அவனும் தெய்வமானான்

பிறரது விழுகையில் சந்தோசம் வேண்டாம்

Share this page with friends

ஒருவர் உயரத்தில் இருக்கும் போது விழுந்து விட எவ்வளவு வாய்ப்பு இருக்கிறதோ, அப்படியே விழுந்தவரும் எழுந்திருக்க அவ்வளவு வாய்ப்பு உண்டு என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும்.

விழுந்தவன் எழுந்து இருக்கிறது இல்லையோ? என்று கர்த்தர் கேட்கிறார். ஏனெனில் நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் எழுந்து இருப்பான்! என்று வேதம் சொல்கிறது. என் சத்துருவே நான் விழுந்தாலும் சந்தோசப்படாதே ஏனெனில் நான் விழுந்தாலும் எழுந்து இருப்பேன் என்று மீகா தீர்க்கன் சொல்கிறாரே! எனவே,

A. நாம் ஆராத்திக்கும் தேவன் விழுந்தவர்களை, மடங்கடிக்கப்பட்டவர்களை, துரத்துண்டவர்களை சேர்த்து கொண்டு, தாங்கி சேர்த்து கொள்கிறவர் என்பதை பரலோக வழியில் அறிந்து கொள்ள வேண்டும். அதினால் தான் அவர் அந்த விழுந்த மனிதனை தூக்கி விட, விழுகையின் சாயலாகி சிலுவை மரத்தில் சாபமாகி மரித்தார்.

B. நாம் விழாமல் இருப்பதும், நிர்மூலமாகாமல் இருப்பதும், அவரது தயவு, கிருபை என்பதை அறிந்து கிருபையின் பாதையில் இருந்து விழுந்து போகாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

C. எனவே நாம் நமது கீரிடங்கள், மேன்மைகள் எல்லாவற்றையும் கீழே இறக்கி வைத்து விட்டு அவரது பாதம் பணிந்து விழுந்து அவரை பணிந்து கொள்ளும் பக்குவத்திற்கு நேராக வர வேண்டும். ஏனெனில் அவரது மகிமை மற்றும் பிரசனத்திர்க்கு நம்மை கீழே தள்ளி விடும் வல்லமை உண்டு என்பதை கிறிஸ்துவின் அன்பின் சீசன் யோவானின் வாழ்வில் இருந்து அறிந்து கொள்ள வேண்டும்.

D. எனவே விழுந்தவர்களை, நசல் கொண்டவர்களை, பெலவீனரை சேர்த்து கொண்டு, அவர்களை தாங்கி அவர்களை பெலப்படுத்தும் கிறிஸ்துவின் பணியில் ஈடுபடுவோம் ஏனெனில் நாம் யாருக்கும் இடரலாக இருக்க அழைக்கப்பட வில்லை.

ஒரு குழந்தை விழ விழத் தான் எழக் கற்று கொள்வது போல, நாம் விழுந்து விழுந்து எழுந்ததினால் இந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அறிந்து விழுந்தவர்களை அவர்களது விழுகையின் காரணத்தை சொல்லி, கீழே போட்டு மிதித்து விட்டு நமது ஓட்டத்தை ஓடாமல், நாங்கள் விழுந்து விட்டோமே என்று மனம் வருந்தி மனம் திரும்ப வாஞ்சையாக இருக்கும் சிலரை அக்கினியில் இருந்து இழுத்து எடுத்து விசுவாசத்தில் பொறுமையோடு ஓடுவோம் ஏனெனில் அவர் இன்னும் அதிகமான கிருபையுள்ளவர் என்பதை அறிந்து இருக்கிறோமே!

விழுந்து விழுந்து எழும்பினவன் என்கிற நிலையில்!

செலின்


Share this page with friends