பயப்பட வேண்டாம், சோர்ந்து போக வேண்டாம்.
தேவன் எனக்குச் சகாயர்; ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார். (சங் 54:4) என்ற வேத வார்த்தையின்படி எங்களுக்காய் ஜெபிக்கிற எங்களை தாங்குகிற,ஆதரிக்கின்ற உங்கள் ஆத்துமாவுக்கும் தேவன் சமயத்திற்கேற்ற நல்ல சகாயராய் கூட இருந்து எல்லா தீமைகளுக்கும்,வாதைகளுக்கும் விலக்கி உங்களையும்,உங்கள் குடும்பங்களையும் பாதுகாக்கும்படியாய் ஒவ்வொரு நாளும் ஜெபித்து வருகிறேன்.
பயப்பட வேண்டாம்,சோர்ந்துபோக வேண்டாம்.
நம் ஆத்துமாவை மரணத்துக்கும், நம் கண்ணைக் கண்ணீருக்கும் நம் காலை இடறுதலுக்கும் தப்புவிக்கிற தேவன் கூட இருக்கிறார்.
எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்.
(யாத் 15:26)
அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.
(யாத் 23:25)
நான் எகிப்துதேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.
(யாத் 12:13)
இஸ்ரவேலின்மேல் இருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.
(2 சாமு 24:25)
உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்குபோது குறைவைக் காணமாட்டீர்.
(யோபு 5:24)
இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.
பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.
(சங்கீதம் 91:6,10)
மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே உன் சங்காரம் எங்கே?
(ஓசி 13:14)
எல்லாத் திராட்சத்தோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும், நான் உன் நடுவே கடந்துபோவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
(ஆமோஸ் 5:17)
இப்படிபட்ட விசுவாச வார்த்தைகளை அறிக்கையிட்டுக்கொண்டே இருங்கள்.
அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.
(2 தீமோ 2:12)ஆகவே தமது வார்த்தையை தள்ளாத தேவன், தமது வார்த்தையின்படியே உங்களை பாதுகாப்பார்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உங்களைக் காக்கக்கடவர்.
(எண் 6:24)
Jesus Bless and safe you and your family.
The word of Bible Faith.,
Mrs.Mathi Greenway.,