பிரசங்க குறிப்பு

பரிசுத்த ஆவியினால் பெறும் தெய்வீக ஆசீர்வாதங்கள்

Share this page with friends

பிரசங்க குறிப்பு

பிரசங்க குறிப்பு

பரிசுத்த ஆவியினால் பெறும் தெய்வீக ஆசீர்வாதங்கள்.

நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு விசுவாசிகளானபோது வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால்\ அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள் எபேசியர் : 1 : 13 அப் : 2 : 38

பரிசுத்த ஆவியால் பெறும் தெய்வீக ஆசீர்வாதங்களைக் குறித்து இந்தக் குறிப்பில் சிந்திக்கப் போகிறோம். எபேசியர் புத்தகத்தில் ” ஆவியினாலே ” என்ற வார்த்தை ஐந்து முறை எழுதப்பட்டுள்ளது இதில்த்தான் நாம் பெற்றுக்கொள்ளும் தெய்வீக ஆசீர்வாதங்கள் அடங்கியிருக்கிறது. இதுவே பரிசுத்த ஆவியினால் நாம் பெற்றுக்கொள்ளும்
தெய்வீக ஆசீர்வாதங்கள்.

வேத பாடம் எபேசியர் புத்தகம்

  1. ஆவியினாலே தேவனோடு சேரும் சிலாக்கியம்.

அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதா வினடத்தில் பெரும் சிலாக்கியத்தை அவர் மூலமாய் பெற்றிருக்கிறோம். எபே : 2 : 18 , 13.

இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினாலும், பரிசுத்த ஆவியினாலும் தெய்வீக அனுபவமாகிய தேவனோடு சேரும் சிலாக்கியத்தை பெற்றுக் கொண்டோம். இது முதலாவது தெய்வீக ஆசீர்வாதம்.

  1. ஆவியானாலே மிகுந்த ஆர்வத்தோடு தேவனை தொழுதுக் கொள்வது.

அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டி கட்டப்பட்டு வருகிறீர்கள். எபே : 2 : 22 , 20

நாம் தேவனை தொழுது கொண்டு, அப்போஸ்தலர்களது உபதேசத்தில் கட்டப்படுவது , இதுவும் பரிசுத்த ஆவியினால் நாம் பெற்றுக்கொள்ளும் இரண்டாவது தெய்வீக ஆசீர்வாதம்.

  1. ஆவியினாலே தேவன் மீதுள்ள அன்பின் பிணைப்பு

நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படவும் எபே : 3 : 16

கிறிஸ்துவைப்போல பாடுகளை சகிப்பதே உள்ளான மனிதனின் பலன் ஆகும். அந்த பலனை தருகிறார் பரிசுத்த ஆவியானவர். இது நாம் ஆவியினாலே பெற்றுக்கொள்ளும் மூன்றாவது தெய்வீக ஆசீர்வாதமாகும்.

  1. ஆவியினாலே தேவனை அறிந்து பழகுதல்

துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிக்கொள்ளாமல் ஆவியிலே நிறைந்து எபே : 5 : 18 ( 5 : 19, 20,21

ஆவியினாலே தேவனோடு நெருங்கி பழகும் சிலாக்கியமும் ஐக்கியமும் நமக்கு பரிசுத்த ஆவியினால் ஏற்படுகிறது. இவை ஆவியினால் நாம் பெற்றுக்கொள்ளும் நான்காவது தெய்வீக ஆசீர்வாதம்.

  1. ஆவியினால் தேவ ஜனங்களுக்கு கிட்டும் உதவி

எந்த சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம் பண்ணி, அதன் பொருட்டு மிகுந்த மன உறுதியோடும் சகல பரிசுத்தவான்
களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். எபே 5 : 18

நாமும் பரிசுத்த ஆவியினாலே நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் ஜெபிக்க பரிசுத்த ஆவியானவர் உதவி செய்கிறார். இது ஆவியினாலே நாம் பெற்றுக் கொள்ளும் ஐந்தாவது தெய்வீக ஆசீர்வாதமாகும்.

இந்தக் குறிப்பில் ஆவியினாலே நாம் பெற்றுக்கொள்ளும்
தெய்வீக ஆசீர்வாதங்களைக் குறித்து சிந்தித்தோம். எபேசியர் ஒரே அதிகாரத்தில் சொல்லப்பட்ட ஆவியின் அநுக்கிரமாகும். மேலும் அருளப்பட்ட பரிசுத்த ஆவியைப் புதுப்பித்துக் கொண்டு இன்னும் அநேக தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்

ஆமென் !

S. Daniel Balu
Tirupur

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends