தேவனுடைய ஊழியக்காரரிடத்தில் கணக்கு கேட்க யாருக்கும் உரிமையில்லையா?

Share this page with friends

தேவனுடைய ஊழியக்காரரிடத்தில் கணக்கு கேட்க யாருக்கும் உரிமையில்லையா?

உரிமை உண்டு. யாருக்கு?

  1. தேவாதி தேவனுக்கு.
  2. நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு.
  3. அரசாங்கத்திற்கு.

திருச்சபையின் ஆரம்பம் அற்பமாக தான் இருக்கும் ஆனால் போக போக திருச்சபை வளரும். ஆரம்பத்தில் பத்து ருபாய் கூட காணிக்கை பெட்டியில் இல்லாத நாட்களும் உண்டு. ஆனால் ஆத்துமாக்கள் பெருக பெருக காணிக்கை பெட்டியில் அதிகமான பணம் வர ஆரம்பிக்கும். காணிக்கை பணம் அதிகமாக வர வர ஊழியர்கள் கவனமாக அதை கையாள வேண்டும். காரணம் அது தனிப்பட்ட பணம் அல்ல அது பொதுவான பணமாக இருக்கிறபடியால் எல்லாருடைய கண்களும் அதன் மேல் வைக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக துணிந்து எந்த விசுவாசிகளும் ஊழியக்காரர்களிடம் கணக்கு கேட்பது இல்லை. ஆனால் சபையில் கூடி கூடி பேசுவார்கள். இதை நான் பார்த்து இருக்கிறேன். ஆகவே ஊழியர்கள் வருடம் ஒரு முறை திருச்சபையில் வரவு செலவு கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.
நிர்வாகிகள் கணக்கு கேட்டால் இவன் யார் நம்மை கணக்கு கேட்க என்று எண்ணாமல் அன்பாக அவர்கள் புரிந்து கொள்ளும் படி கணக்கு சொல்ல வேண்டும். நிர்வாகிகளும் போதகரை குற்றப்படுத்தவும் குறைசொல்லவும் கணக்கு கேட்டு அவர்களை அவமானப்படுத்தாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அரசாங்க விசயத்திலும் ஊழியர்கள் மற்றும் திருச்சபைகள் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் நம்மை குற்றம் சாட்ட இடம் கொடுக்க கூடாது. காரணம் இந்த நாட்களில் என்றும் இல்லாத அளவுக்கு ஊழியர்கள் மற்றும் திருச்சபைகள் மீது கண்ணாக இருக்கிறபடியால் சாட்சியாக இருக்க அரசாங்கத்திற்கு கணக்கை சரியாக ஒப்புவிக்க வேண்டும்.

எல்லாவற்றை காட்டிலும் தேவாதி தேவனுக்கு உண்மையாக இருக்க வேண்டும். தேவனுக்கு முன்பாக உண்மையாக இருப்பவர்கள் எல்லாருக்கும் உண்மையாக இருப்பார்கள். பணத்தை கொடுப்பவர் தேவன் ஆகவே தேவனுக்கு கணக்கை சரியாக ஒப்புவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். கொஞ்சத்தில் உண்மையாக இருந்தால் கர்த்தர் அநேகத்திற்கு அதிகாரியாக வைப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

David Livingston

மக்கள் அதிகம் வாசித்தவை:

நீயோ, தேவனுடைய மனுஷனே.. உங்களை குறித்த தேவனின் எதிர்பார்ப்பு
சமூக வலைதளங்களில் பேசும் போதகர்களுக்கு சில டிப்ஸ்
சினிமா பார்ப்பது, சினிமா பாடல்கள் கேட்பது, பாடுவது தவறு என்று தெரியும், ஆனால் வேதத்தின் அடிப்படையில்
தேவனே எல்லாவற்றிற்கும் சிருஷ்டிகர்
குழந்தை ஞானஸ்நானம் தவறா, சரியானதா?
ஜெபத்திற்கு பதில் அளிக்கிற தேவன்
வேதத்தில் இவ்வளவு இருக்கிறா?
வழக்கறிஞராக தமிழக காணி இன பழங்குடி மக்கள் மத்தியிலிருந்து சட்டம் பயின்ற முதல் வழக்கறிஞ்ஞருக்கு பாராட...
கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான அன்பு போதகருக்கு
பிரசங்க குறிப்புகள்: ஆச்சிரியமான இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை

Share this page with friends