அற்பம் என்று அசட்டை பண்ணாதிருங்கள்
இன்று அனேகர் தங்களுக்கு இருக்கும் சில வரங்கள், தாலந்துகள், வாய்ப்புகள், வரவுகள், நன்மைகள் மற்றும் கிருபைகள் சொற்பம் என்று எண்ணி பிறரோடு ஒப்பிட்டு மண்ணில் புதைத்து விடுகின்றனர்.
இன்னும் சிலபேர் அதை குறித்து கவலை கலக்கம் கொண்டே வாழ்வையும் முடித்து விடுகின்றனர். சிலர் ஒப்பிட்டு பார்த்து பொறாமை எரிச்சல் என்னும் வியாதியில் விழ்ந்து தங்களையே அழித்து விடுகின்றனர்.
அற்பமான ஆரம்பத்தை யார் அசட்டை செய்ய கூடும். இன்னும் சிலர் பெரிதாக வாழ்க்கையை ஆரம்பித்து பிறருக்கு முன்னால் அவமானப்பட்டு அற்பமாக முடிந்து விடுகின்றனர்.
A. என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்?
நமது இயலாமை மற்றும் இல்லாமை போன்றவற்றை நினைத்து கலங்க கூடாது. நமது தேவன் இல்லாமையில் இருந்து உருவாக்குகிற தேவன். இல்லாமையில் இருப்பவர்களை போல அழைக்கிறார். அவரை நோக்கி பாருங்கள் அவர் நம்மை நடத்துவார் அவரை நம்பினோர் மாண்டத்தில்லை. என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் தான் நமது அற்பமாக இருக்கும் நிலை மாறும். அவரை நோக்கி அமர்ந்து இருங்கள். உங்கள் முகத்தை பிரகாசிக்க பண்ணுவார் என்கிற விசுவாசமும் நம்பிக்கையும் பெருகும் போது தான் அற்பமான ஆரம்பம் பெரிய மகிமையான முடிவில் வெற்றி பெறும்.
B. கர்த்தர் பெரியவர் அவர் அற்பமானதையே பயன்படுத்துவார்.
- அற்பமாக எண்ணபட்ட லேயால் தான் யூத கோத்திரத்தை பெற்று எடுத்தாள். ராகேல் கண்ணுக்கு பிரியமான்வள் தான் அழகு உள்ளவள், ஆனால் வழியில் அடக்கம் செய்ய பட்டாள். லேயாலோ யாக்கோபு தனக்கு என்று வாங்கின கல்லறையில் அடக்கம் செய்ய பட்டாள். எனெனில் அற்பமாக எண்ணபட்ட லேயாளிடம் தான் தெய்வீக சுபாவம் வெளிப்பட்டது. ராகேல் அழகு உள்ளவள் தான் ஆனால் சண்டைக்காரி, பொறாமை உள்ளவள், தகப்பன் விக்கிரகத்தை திருடி வந்து அதை தந்திரமாக மறைத்தவள், தனது சகோதரியை முறைத்து துதாயீம் கனியை பெற்றவள். எனவே கர்த்தருக்கு பயப்படாத எந்த அழகும் கர்த்தருக்கு பிரயோஜனம் ஆகாது. எனவே சுபாவத்தை பாருங்கள் அழகை பார்த்து வஞ்ஜிக்க படாதிருங்கள். ஆனால் அழகோடு கூடிய சுபாவம் எல்லோராலும் மெச்சப்படும். அழகின் ரசனையோடு ஒருவரும் நீடித்து வாழ்வதில்லை ஆனால் சுபாவத்தை கொண்டு நீடித்து வாழ முடியும்.
- யாக்கோபு வெறும் கோலும் தடியுமாக தான் லாபானிடதில் சென்றான். ஆனால் அவன் திரும்பி வரும் போது பெரும் மதிப்பு உள்ள சொத்துக்களோடு திரும்பி வந்தான்.
- மோசே கையில் இருந்த கோல் தான் எகிப்தில் அவனுக்கு பெரும் உதவியாக இருந்து வந்தது. அதை கொண்டு தான் கர்த்தர் தமது வல்லமையை விளங்க பண்ணினார்.
