வாக்களித்த எங்களுக்கு ஏமாற்றம் தந்து விடாதீர்கள் !

Share this page with friends

இன்று முதல் தமிழகத்தில் (டாஸ்மாக்) மதுபானக்கடைகளை மாநில அரசு திறக்கப்போகிறது.
ஜவுளி கடைகளுக்கும், பேன்சி கடைகளுக்கும், புத்தகக்கடைகளுக்கும், கோவில், தேவாலயம் மற்றும் மசூதிகளுக்கும் தடை மற்றும் திண்டுக்கல் பூட்டு..!

மீறினால் சட்டம் பாயும், தண்டிக்கும்..! காரணம் கொரானா தீவிரமாக பரவி வருகிறது…! மரணம் அதிகரித்து வருகிறது..!

* மதுக்கடைகளை (டாஸ்மாக்) திறப்பதால் கொரானா பரவாதா?
* டாஸ்மாக்கில் கூடும் மதுப்பிரியர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாதா?
* இதுவரை முகக்கவசம் அணிந்து கொண்டு வீட்டுக்குள் முடங்கி கிடந்த குடிகார குடும்பத்தலைவர்கள் நாளை முதல் குடித்து விட்டு, வீதி தோறும் உலாவி, ரோட்டில் நடமாடும்
கொரானாவை வீட்டுக்குள் கொண்டு வருவார்களே? அவர்களின் மனைவியும், பிள்ளைகளும் குடும்பமும் என்னாவார்கள்..?
* குடிகாரர்களின் குடும்பங்களுக்கும் அவர்களின் உயிர் பலிக்கும் தமிழக அரசு பதில் சொல்லுமா..?

பேரறிஞர் அண்ணா சொன்னது நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு கட்சிகளும் எதிர் கட்சியாக இருக்கும் போது மக்கள் மீது அக்கறை உள்ள கட்சியாகவும் ஆளுகிற போது மக்கள் விரோத கட்சியாகவும் மாறிவிடுகிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட போது இன்றைய முதல்வர் தனது வீட்டு முற்றத்தில் வந்து நடத்திய போராட்டமும், ஊரடங்கு
காலத்தில் மதுக்கடை எதற்கு ? என்று எழுப்பிய கோஷமும் இன்றும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது..!

முதல்வர் ஸ்டாலின் அவர்களே…
தமிழக மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும், நம்பிக்கையையும் இழந்து விடாதீர்கள்..! இன்னும் உங்கள் விடியலுக்காக காத்திருக்கும் எங்கள் வாழ்க்கையில் காரிருளை உமிழ்ந்து விடாதீர்கள்…! வாக்களித்த எங்களுக்கு ஏமாற்றம் தந்து விடாதீர்கள்..!

இவண்
உங்கள் சுரேஷ் காணி.


தொடர்புடைய பதிவுகள்

படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Share this page with friends