வாய்ப்புகளை வீணாக்காதீர்கள்

Share this page with friends

*வாய்ப்புகளை வீணாக்காதீர்கள்*

பல நேரங்களில் வெற்றிக்கும்
தோல்விக்கும் உள்ள வேறுபாடு
போரார்வமும் நம்பிக்கையும்
மட்டுமே..!

நோயை விட அச்சமே
அதிகம் கொள்ளும்..!

நேரம் உங்கள் வாழ்க்கையின்
பணம் அதுதான் உங்களிடம்
இருக்கும் ஒரே பணம்..
அதை எப்படி செலவழிப்பது
என்பதை நீங்கள் தான்
தீர்மானிக்க வேண்டும்..
நீங்கள் எச்சரிக்கையாக
இல்லை என்றால்.. பிறர் அதை
செலவழித்து விடுவார்கள்..!

நீங்கள் தேட வேண்டியது வாய்ப்பை..
பாதுகாப்பை அல்ல..
கரையில் நிற்கும் ஒரு படகு
பாதுகாப்பானது தான்.. ஆனால்
அது ஒருநாள் அதன் அடித்தளத்தையே
அரித்துவிடும்..!

நீங்கள் தினமும் காலையில்
எழும் போது இன்று இரவு
தன்னிறைவோடு உறங்க வேண்டும்
என்ற உறுதியோடு எழுங்கள்..!

நீங்கள் செய்யும் செயல் உங்களுக்கு
மகிழ்ச்சியை தராமல் போகலாம்..
ஆனால் எதையுமே செய்யாமல்
மகிழ்ச்சியாக இருப்பதற்கு
வாய்ப்பில்லை..!

நீங்கள் செய்யாமல் இருக்கும் வரை
உங்களுக்கு நேரம்
போதவே போதாது..!

நீங்கள் செய்தவற்றை மேலும்
சிறப்பாக செய்வதற்கான
ஒரே வாய்ப்பு.. தோல்வி
மட்டுமே..!

நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்
என்பதை உங்களின் திறன்களை
விடவும் முடிவுகளே
தீர்மானிக்கின்றன..!

நீங்கள் எப்படி ஆக
நினைக்கிறீர்களோ.. அதையே
அடைகிறீர்கள்.. எனவே
வேண்டியதில் மட்டும்
கவனம் செலுத்துங்கள்..!

நீ கடைசியாக செய்த தவறே
உன்னுடைய சிறந்த ஆசான்..!

நீங்கள் உண்மையிலே
வாழ்க்கையை விரும்புகிறீர்கள்
என்றால் நேரத்தை வீணாக்காதீர்கள்..
நேரங்களால் உருவானதே
வாழ்க்கை..!

நீங்கள் உங்களால் முடியும்
என்று நினைத்தாலும்..
முடியாது என்று நினைத்தாலும்
அது சரியே..!

நீங்கள் அமைதியாக கடினமாக
உழையுங்கள்.. உங்களுடைய
வெற்றி உங்களுக்காக
சத்தமிடட்டும்..!

நிலவுக்கு குறி வையுங்கள்..
ஒரு வேளை நீங்கள்
தோற்றாலும் நட்சத்திரங்களில்
கால் பதிப்பீர்கள்..!

நிரந்தரமானவரைப் போல கனவு
காணுங்கள்.. ஆனால் இன்றே
இறப்பவர் போல் வாழுங்கள்..!

பாதையை கண்டுபிடியுங்கள்
அல்லது பாதையை உருவாக்குங்கள்..!

எப்போதும் செய்ய முடியாத
வேலையை செய்யவே முயலுங்கள்..
ஏனெனில் அப்போதுதான் அதை
எவ்வாறு செய்வதென்று
கற்றுக்கொள்ள முடியும்..!

நம்பிக்கை மட்டும் தான்
பயத்தை விட வலிமையானது..
நம்பிக்கை கொள்ளுங்கள்
வெற்றி பெறுங்கள்..!

நாம் வாழ்வில் செய்யும்
மிகப்பெரும் தவறு..
தவறு நடந்துவிடும் என்று
பயப்படுவது தான்..!

நாம் எதை தொடர்ந்து செய்கிறமோ
அதுவாகவே ஆகிறோம்..
எனவே திறமை என்பது
ஒரு செயல் அல்ல
அது ஒரு பழக்கம்..!

நம் தவறுகளில் இருந்து
மீண்டெழுந்து பின்
நிகழ்வதே வெற்றி..!

நம் அன்றாட பழக்கவழக்கங்கள்
சிலவற்றை மாற்றிக் கொள்ளாமல்..
வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை
எதிர்பார்க்க முடியாது..!

தோல்விக்கு இரண்டு காரணங்கள் தான்..
ஒன்று யோசிக்காமல் செய்வது..
இரண்டு யோசித்த பின்னும்
செய்யாமல் இருப்பது..!


Share this page with friends