எய்ட்ஸ் (எச்ஐவி – HIV) நோயினால் மடியும் ஊழியக்காரர்களும் அதனால் சீரழியும் அவர்கள் குடும்பங்களும்

Share this page with friends

எய்ட்ஸ் (எச்ஐவி – HIV) நோயினால் மடியும் ஊழியக்காரர்களும் அதனால் சீரழியும் அவர்கள் குடும்பங்களும்…

நண்பர்களே சரீரத்தில் எந்த ஒரு வியாதிக்கும் காரணம் உண்டு. ஆனால் எய்ட்ஸ் வியாதி வருவதற்கு காரணம் முழுக்க முழுக்க தவறான உறவே ஆகும். சந்தர்ப்ப சூழ்நிலையில் மற்ற காரணங்களாக இருக்கலாம்.

ஆனால் கர்த்தருக்கு ஊழியம் செய்யும் ஒரு தேவ மனிதருக்கு எப்படி எய்ட்ஸ் வரும். அதற்கு காரணம் என்ன என்பதை ஆராய்ந்தேன். காரணம் வரும் தலைமுறை ஊழியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடு ஆராய ஆரம்பித்த போது அதிர்ச்சி அளிக்க கூடிய சில விசயங்களை தெரிந்து கொண்டேன். எழுத வேண்டாம் என்று மனம் சொன்னாலும் எழுத்தாளனாகிய என் விரல்கள் அதற்கு சம்மதிக்கவில்லை….

மத விரோத சக்திகளால் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட பார்வைக்கு அழகான பெண்கள் சபைக்கு அனுப்பப்படுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் விபச்சாரத் தொழிலை செய்கிறவர்கள். இவர்கள் சபைக்கு வந்த உடனே எல்லாரிடமும் சகஜமாக அன்பாக பழகுவார்கள். பின்னர் போதகர் குடும்பத்தோடு நெருங்கி பழகி பின்பு போதகரோடு தனிப்பட்ட முறையில் நல்ல நெருக்கமாகி தனிமையில் சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கி தங்கள் வலையில் விழ வைத்து தவறான உறவை வைத்து விடுவார்கள்.பெண்கள் விஷயத்தில் பலவீனமான போதகர்கள் இந்த வலையில் விழுந்து பாதுகாப்பு இல்லாத ஒரு உறவை அந்த பெண்களிடம் வைத்து கொள்வார்கள். இதனிமித்தம் அந்த பெண்களிடம் உள்ள எய்ட்ஸ் வியாதி இவர்களுக்கும் அறியாமல் வந்து விடும். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் இவர்கள் தன் வீட்டில் மனைவியுடனும் உறவு வைத்து கொள்ள இந்த கொள்ளை வியாதி மனைவிக்கும் வந்து விடும்.

நாட்கள் ஆக ஆக சரீரம் பலவீனம் அடையும். மனைவியும் பாதிக்கப்படுவார்கள். வெளியே சொன்னா வெட்கம் அவமானம். இதற்கு பயந்து ஊழியங்களை விட்டு விட்டு குற்ற மனசாட்சியுடன் ஒதுங்கி ஒதுங்கி வாழ்ந்து பின்னர் எலும்பும் தோலுமாகி மரித்துவிடுகின்றனர். கடைசியில் பிள்ளைகள் அநாதையாக நிர்க்கதியாக நிற்கும் அந்த காட்சி மனதை படபடவென்று அடிக்கிறது. நெஞ்சு பதறுகிறது. துக்கமும் வேதனையுமாக இருக்கிறது. இதில் கணவன் மட்டும் இறந்து மனைவி பிள்ளைகள் ஊழியத்தின் பாதையில் அனுபவிக்கும் கொடுமை சொல்லமுடியாது.

ஆகவே திருச்சபையின் போதகர்கள் பெண்களோடு தனிமையில் போன் பேசுவதையும் தனிமையில் சந்திப்பதையும் தவிர்க்க வேண்டும். கூடுமானவரை தங்கள் மனைவியுடனும் தங்கள் ஊழிய குழுவினருடனுமே சந்தித்து ஆலோசனை சொல்ல வேண்டும்.
தகப்பனின் இருதயத்தோடு வாழும் தேவமனிதர்களாக வாழும் நாம் பார்க்கும் பெண்களை சகோதரிகளாக தாயாக பாவித்து ஆத்ம பாரத்துடனும் தேவபிரசன்னத்தோடும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின் பேரில் தேவ அன்புடனும் நிறைந்திருந்தால் மாத்திரமே இப்படிப்பட்ட தவறான உறவுகளுக்கு நம்மை விலக்கி காத்துக்கொள்ளமுடியும்.

(குறிப்பு :பெண்கள் விசயத்தில் பலவீனமான போதகர்களும் குடும்ப தாம்பத்திய உறவில் பிரச்சனைகளோடு வாழ்ந்து பரிசுத்தம் இல்லாமல் வாழும் ஊழியர்களும் இந்த தவறான உறவாகிய விபச்சார பாவத்தில் விழுந்துவிடுகின்றனர். எச்சரிக்கை)

David Livingston


Share this page with friends