I cover my mouth with my hand

பயப்படாதிருங்கள்

Share this page with friends

பயப்படாதிருங்கள்

இது ஒரு எதிர்வினையாற்றும் உணர்ச்சி. நடுங்க வைத்து நமது பெலன் மற்றும் நம்பிக்கையை குலைத்துப் போடும் ஒருவித எமோஷன் என்று கருதப் படுகின்றது. அச்சம், அஞ்சிதல், போன்ற இன்னும் சில பெயர்கள் இதற்கு உண்டு.

??இந்த உணர்வானது நமது சுபாவம், சிந்தை, ஆழத்துவம், சரீரம் மற்றும் வாழ்வில் நம்மை கீழ் நோக்கி கொண்டு விடும். நம்மை அதிக உணர்ச்சி வசப்பட வைத்து மயக்கம் நடுக்கம், தளர்வு, சகிப்பு தன்மைக்கு நேரே கொண்டு சென்று நடைமுறைக்கு விகற்பமாக செயல்பட வைக்கும்.

??இந்த பய உணர்வு கொண்டவர்கள் withdrawal symptoms, கூச்சல் இடும் சுபாவம், தங்களை ஒளித்து கொள்ளுதல், பின்வாங்குதல், பதட்டப் படுதல், அதிக வியர்வை, சரீரத்தில் வித்தியாசமான சமிக்கைகள் போன்ற விதத்தில் தங்கள் செயல்பாடுகளை மாற்றி கொள்வார்கள்.

??பயம் தேவ திட்டத்திற்கு எதிரி, எதிர்காலத்தின் பகைஞன், முடிவில் நரகத்திற்கு தள்ளி விட்டு விடும்.

??பயத்தை தூண்டும் பிசாசு, பயமுறுத்தும் மனிதர்கள், பூர்வீக dna பகர்வு, உலக சூழ்நிலைகள், தவறான அனுபவங்கள், தோல்விகள், நஸ்டங்கள், எதிர்கால எண்ணங்கள் போன்ற எண்ணற்ற பயமுறுத்தும் பொதுவான காரணிகளை சொல்லலாம்.

??ஆனாலும் பயத்தை வெற்றி கொள்ள வேண்டும் என்பதே நம்மை குறித்த தேவ திட்டம் ஆகும். அதினால் தான் வேதாகமத்தில் கிட்டத்தட்ட 360 க்கு மேற்பட்ட இடங்களில் பயத்திர்க்கு எதிராக நம்பிக்கையின் வார்த்தைகள் சொல்லப் பட்டும் இருக்கிறது. எனவே தொடர்ந்து பயத்தை வருவிக்கும் தன்மைகளை தியானித்து, அவைகளை வெற்றி கொள்ள என்ன செய்ய வேண்டும் என்றும் கவனிப்போம்.

பயத்தின் காரணிகள், ஏன் பயம் வருகின்றது?

A. தவறுயிழைக்கும் போது, அது கண்டுபிடிக்க படுகிறதினால் வருவது அச்சம்.

ஆதாம் தான் தவறு செய்து தன் நிர்வாணம் வெளிப்பட்டதை கண்டு பயந்தான். மோசே தன் காரியம் வெளிப்பட்டது என்று பயந்து வனாந்திரத்திற்க்கு ஓடி போகிறான். சாராள் தான் நகைத்ததை தூதன் கண்டுபிடித்தான் என்பதை அறிந்து பயந்தாள், அதை பின்னர் மறைக்கிராள். பிரமாணத்தை மீறும் போது பயம் தானாக ஒட்டி கொள்ளும். மனிதனுக்கும், பிசாசுக்கும், எதிர் சூழலுக்கும், வியாதி போன்றவைகளுக்கு பயப்பட கூடாது என்று வசனம் சொல்கிறது. அதை மீறி அவைகளுக்கு அஞ்சினால் அது தவறு. அது பாவமாகும்.

B. சந்தேகம் இருக்கும் இடத்தில் பயம் இருக்கும்.

கர்த்தருக்கு வல்லமை இல்லையோ? நமது உறவுகள் சரியில்லையோ? எனக்கு கெடுதல் நடக்குமோ என்கிற எதிர்மறையான எண்ணங்கள் இருக்குமானால் பயமும் கூட இருக்கும். நாங்கள் அமிழ்ந்து போகிறோம் என்று சந்தேகப்பட்டு இயேசுவை எழுப்பின சீடர்களை பார்த்து கர்த்தர் அர்ப விசுவாசிகளே ஏன் பயந்தீர்கள் என்று தானே கேட்டார்.

