- 26
- 20250106
- by KIRUBAN JOSHUA
- 5 months ago
- 0
சென்னையை தாம்பரத்தில் வாய்பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளி இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் மப்பேடு – ஆலப்பாக்கம் சாலையோர காலி இடத்தில் இளைஞர் ஒருவரின் உடல் துணியால் கை கால்கள் கட்டப்பட்டு கழுத்து தலை முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக் காயங்களுடன் கொடூர கொலை செய்யப்பட்டு கிடந்தது. இதனைப் பார்த்த பகுதி மக்கள் சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சேலையூர் காவல்துறையினர் மற்றும் பள்ளிக்கரணை ஆணையாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். அப்போது தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட இளைஞர் 25 வயதான சூர்யா என்பதும், சேலையூர் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த இளைஞர் வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளி என்பதும் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி கொலை செய்யப்பட்ட இளைஞர் சூர்யா சமீபத்தில் சிட்லபாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்ததாகவும் இதையடுத்து அந்த பெண்ணை தனது உறவினர் வீட்டிற்கு அவர் அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
நம்முடைய தேசத்தில் இப்படிப்பட்ட கொலை வெறி தாக்குதல்கள் மாற ஜெபிப்போம்
இந்த உள்ளடக்கம் சமூகவலைதளங்கள் மற்றும் செய்தி ஊடகங்களிலிருந்து பகிரப்பட்டுள்ளது.
Disabled youth brutally murdered in Tambaram, Chennai