- by KIRUBAN JOSHUA
- 5 months ago
- 0
கோவையில் ஐடி வேலை.. Accenture நிறுவனம் தரும் அசத்தலான வாய்ப்பு.. சீக்கிரம் தேதி முடியப்போகிறது
- 0
- 165
July 28, 2024, 10:59
கோவை: கோவையில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனமான Accenture ஐடி நிறுவனத்தில் பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
ஆக்சென்ச்சர் (Accenture).. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் ஐடி துறையில் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங், அனலிட்டிக்ஸ், மெபிலிட்டி, சாப்ட்வேர் டெக்னாலஜி, க்ளைவ்ட் சர்வீசஸ் உள்பட பிற சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த ஆக்சென்ச்சர் நிறுவனம் இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னை மற்றும் கோவையில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது கோவையில் உள்ள ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதன் விபரம் வருமாறு:
ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் தற்போதைய அறிவிப்பின் படி Application Lead பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 15 ஆண்டு கல்வி படிப்பை முடித்திருக்க வேண்டும். அதாவது பிளஸ் 2 படித்து கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிளஸ் 2விற்கு பிறகு சாப்ட்வேர் இன்ஜினியரிங் அல்லது அது சார்ந்த பிரிவில் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி Regulatory Compliance and Software Development பிரிவில் ஏழரை ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
டெக்னிக்கல் ஸ்கில்ஸை பொறுத்தவரை regulatory compliance requirements பற்றி புரிந்து கொண்டிருக்க வேண்டும். மேலும் compliance strategies for software applications என்பதில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர சாப்ட்வேர் டெவலப்மென்ட் மெத்தடலாஜிஸ்களான Agile அல்லது Waterfall அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இதுதவிர ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், பிழையின்றி எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் திறமை, சாப்ட்வேர் டெவலப்மென்ட்டில் ஏற்படும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு தீர்க்கும் தன்மையை பெற்றிருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான மாதசம்பளம் என்ன? என்பது தற்போதைய அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் பணி அனுபவம் மற்றும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை.
இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் பணி குறித்த விண்ணப்பம் செய்யும் நாள் எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் நியமனம் செய்யப்படுவார்கள். அவர்கள் பணி தொடர்பான விபரங்களை பெங்களூரில் உள்ள ஆக்சென்ச்சர் நிறுவனத்துக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டியிருக்கும்.
Thanks to One India News