தவறான இடங்களில் இருந்த ஊழியர்கள்

… என் பிதாவுக்கடுத்த வைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா. (லூக் 2 : 49)
சில தேவ ஊழியர்கள் தவறான இடங்களில் காணப்படுகிறார்கள். இயேசுவின் தாயார் இயேசுவை சிறுவயதில் தேடி எருசலேம் வருகிறார்கள். அப்போது இயேசு சொன்ன வார்த்தைதான் மேல் சொல்லப்பட்ட வசனம். நான் பிதாவுக்கு அடுத்தவைகளில் இருக்க
வேண்டும் என்று சொன்னார். பிதாவுக்கு அடுத்தவை என்பது ஊழியத்தைக் குறித்து சொன்னார். அப்படியே வேதத்தில் சில ஊழியர்கள் ஊழியத்தை விட்டு தவறான இடங்களில் காணப்பட்டார்கள். அப்படி தவறான இடங்களில் காணப்பட்ட
ஊழியர்கள் யார் யாரென்று கவனிப்போம். இப்பவும் சில தேவ ஊழியர்கள் பிதாவுக்கடுத்தவைகளை சிந்தியாமல் தவறான இடங்களில் இருப்பதை பார்க்கிறோம். தேவனால் அழைக்கப்பட்ட ஊழியர்கள் தேவனுடைய ஊழியத்தை செய்யாமல் தவறான இடத்தில் இருந்து தேவையற்ற காரியங்களை செய்கிறார்கள். இதுமுற்றிலும் தவறானது. கடந்த நாட்களில் இதைக் குறித்து ஒர் ஊழியக் கூட்டத்தில் நான் பேசின சுருக்கத்தை இதில் பதிவு செய்கிறேன். இது ஊழியர்களுக்கு ஒர் எச்சரிப்பு. ஊழியர்கள் தங்களுடைய இடத்தில் இருந்து தேவனுடைய ஊழியத்தை உத்தமமாக செய்ய வேண்டும். இந்தக் குறிப்பைப் பார்த்து நாம் நமது ஊழியத்தில் தீர்மானம் எடுப்போம்.
- சோர்வின் சிந்தையோடு சூரைச் செடியின் கீழ் உட்கார்ந்த எலியா (1 இராஜா 19 : 9) எலியா வல்லமை உள்ள ஊழியன். அவன் உட்கார்ந்த இடம் தவறானது.
- ஊழியத்திலே நினிவேக்குச் செல்லாமல், கீழ்படியாத சிந்தையோடு தர்ஷீத்துக்கு சென்று மீன் வயிற்றில் இருந்த யோனா. (யோனா : 1 : 17) யோனா ஊழியத்தை அசட்டைப்பண்ணி மீன் வயிற்றில் இருந்தது தவறான இடம்.
- தூரத்திலே இயேசுவை பின் தொடர்ந்து கேவலமான சிந்தை யோடுள்ள மக்கள் அருகில் உட்கார்ந் திருந்த பேதுரு. (மத் 26 : 58) பேதுரு உட்கார்ந்த இடம் தவறானது. இவன் இயேசுவுக்கு மிகவும் பிரியமான ஊழியன்.
- குடும்பச் சுமையின் சிந்தையால் இயேசுவை பின்பற்ற மறுத்த ஊழியன் (லூக்கா 9 : 59)
- சந்தேகத்தின் சிந்தையோடு பன்னிருவரில் ஒருவனாக காணப்பட்ட தோமா (யோவா 20 : 19 , 24)
இயேசுவின் உயிர்த்தெழுந்த நாளில் எல்லா சீஷர்களும் கூடிவந்த போது தோமாவை காணவில்லை. அவன் சென்ற இடமமும் தவறானது. - ஏமாற்றத்தின் சிந்தையால் தான் விட்டுவந்த தொழிலான மீன்பிடிக்கும் தொழிலுக்கு மீண்டும் சென்ற பேதுரு. (யோவா : 21 : 3) பேதுருவின் தவறான முடிவு.
- மந்தபுத்தியின் சிந்தையால் எந்த வேலைக்கும் செல்லாமல் சும்மா நின்ற வேலைக்காரர்கள். (மத் 20 : 3)
இந்தக் குறிப்பில் தவறான இடங்களில் காணப்பட்ட சில தேவ ஊழியர்களையும் , அவர்களது தவறான சிந்தைகளையும் கவனித்தோம். இப்பவும் ஒரு சில தேவ ஊழியர்கள் தவறான சிந்தை யுள்ளவர்களாக தவறான இடங்களில் சுற்றித்திரியும் ஊழியர்களைப் பார்க்கிறோம். அவர்கள் கடைவீதியில் மற்றும் சில தவறான இடங்களில் சுற்றி திரிவதை நாம் கேள்விபடுகிறோம். ஊழியத்தில் இது மிகவும் தவறானது. ஊழியப் பார்வையில் இவை மோசமானது. இவர்கள் பிதாவுக்கடுத்தவையான ஊழியங்களை மறந்து செயல்படுகிறார்கள். நாம் வரும் நாளில் தேவனுடைய ஊழியர்களாய் , தேவனுக்கு பிரியமான இடத்தில் இருந்து தேவனுக்கு பிரியமாக ஊழியம் செய்வோம்.
ஆமென் !
S. Daniel Balu
Tirupur.