டிஜிட்டல் தடமும் சுவிசேஷ தடமும்

(ஜனவரி 27, 2021)
(Rev. Dr. J. N. மனோகரனின் உயிரூட்டும் மன வெளிச்சம்)
விசுவாசமுள்ள ஜனங்கள் நல்ல முன்னோடிகளாக திகழ்ந்து, வாழ்க்கையில் முன்னேறி, புதிய நிறுவனங்களை உருவாக்கி புதிய பகுதிகளில் ஆராய்ந்து சிறந்து விளங்க வேண்டும். கர்த்தர் மோசேவிற்கும் யோசுவாவிற்கும் வாக்குரைத்தார்; “உங்கள் உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்” (உபாகமம் 11:24), “நான் மோசேக்கு சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்” (யோசுவா 1:3). ஆம், ஒவ்வொரு காலங்களிலும் அல்லது ஒவ்வொரு சகாப்தத்திலும் மிஷனரிகள் தொடர்ந்து அதைச் செய்தார்கள். முந்தைய காலங்களில், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், அனைத்து மொழிகளிலும் வேதாகமங்கள் மற்றும் ஏராளமான இடங்களில் உள்ள சபைகள் என அனைத்திலும் நற்செய்தித் தடத்தினை கண்கூடாக காண முடிகிறது. “சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே” (ரோமர் 10:15) இந்த வசனம், ஏசாயாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டுவது போலத்தான் இருக்கின்றது (ஏசாயா 52: 7 ஐப் படியுங்கள்).
உலகின் புதிய சூழல் ‘தகவல் சகாப்தம்.’ டிஜிட்டல் மயமாக்கல் இன்று உலகை வியத்தகு முறையில் மாற்றிவிட்டது. ஸ்மார்ட் போன் தொழில்நுட்பம் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள், டிஜிட்டல் தகவல்களை அணுகுவதைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட் போன்களும் மலிவானவையாக எல்லா இடங்களிலும் கிடைக்கிறது, டேட்டாவும் (இன்டர்நெட் வசதிகளும்) உலகின் எல்லா மூலைகளிலும் கிடைக்கும்போது, எல்லா மக்களுக்கும் மெய்நிகர் டிஜிட்டல் உலகத்தை அணுக முடியும். ‘டிஜிட்டல் தடம்’ என்பது ஒருவரின் தனித்துவமான டிஜிட்டல் செயல்பாடுகளைக் குறிக்கிறது. இப்படியிருக்கும் புதிய டிஜிட்டல் உலகில், ஸ்மார்ட் போன்கள் மற்றும் மடிக்கணினிகள் போன்ற அனைத்து டிஜிட்டல் சாதனங்களையும் நற்செய்தி தடம் அடைய வேண்டும், அதாவது சுவிசேஷம் இன்னும் பரவலாக வேண்டும். புதிய பரிணாமத்திற்குள் வர வேண்டும்.
தேவனுடைய வாக்குத்தத்தைக் (கால் மிதிக்கும் இடம் நமக்கு சொந்தம்) கொண்டு, அவரின் திட்டத்தை செயலாற்ற நாம் ‘டிஜிட்டல் உலகத்திற்குள்ளும் கால்தடங்களை’ பதிப்பதே நம் புதிய எல்லை. அதற்கு இன்று தேவைப்படும் மூலோபாயம் என்னவென்றால் முதலில் சமூக ஊடகங்களில் சுவிசேஷங்களை அறிவிக்க நன்கு செயலாற்ற வேண்டும். அதற்காக, சபைகள் புதிய ‘டிஜிட்டல் எல்லைகளுக்கு’ சுவிசேஷத்தை எடுத்துச் செல்ல முன்னோக்கிய பார்வை, அணிதிரட்டல், ஊக்கப்படுத்துதல், பயிற்சியளித்தல் மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. ‘டிஜிட்டல் உலகில்’ தேவனுடைய ராஜ்யத்தைக் கொண்டுவர சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியது மிக மிக அவசியம்.
‘நற்செய்தி அறிவிக்க’ நான் பங்களிக்கிறேனா?
#ஜேஎன்மனோகரன்
#உயிரூட்டும்மனவெளிச்சம்
#டிஜிட்டலில்நம்கால்தடம்
#சுவிசேஷம்
வலைத்தளம்: jnmanokaran.me