- ஒரு கவணும் அதில் இருந்த சின்ன கல்லும் தான் ஆயுதங்களால் செய்யாமுடியாத பெரிய வெற்றியை தாவீதுக்கு கோலியாத்துற்கு எதிராக கர்த்தர் கொடுத்தார்.
- அற்பமாக எண்ணபட்ட நான்கு குஸ்டரோகிகள் தான் முழு இஸ்ரவேல் ஜனத்திற்கு பஞ்ச காலத்தில் ஆகாரம் கொடுக்க சிரியா பாளயத்திற்கு உள்ளே சென்று விடுதலை பெற்று நற்செய்தி அறிவித்தனர்.
- அற்பமாக எண்ணபட்ட விடாயித்து போன எகிப்திய தேசத்து பிள்ளையாண்டான் தான் தாவீது சிக்லாக்கில் பெலன்று போய் தான் எல்லாவற்றையும் இழந்து நிற்கையில் இழந்து போனாதை திரும்பி பெற்று கொள்ள வழி காட்டினவன்.
- சுத்திகரிப்பு முறைமைகளின் படி வைக்கப்பட்ட அற்பமாக எண்ண பட்ட கற்சாடிகள் தான் யாரும் இதுவரை கொடுக்காத திராச்சை ரசத்தை கொடுக்க இயேசு கிறிஸ்துவால் பயன்படுத்த பட்டது.
C. இருக்கிறவைகளுக்காக ஸ்தோத்திரம் செய்யுங்கள். அந்த ஸ்தோத்திரத்தில் தான் கிருபை பெருகிறது.
இயேசு கிறிஸ்து தங்களிடம் இருந்த அந்த ஐந்து அப்பத்தையும் இரண்டு மீன்களையும் எடுத்து ஸ்தோத்திரம் செய்து அதை சீஸர்களிடும் கொடுத்து பகர்ந்து கொடுக்க சொல்கிறார். 12 கூடை நிறைய மீதியும் எடுத்தனர். முறுமுருப்பு இல்லாததை குறித்த கவலை எரிச்சல், சோம்பேறித்தனம் போன்றவை நம்மை இன்னும் வறுமையில் தள்ளி விடும். இருக்கிற சிறிய தாலந்து வரம் அல்லது கிருபையாக இருந்தாலும் அதை கர்த்தருக்கு மகிமை செலுத்தி பயன்படுத்தி ஆரம்பியுங்கள். கர்த்தர் அதை வர்த்திக்க பண்ணுவார்.
D. தாழ்மையாக நடந்து கொள்ளுங்கள் ஆனால் கர்த்தர் தந்த கிருபை, அபிசேசகம், தீர்க்கதரிசனம் போன்றவற்றை அற்பமாக எண்ணாதிறுங்கள்.
நாம் எவ்வளவு அபிசேகம் வரம் வல்லமை பெற்று இருந்தாலும் அவைகளை இந்த அற்பமான மண் பாண்ட சரீரத்தில் பெற்று இருக்கிறோம் என்பதை உணர்ந்து பிறரை அற்பமாக எண்ணாமல் கர்த்தர் தந்த அபிசேகம் மற்றும் அழைப்பை நோக்கி ஓட வேண்டும். ஒருபோதும் அதிக வரம், வசதிகள், தாலந்துகள், வாய்ப்புகள் மற்றும் கிருபை வல்லமை இருக்கிறது என்று மற்றவர்களை அற்பமாக எண்ணாமல் இருக்க கற்று கொள்வோம். கிறிஸ்து தேவனுடைய ரூருபமாக இருந்தும் மகத்துவம் உள்ளவராக இருந்தும் தம்மை தான் வெருமையாக்கி மனுஷ சாயலாக மாறினார். அந்த கிறிஸ்துவின் மனப்பக்குவம், கிறிஸ்துவின் சிந்தை, கிறிஸ்துவின் வாழ்வியல் நடைமுறை நம்மையும் ஆட்கொள்ளட்டும். அப்போது நம்மில் வெளிப்பட்ட கிறிஸ்துவின் வல்லமை பெரிய காரியங்களை செய்து நம்மில் தேவ நாம மகிமை வெளிப்படும் பொருட்டு அவர் அதிசயமான பெரிய காரியங்களை செய்வார்.
செலின்