மனிதர்களுக்குள்ளான பிரிவை எப்படியெல்லாம் பிரிக்கிறார்கள் என்று தெரியுமா?

Share this page with friends

இந்த உலகில் மனிதர் – மனிதர்களுக்குள்ளான பிரிவை மூன்று வகையாக இந்த சமூகம் பிரித்துள்ளது.

  1. நிறவெறி – Racism
  2. வர்க்கம் – Class
  3. சாதியீயம் – Castism

நிறவெறி இருக்கிறது, ஆகவே கிறிஸ்தவம் வேண்டாம் என்று ஒதுங்கினால், யாருக்கு நட்டம்?

கருப்பு – ஓர் குறியீடாக உள்ளது. ஆனால் சாதி, வர்க்கம் இவற்றில் “நிறம்” ஓர் குறியீடாக மாறவில்லை.

சாதி என்ற படிமானத்தில் மனத்தில் ஆழ வேரூன்றப்பட்டு வருகிற சமுதாயம் இது.

கீதையின் உபதேசம் : “சதுர்வர்ணயம் மயாசிருஷ்டம்” என்கிறது.

சாதியிலும் கொடுமையானது உட்சாதி பார்ப்பது.

கிறிஸ்தவன் என்று சான்றிதழில் பதிந்தாலே அவர் OBC என்ற தகுதிக்கு வந்துவிடுகிறார்.

சாதி நீக்கம் சான்றிதழில் காண்பித்து மனசில் தூக்கிக் கொண்டு நடந்தால் என்ன பயன்?

சாதி மட்டும் தான் கிறிஸ்தவத்தில் பிரச்சனையா?, “மொழி வழி” பிரச்சனை இல்லையா?. மலையாளி, தமிழன், கன்னடன் என்று.

ஒரு முறை ஹைதரபாத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது ஒரு போதகருடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த கன்னட போதகர், “நீங்க தமிழா, தமிழ்நாட்டுக்காரங்க முட்டாப்பயலுக” என்றார். உச்சிக்கு எகிறியது. இரவில் என் அறையில் தூக்கமில்லை. ஜெபித்த போது தேவ சமாதானம் மனத்தை நிரப்பியது.

எல்லோருக்குள் “உணர்வு” என்ற துடிப்பு இருக்கும். அது மொழி, நிறம், வர்க்கம், சாதி, ஊர்பாசம், தெருபாசம், வகையறா, என்று விரிகிறது.

We saved by Grace not by Race என்பார் ஒரு தேவ மனிதர்.

இந்தியாவில் இருந்திருந்தால் We saved by Jesus not by castisam or classism என கூறியிருப்பார்.

எட்கர் தட்ஸனின் நூல்களையெல்லாம் படியுங்கள். தொல்குடி குறித்து தெரியவரும்.

சரி சாதியை ஒழிக்க முடியாதா?.

சில பேர்கள் “பிசாசைக் கட்டி (Bind)” ஜெபிப்பார்கள், பிசாசை கடிந்து கொள்ள முடியுமே தவிர கட்ட முடியாது.

சாதி என்ற களை (மத் 13:25) விதைக்கப்பட்டுள்ளது. இதை அறுக்கும் போது பயிர்கள் காப்பாற்றப்படும். பயிர் அழிந்துவிக்கூடாது என்பதற்காக களைகள் விட்டு வைக்கப்பட்டுள்ளன. நீங்க களைய?, பயிரா என்பது நியாயத்தீர்ப்பில் தெரியும்.

அன்று கிறிஸ்துவை சிலுவையில் அறைய பிரதான ஆசாரியர்கள் “ஜனங்களை” ஏவி விட்டார்கள் (மத். 27:20; மாற்கு 15:11). அன்பார்ந்த விசுவாச மக்களே நீங்கள் மனிதனில் “ஏவப்படும் ஏவளாளியாக இராதீர்கள்”.

இவ்வளவு எழுதுறீயே நீ சாதிக்கு ஆதரவா?, அப்படீன்னு கேட்டா சாதி எதிர்ப்பு என்பதை “வாய்ச்சொல்லில் அல்ல அதை செயல் முறையில் காண்பிப்பவன்” என்பது என்னை அறிந்தோர்களுக்கு மேட்டுமே தெரியும்.

சாதி வேற்றுமை எனும் சதிவலையை கிறிஸ்துவின் அன்பால் சுட்டெரிப்போம்.

அன்புடன்,
போதகர். செ. டேவிஸ்


Share this page with friends