தேவையற்ற பேச்சினால் ஏற்படும் தீய விளைவுகள்

Share this page with friends

பிரசங்க குறிப்பு

இதோ , நான் நீசன். நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன். என் கையினால் என் வாயைப் பொத்திக் கொள்ளுகிறேன்
யோபு : 40 : 4 தேவையற்ற பேச்சுக்கள் நமக்கு தீய விளைவுகளை ஏற்படுத்தி நம் ஆவிக்குரிய ஜீவியத்தை கெடுத்துவிடும். யோபு சொன்னதைக் போல வீண் வார்த்தைகளை பேசுவதைப் பார்க்கிலும் வாயைப்பொத்திக் கொள்வது நலம்பயக்கும். தேவையற்ற பேச்சினால் வரும் தீமைகளைக் குறித்துப் பார்க்கலாம்.

 1. ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கத்தை கெடுக்கும்
  1 கொரி : 15 : 33
 2. கடுஞ்சொற்கள் கோபத்தை உண்டாக்கும்
  நீதி : 15 : 1
 3. வாயில் இருந்து பறப்படுவது மனுஷனை தீட்டுப்படுத்தும்
  மத் : 15 : 11
 4. பெருமை பேசும் நாவை கர்த்தர் கர்த்தர் அறுத்து போடுவார்
  சங் : 12 : 3
 5. வாயினால் பாவம் செய்தால் கைகளின் கிரியை அழிக்கப்படும்
  பிரசங்கி : 5 : 6
 6. வீண் பேச்சு அவபக்தியை உண்டாக்கும்
  2 தீமோ : 2 : 16
 7. வீண் பேச்சு பேசினால் கர்த்தரை விட்டு விலகி போவோம்.
  1 தீமோ : 1 : 6
 8. பேசும் வீண் வார்த்தைகளுக்கு நியாயத்தீர்ப்பு உண்டு
  மத் : 12 : 30
 9. வாயின் வார்த்தை மாம்சத்தை பாவத்துக் குள்ளாக்கும்
  பிரசங்கி : 5 : 6
 10. ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால் நியாயத்தீர்ப்பு உண்டு. யாக் : 5 : 9
 11. ஒருவருக்கொருவர் விரோதமாக பேசினால் அழிவோம். கலா : 5 : 15
 12. நாவை அடக்காதவன் தேவபக்தி வீண். யாக் : 1 : 26

தேவையற்ற பேச்சுக்கள் வீண் வார்த்தைகள் , நமது வாயின் தேவையற்ற பேச்சுக்கள் இவைகள் நமக்கு தீய விளைவுகளை ஏற்படுத்தும். நாம் நியாயத்தீர்ப்பில் நியாயம் தீர்க்கப்படுவோம். அதனால் இதற்கு நாம் யோபுவை போல வாயைப் பொத்தி கொள்வது நலமாய் இருக்கும். இது நம் யாவருக்கும் எச்சரிப்பு. ஆகையால் நம் வாயின் வார்த்தைகள் கர்த்தருக்குபயந்து பேசட்டும். ஆண்டவரிடத்தில் ஒப்புக்கொடுத்து நாம் கேட்போம் ஆண்டவரே என் வாய்க்கு காவல் வைத்து, என் நாவை அடக்கிக் கொள்ள மேலும் வீண் வார்த்தைகளை பேசாதபடி எங்களுக்கு உதவி செய்யும் என்று கேட்போம் அப்போது தீய விளைவுகளில் இருந்து தேவன் காப்பாற்றுவார்.

ஆமென் !

S. Daniel Balu.
Tirupur


Share this page with friends