C. அதீத உணர்ச்சி வசப்படும் நிலை. பிரமிப்பு போன்ற வற்றினால் வரும் பயம்.

எதற்கு எடுத்தாலும் டென்ஷன், படபடப்பு, ஆச்சரியம் போன்ற உணர்வுகளும் பயத்தை கொண்டு வரும். புதிய தரிசன அனுபவங்கள் கூட ஒருவித பயத்தை கொண்டு வரும். இயேசு கிறிஸ்து கடலில் நடந்து வருகையில் சிலர் அவரை ஆச்சரியத்தோடு ஆவேசம் என்றும் வேறு எண்ணமும் கொண்டு பயந்தார்கள் என்ற பார்க்கிறோம்.

D. தாழ்வு மற்றும் உயர்வு மனப்பான்மை

இந்த மனப்பாங்கும் பயத்தை கொண்டு வரும். பிறரது தோற்றம், வலிமை, திறமை, வாய்ப்பு, வசதி போன்றவற்றை மனதில் கொண்டு அதை ஒப்பிட்டு பார்த்து தங்களை தாழ்வாக நினைத்து பயந்து போகும் தன்மை. கோலியாத்தை கண்டு மொத்த இஸ்ரவேல் வீரர்களும் பயந்தார்கள். அதே நேரத்தில் ego centeric மற்றும் சுயசார்பு வாழ்வு கூட பயத்தை கொண்டு வரும். தன்னை உயர்வாக, தனது பதவியை உயர்வாக கருதி வந்த சவுல் தாவீது புத்திமானாக நடந்து வருவதை கண்டு பயந்தான். நம்மை விட பிறர் சாதுரியவான்களாக நடந்தாலே சிலநேரம் அவர்களை குறித்து நமக்கு பயம் வருகின்றது.

E. நிற்கதியற்ற நிலை மற்றும் நிற்பந்தமான நிலை. Pathetic condition

பின்னே பார்வோனின் சேனை முன்பே செங்கடல், என்ன செய்வது, ரண்டும் கெட்ட நிலை, ஜனம் பயந்தார்கள்.

F. எதிர்மறையான காரியங்களில் அதீத நாட்டம்

தேவை இல்லாமல் நம்மை சுற்றி சுற்றி என்ன நடக்கிறது என்று சொல்லி அவைகளின் மேல் அதீத நாட்டம் கொண்டு, அங்கு என்ன நடக்கிறது, இங்கு என்ன நடக்கிறது என்று நமக்கில்லாத காரியங்களில், பிறரது கருமங்களில், மிஞ்சி தலையிட்டு கொண்டால், எதிர்மறையான சூழ்நிலைகளையே பார்த்து, கேட்டு, விவாதித்து வரும் போது அவைகள் பயத்தை கொண்டு வருகின்றது.

G. ஒரு நபர் மீதோ, பொருள் மீதோ, காரியம் மீதோ அதீத பாசம் மற்றும் பற்று கொள்ளாமல் எதிர்கால தேவதரிசனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்

அப்படி பட்ட நபரையோ பொருளையோ இழந்தால் நம்மை தெரியாமலே பயம் ஒட்டி கொள்ளும். மோசேயின் மரணம் யோசுவாவுக்கு பயத்தை கொண்டு வந்தது ஏனெனில் மோசே மோசே என்று அதிகமாக யோசுவா மோசேயை சார்ந்தது தான் காரணம். அழிந்து போகும் மணிதனையோ, உலகத்தையோ அதிகம் நேசித்து அவைகளை இழைக்க நேர்ந்தால் நமது எதிர்காலம் என்ன ஆகும் என்கிற பயம் நம்மை அணுகும்.

தரிசனம் உள்ள நேகேமியாவை சன்பல்லா தொபியா எவ்வளவோ சினம் கொண்டும், பரியாசம் கொண்டும், முத்திரையிடாத கடிதம் கொண்டும், கள்ள தீர்க்கதரிசிகள் கொண்டும் பயம் முறுத்த முடிய வில்லை காரணம் அவன் எதிர்கால தரிசனம் உடையவனாக இருந்தான். தரிசனம் பயத்தை போக்கும்

பயத்தில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?

1. அமர்ந்து இருந்து நிதானித்து கொள்ள வேண்டும்.

We should never react but reflect. நம்மை நாமே நிதானித்து கொண்டால் நாம் நியாயம் தீர்க்கப்படோம். அமர்ந்து இருந்து கர்த்தர் யார் என்று அறிய வேண்டும். நாம் யார் என்றும் அறிய வேண்டும்.

