சிறப்பு செய்தியாளர்களாக அழைக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்
சிறப்பு செய்தியாளர்களாக அழைக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்
உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களைப்பற்றி அவர்களுடைய விசுவாசிகளிடம் விசாரிக்காதீர்கள்.

- உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களது
விசுவாசிகளை ரகசியமாக தனி ஜெபத்திற்கு அழைக்காதீர்கள்.
- உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களது
விசுவாசிகளின் தொலைபேசி எண்களை கேட்டு வாங்காதீர்கள்.
- உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களது
விசுவாசிகளை வேறு சபைக்கோ அல்லது உங்களது மற்ற கூட்டங்களுக்கோ அழைக்காதீர்கள்.
- உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களது
விசுவாசிகள் காணிக்கை கொடுத்தால் அதை உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களுக்கு மறைக்காதீர்கள். அது உங்களுக்குக் கிடைக்கும் காணிக்கையை எந்த விதத்திலும் பாதிக்காது.
- உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களது
ஊர்களில் அவர்களுக்குத் தெரிவிக்காமல் எந்த நிகழ்ச்சியையும் நடத்தாதீர்கள்.
- உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களது துணைவியாருக்கும் உரிய மரியாதையும் அங்கீகாரமும் கொடுங்கள்.
- உங்களை ஊழியங்களுக்கு அழைத்த சபையின் முழுப் பெயரையும் அறிந்துகொள்ளுங்கள்.
- உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களது
முழுப் பெயரையும் அறிந்துகொள்ளுங்கள்.
- உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களது
சரியான பதவிப் பெயருடன் அழையுங்கள்.
- உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களை
சபை விசுவாசிகளுக்கு முன் குறைவாக பேசாதீர்கள்.
- ஊழியம் முடிந்தபின் உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களை தொடர்பு கொண்டு வாய்ப்பளித்ததற்காக நன்றி சொல்ல மறக்கவேண்டாம்.
- உங்களுக்குக் கொடுக்கப்பட்ட காணிக்கை பற்றி மற்ற சபை போதகர்களிடம் ஒருபோதும் முறுமுறுக்க வேண்டாம்.
- உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களது
சபை விசுவாசிகளை, (Shopping) கடைக்கு அழைத்துச்செல்லும் படி கேட்க வேண்டாம்.
- உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களது
விசுவாசிகள், உங்களை விருந்துக்கு அழைத்தால் சபைப் போதகரும் அழைக்கப்பட்டிருந்தாலன்றி ஏற்றுக்கொள்ளவேண்டாம்.
- எந்த போதகரும் உங்களை ஊழியத்திற்கு அழைத்ததற்காக வருந்தும் நிலையை உண்டாக்க வேண்டாம்.
- உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்கரை விட நீங்கள் விசேஷ அபிஷேகம் பெற்றவர்கள் என்பதனால் தான் நீங்கள் அழைக்கப்பட்டீர்கள் என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம்.
- சபை ஆராதனை நேரங்களை மதித்து உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முடித்துவிடுங்கள்.
- நீங்கள் ஒரு சிறப்புப் பாடகராக பாடும்படி அழைக்கப்பட்டிருந்தால் “பாடுவதற்கு முன் நான் இதைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் ” என்று சொல்லாதீர்கள். (பிரசங்கம் செய்யவேண்டாம்.)
- அவசியமில்லாத கோரிக்கைகளை வைத்து உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்களை
சிரமப்படுத்த வேண்டாம்.
- உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர், அவரது விசுவாசியின் வீட்டில் உங்களை தங்க வைத்தால் அவர்களுடன் உங்கள் உறவு சரியாக இருக்கட்டும். கூட்டம் முடிந்த பின்னர் அவர்களுடன் எவ்வித தொடர்பும் கொள்ள வேண்டாம்.
- பிரசங்க பீடத்தை உங்களது சுய விளம்பரத்திற்காக பயன்படுத்தாதீர்கள்.
- புத்தகங்களையும் ஒலி நாடாக்களையும் விற்பதற்கு முன் அனுமதி கேளுங்கள்.
- ஆராதனையை ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுங்கள். விசுவாசிகளை அவமானப்படுத்தாதீர்கள்.
- உங்களை ஊழியங்களுக்கு அழைத்த போதகர்கள்
குறிப்பிட்ட நேரத்தில் தங்கும் அறையில் ஆயத்தமாயிருங்கள். அழைக்க வந்தவர்களைக் காக்க வைக்கவேண்டாம்.
இந்த நெறிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் நாம் சபைகளையும் உறவுகளையும் உடைப்பவர்களாயிருப்போம்.
எனவே இதில் கவனம் செலுத்துவோம்