியே இவருக்கும் சவுல் பவுல் அதாவது சவுல் என்ற பவுல் பெயர் இருந்தது.

சவுல் – – – – – – விரும்பப்பட்டவன்.
பவுல் – – – – – – சிறுமை.
சவுலை பவுலாக மாற்றினீரே என்று தமிழில் இந்த அர்த்தத்தில் பயன்படுத்தினால் விரும்பப்பட்டவனை சிறுமையாக மாற்றினவரே என்றும் ஏற்கனவே நான் சொன்னது போல யூதனை ரோமனாக மாற்றினீரே என்று சொல்வதற்கு சமானமாகும்.

பெயரை மாற்றுவது தவறா? தவறு இல்லை தேவனாகிய கர்த்தர் ஆபிராம் சாராயை ஆபிரகாம் சாராள் என்றும் இயேசு கிறிஸ்து சில சீடர்கள் பெயரையும் மாற்றினாரே….
இயேசு கிறிஸ்துவும் இரண்டு பெயரையும் பயன்படுத்தி அழைத்திருந்தார். சவுலே சவுலே முள்ளில் உதைக்கிறது உனக்கு கடினமா என்றும் ஆபத்தான கப்பல் பிரயாணத்திலே பவுலே பயப்படாதே என்றும் பேசினார். அப்போஸ்தலனாகிய பவுல் அவர்கள் ஊழியத்தின் நிமித்தமாக ரோம பெயராகிய பவுல் என்ற பெயரை பயன்படுத்தினார். காரணம் ரோம பெயருக்கு மரியாதையும் கனமும் இருந்தது.

David Livingstone


Share this page with friends