ஆவிக்குரிய காரியங்களில் விவேகம் சாதுரியம் என்று சொல்லி நம்மை சமரசம் செய்ய வைக்கிறதோ?

Share this page with friends

இந்த நாட்களில் corona நம்மை ஆவிக்குரிய காரியங்களில் விவேகம் சாதுரியம் என்று சொல்லி நம்மை சமரசம் செய்ய வைக்கிறதோ? இந்த பதிவு சிலவேளை நமது சட்டங்கள் மற்றும் சிந்தனைகளுக்கு ஒத்து போகாமல் இருக்கலாம் ஆனால் வேதத்தின் அடிப்படைக்கு ஒத்து போகுமா என்பதில் சற்று கவனிக்கவும்.

  1. முதலில் விருப்பம் இருந்தால் சபைக்கு வாருங்கள். சபை கூடி வருதல் நமது விருப்பமா? அல்லது கர்த்தரின் விருப்பமா?
  2. ஒன்றில் சபை விசுவாசத்தோடு திறக்க வேண்டும் அல்லது சூழ்நிலையின் நிமித்தம் பிற்பாடு திறக்கலாம் என்கிற நிலைக்கு வரவேண்டும். இந்த இரண்டும் கெட்ட நிலையில் இருந்தால் லவோதிக்கா சபையின் நிலை தானா? இல்லை வேறு விதத்தில் அதை புரிந்து கொள்ள வேண்டுமா?
  3. சட்டம் மற்றும் அதிகாரத்திற்கு கீழ்ப்படிய வேண்டும் என்று எல்லாரையும் போல செயல்பட வேண்டுமா? அப்படி என்றால் கிறிஸ்துவின் அதிகாரம், சுவுசேசத்தின் வல்லமை மற்றும் விசுவாசத்தில் உள்ள வலிமை போன்ற சத்தியங்கள் விளையாட்டு போன்று விலை யற்று போகிறதோ ? அப்போஸ்தலர்கள் மனிதனின் சட்டத்தை விட தேவ சத்தத்திற்கு தான் அதிகம் கீழ்ப்படிந்து நம்மை தவறாக வழி நடத்தினாரகளா? அப்படி ஆரம்பத்தில் இருந்த வைராக்கியம் போக போக பவுலின் உபதேசத்தால் அதிகாரத்திற்கு கீழ்ப்படிய வேண்டும் என்று மட்டம் படுத்த பட்டதா? கிறிஸ்துவில் அதிகாரங்கள் எப்படி கருத பட வேண்டும்?
  4. ஞானம் விவேகம் அவைகளை சொல்லி ஒதுங்கி நட! கைகளுவு, social டிஸ்டன்ஸிங் விலகி இரு என்று சொல்லி கடினமான சூழ்நிலைகளில் நாம் விலகி போகிறோமா? இதை நாம் சொகுசாக எடுத்து கொண்டு சமரசம் செய்கிறோமா? உலக ஞானம் கர்த்தருக்கு முன்பாக பைத்தியம் என்று எழுத பட்டது சாத்தியமே இல்லை என்று நாம் உலக ஞானத்தை பின்பற்று கிரோமா?

சிந்திக்க?

  1. நமது விசுவாசம் ஜீவனையும் இரத்தம் சிந்தவும் போராடவும் அழைக்கிறது அப்படியென்றால் நமது ஜீவனை தாண்டி நாம் செயல்பட வேண்டாமா? எந்த அளவு ஏன நாம் அனுமானம், பயம், கவலை மற்றும் அதிகாரங்கள் என்ற அடிப்படையில் தீர்மானம் எடுக்க வேண்டும்?
  2. நமது ஆராதனை கிறிஸ்துவின் மேல் உள்ள அன்பின் அடிப்படையில் தான் இருக்க வேண்டுமே தவிர நமது தன்னார்வ விருப்பத்தின் அடிப்படையில் அரதனை செய்யல்பட முடியுமா?
  3. நமது சுவிசேஷதின் வல்லமை தொட்டு, போய், அறிவித்து கொடுக்க வேண்டியது. அந்த வல்லமையை நாம் மட்டு படுத்தி கொள்கிறோமா? எல்லா மதமும் ஒன்று எல்லாரும் ஒன்று என்கிற கோணத்தில் தான் நாம் செல்கிறோம் என்பதில் உண்மை யில்லையா?
  4. நமது உபதேசம் கிறிஸ்துவை போல பாடு பட அழைக்கிறது அப்படியென்றால் நாம் இந்த சூழலில் அதிகாரத்தை தாண்டி, coronaavai தாண்டி, கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் என்று மட்டும் நிற்காதபடி, செயலில் இறங்க வேண்டாமா? இந்த காலத்தில் அற்புத அடையாளங்களை நம்மை கொண்டு கர்த்தர் செய்ய கருவியாக மாறி வசனத்தை உறுதி படுத்த வேண்டாமா?

எந்த மட்டும் இரண்டு நினைவுகளால் குந்தி குந்தி நடப்போம்?

எந்த மட்டும் பயந்து கவலை பட்டு கொண்டு இருப்போம்? விசுவாசத்தில் போராட வேண்டாமா?

எந்த மட்டும் அரசாங்கம் என்று அஞ்சி போய் சமரசம் செய்து கொண்டு இருப்போம்?

எந்த மட்டும் வருகிறது போல பார்க்கலாம் என்று வானம் பார்த்து கொண்டு இருப்போம்?

இது சிந்திக்கும் காலம், செயல்படும் நேரம், விசுவாசத்தில் எழும்பும் நேரம், ஜீவனை கொடுக்கவும் துணியும் நேரம், கர்த்தருடைய வல்லமை விளங்க செய்யும் நேரம், உலக வேஷத்தை கலைத்து கர்த்தர் தான் தேவன் என்று நாவுகள் அறிக்கை செய்ய வைக்க வேண்டிய நேரம்.

எனவே ஜெபித்து தேவ சித்தத்தின் படி அவர் உங்களுக்கு எதை சொல்கிறாரோ அதன்படி செய்யுங்கள்.

கர்த்தர் உடன் இருந்தால் மனிதன் நமக்கு என்ன செய்வான்! விசுவாசித்து பார் தேவ மகிமை காண்பாய், இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாத வல்லமையுள்ள தேவன், எல்லாவற்றையும் அவர் வெற்றி சிரந்தார்.
இது எல்லாம் நாம் பிரசங்கித்த செய்திகள் தான். அவைகள் கிரியை செய்ய வேண்டிய தருணம். ஒவவொருவருடைய பாகுதியிலும் நம்மை கொண்டு என்ன செய்ய வேண்டுமோ? அது அவருக்கு தான் தெரியும், நமது அற்பனிப்பு மற்றும் அவர் சத்தம் கேட்போம்.

செலின்.


Share this page with friends