கிறிஸ்துவின் சாந்தம், பொறுமை, சகிப்பு தன்மை மற்றும் நிதானத்தை கவனித்து பார்த்தால் அவர் சர்வ வல்லவர் ஆனாலும் பயமுறுத்த வில்லை. உலகத்தின் பாடுகள், சூழ்நிலைகள் மற்றும் உலகின் பிரமிப்பு உண்டாக்கும் காரியங்களை விட நமக்குள் இருக்கும் கர்த்தர் பெரியவர். அவசரம் வேண்டாம், படபடப்பு வேண்டாம். நாம் ஆராதிக்கும் தேவன் பெரியவர் என்பதை சவதானித்துக் கொள்ள வேண்டும். நம்மை சுற்றி நடக்கிற சம்பவங்களை வைத்து அவசரம் கொண்டு கர்த்தரை சந்தேகம் கொள்ளாமல் நிதானித்து பாருங்கள் பயம் ஓடி விடும்..

2. கர்த்தருக்கு பயந்து பொல்லாப்பிற்கு விலக வேண்டும்.

பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். மனுசனுக்கு பயப்படும் பயம் கண்ணி. அப்படியென்றால் கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளில் நடந்தால் அதுவே பாக்கியம். அவர்களுக்கு உலக பயம் இல்லை. அவர்களுக்கு ஞானம் உண்டு, திடனம்பிக்கை உண்டு, தீர்க்காயிசு உண்டு. அவர்கள் வாழ்வு ஜீவ ஊற்று. அவர்கள் மீட்பை காண்பார்கள். அவர்கள் ஆசீர்வதிக்கப் படுவார்கள்.

3. கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்து, அதை நமக்கு போசிக்க கர்த்தர் ஏற்படுத்தின ஊழியர்களையும் நம்புங்கள்

எழுதி தந்த கர்த்தரின் வார்த்தைகளை தேடி படித்து, அவைகளை ஆராந்து பார்க்க வேண்டும் ஏனெனில் அவைகளில் ஜீவன் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நம்மை நடத்துகிறவர்கள் மூலம் கர்த்தர் கொடுக்கும் வார்த்தைகளே முக்கியம் அதை அற்பமாக விட்டு விட்டு பிரபலத்தை தேடி போக வேண்டாம். நம்மை நடத்துகிறவர்கள் துக்கத்தோடு அல்ல சந்தோஷத்தோடு செய்ய அவர்கள் கொடுக்கும் கர்த்தருடைய வார்த்தைகளுக்கு காத்திருக்க வேண்டும். கர்த்தராகிய இயேசுவில், அவரது வார்த்தையில், அவர் நமக்கு என்று ஏற்படுத்தின ஊழியர்களின் வழியில் விசுவாசத்தில் வளர்ந்தால் தேவ மகிகை வெளிப்படும்.

4. பரிசுத்த ஆவியின் நிறைவான அனுபவத்தில் வளர வேண்டும்

உலகம் மற்றும் மாமிச சிந்தையில் மூழ்கி நம்மை சுற்றி நடக்கும் எதிர்மறையான எண்ணங்களில் அடங்கி போகாமல் ஆவியின் சிந்தை உடையவர்கள் என்கிற கோணத்தில் வர வேண்டும். அவர் பயமுள்ள ஆவியை நமக்கு கொடாமல் பலமும் அன்பும் புத்தியின் ஆவியை தந்து இருக்கிறார். அவரே பயத்தை போக்கிறவர். கிறிஸ்துவின் அன்பில் நம்மை நிறைக்கிறவர் ஏனெனில் அந்த அன்பே நமது பயத்தை மாற்றுகிறது. அப்பா பிதாவே என்று கூப்பிட வைக்கிறார். நித்தியத்தை குறித்த நம்பிக்கை தருகிறார். எதிர்கால வெளிப்பாட்டை தருகிறார். வழி நடத்தும் தேற்றரவாளனாக இருக்கிறார். கிறிஸ்துவின் வலது பாரிசத்தில் உள்ள ஆசீர்வாதங்களை பெற்று தரும் பரிசுத்த ஆவியானவரை கொண்ட வாழ்வு தான் பயத்தை புறம்பே தள்ளும்.

கிறிஸ்துவின் ஆவியானவரின் விடுதலை நாம் பெற அவரில் களி கூறுவோம். கிறிஸ்துவும் பயமுறுத்தி மிரட்டி நம்மை அவரிடம் சேர்ப்பவர் அல்ல மாறாக நமது பெலவீனத்தில் உதவி செய்யும் சர்வ வல்லவர் என்பதை அறிந்து தைரியாமாக அவரிடம் சேருவோம். ஏனெனில் அவர்தான் நம்மை அழிக்கவும் மீட்கவும் சகல அதிகாரம் பெற்றவர். எனவே பயம் வேண்டாம் அதே நேரத்தில் தேவ பயத்தோடு அவருக்கு ஆராதனை செய்து அவர் பாதம் சேர்வோம். பயம் நீங்கி வாழ்வோம்!

செலின்


Share this page with friends