- by KIRUBAN JOSHUA
- 5 months ago
- 0
டிகிரி + இன்ஜினியரிங் முடித்திருந்தாலே போதும்.. பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை! சான்ஸை மிஸ் பண்ணாதீங்க
- 0
- 1017
July 25, 2024, 10:39
சென்னை: பிரபல ஐடி நிறுவனத்தில் டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். சர்க்கரை அட்டைதாரர்களுக்கு ஹேப்பி.. இனி ரேஷனில் நிம்மதி.. திண்டுக்கல் ரேசன் கடையில் அதிரடியை பாருங்க நம் நாட்டில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் குவாட்ரண்ட் டெக்னாலஜிஸ் (Quardrant Technologies). இந்த நிறுவனம் என்பது தகவல் தொழில்நுட்பத்துறையில் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. கல்லீரல் காக்கும் கற்பகவிருட்சம் அமிர்தவல்லி இலை.. இதய நோயாளிகளின் அருமருந்தாகும் சீந்தில் இலைகள் குறிப்பாக கூற வேண்டும் என்றால் Cloud, Data & Analytics, Accessibility, Business Intelligence, Quality Testing, DevOps, AI & ML, CRM, ERP, Big Data மற்றும் Application Development உள்ளிட்ட முக்கிய பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ZOHOவின் அடுத்த ஆஃபர்.. விண்ணப்பிக்க ஜுலை 31 கடைசி நாள்.. ஆகஸ்ட் 3ல் இண்டர்வியூ.. தென்காசியில் பணி இந்நிலையில் தான் தற்போது குவாட்ரண்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் ஜாவா டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இளங்கலை பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டல் இன்ஜினியரிங் அல்லது அது சார்ந்த துறையில் படிப்பை முடித்திருக்க வேண்டும். Advertisement HCL வேலைவாய்ப்பு.. அனுபவம் எதுவும் வேண்டாம்.. BBA முடித்தவர்களுக்கு ‛ஜாக்பாட்’ விண்ணப்பம் செய்வோருக்கு Primary Skills ஆக Jaa, Spring, Boot, MVC, Hibernate மற்றும் SQL தெரிந்திருக்க வேண்டும். அதில் பணியாற்றி இருந்தால் இன்னும் சிறப்பானதாக இருக்கும். கன்டரி ஸ்கீல்ஸாக எச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஜாவா ஸ்கிரிப்ட் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதில் பணியாற்ற தெரிந்திருந்தால் பிளஸ் பாயிண்டாக இருக்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ZOHO -வின் புதிய வேலைவாய்ப்பு.. அனுபவம் வேண்டாம்.. டிகிரி மட்டுமே போதும்.. சென்னையிலேயே பணி நியமனம் இதுதவிர ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். Debugging திறமை மற்றும் பிரச்சனைகளை சமாளிக்கும் திறமை கொண்டிருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி இந்த பணிக்கான சம்பளம் குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும். மேலும் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Quadranttechnologies.com என்ற இணையதளம் சென்று ஆன்லைனில் இப்போதே விண்ணப்பம் செய்வது நல்லதாகும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.