கேள்வி: ஆவியை அவித்துப்போடாதிருங்கள் என்றால் என்ன? விளக்கவும்

Share this page with friends

கேள்வி: ஆவியை அவித்துப்போடாதிருங்கள் என்றால் என்ன? விளக்கவும்

1 தெசலோனிக்கேயர் 5:19

பதில்
தகதகவென்று எரியும் நெருப்பை அனைத்து விட வேண்டாம் என்ற தொனியில் இந்த வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, பரிசுத்த ஆவியின் தாக்கங்களை நம் இதயங்களில் அணைக்கக்கூடாது. ஒரு பலிபீடத்தில் தொடர்ந்து எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பிற்கு இதை ஒப்பிடமுடியும். இந்த நெருப்பு பக்தி / அன்பை அடையாளமாகக் கருதப்பட்டிருக்கலாம். அது ஒருபோதும் அழிந்துபோகாது என்பதைக் குறிக்கிறது.

பரிசுத்த ஆவியானவர் உண்மையான பக்தி/அன்புக்கு ஆதாரமாக இருக்கிறார். பரிசுத்த ஆவியினால் இருதயத்தில் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் இந்த தெய்வீக பக்தி / அன்பானது ஒருபோதும் தணிக்கப்பட்டுவிடக்கூடாது.

நெருப்பை எப்படி அனைக்க முடியும்?
தண்ணீரை ஊற்றுவதாலோ அல்லது வலுமையான துப்பட்டியை கொண்டு மூடுவதாலோ அல்லது எதிர்வினை (கார்பன் டை ஆக்சைடு) காற்றினாலோ அனைக்க முயற்சிக்கலாம். ஆகவே பரிசுத்த ஆவியின் பெலத்தால் இருதயத்தில் அன்பு/பக்தி கொளுந்து விட்டு எரியச் செய்யவும் முடியும் அதே வேளையில் அதை நாம் அனைத்துப் போடவும் முடியும்.

இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பி விடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன் என்று அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவுக்கு (2தீமோ 1:6) சொல்வதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஆத்மாவில் பக்தியின் / அன்பின் தீவிரத்தை அனைக்கும் எதையும் தணிக்கும் எதையும்; தேவனுடைய பாதையில் நடக்க / நிலைக்க விடாமல் தடுக்கும் எதுவும், “ஆவியை அவித்துப்போடுவதாக” கருதப்படுகிறது. உலகத்தன்மை, வீண் சிந்தை, மேட்டிமை, தவறான லட்சியம், பெருமை, உலக ஆசை, அல்லது முறையற்ற சிந்தனையில் ஈடுபடுவது ஆகியவையும் ஆவியை அவித்துப்போட்டுவிடுகிறது.
நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். (எபே 4:30)

மூச்சுக்கு மூச்சு ஆவியானவர் ஆவியானவர் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் – மேள தாளத்துடன் லயித்துப் போவதால் அர்த்தம் புரியாமல் உற்சாகத்தில் “*மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையான ஆவியைத் தாரும்*” என்று பாடிக்கொண்டிருப்பதை கவனிக்கலாம் !!
கிறிஸ்தவர்கள் – முத்திரையாக ஆவியானவரைப் பெற்று விட்டீர்கள் என்று வேதம் சொல்லியிருக்கிறதே. உணர்வோடு – நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆவியின் பக்தியை அவித்துப்போடாமல் – அனுதினமும் எந்நேரமும் விசுவாசத்தை கிரியையின் மூலம் வளர்ப்போம். யாக் 2:14-26

எடி ஜோயல் சில்ஸ்பி


Share this page with friends