வாரிசு ஊழியம் தொடர்பாக எழும் கேள்விகளுக்கு விளக்கம்.

Share this page with friends

இங்கு வாரிசு என்கிற பதமே பெரிதாக விவாதிக்க படுகிறது.

தனக்கு பின் யார் அந்த ஊழியத்தை அல்லது மிஷன்யை நிறைவேற்றுவது தான் வாரிசு அல்லது sucessor.

பவுல் தனது இரத்த பந்தம் இல்லாத Timothy மற்றும் Titus போன்றவர்களை வைப்பது அவர்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் பவுலின் இரத்த பந்தத்தை வைப்பது தான் பிரச்சனை. ஆனால் இவர்கள் யாரும் பவுலை போல குடும்பத்தை விட்டு புரஜாதிகளிடம் ஊழியம் செய்ய வந்ததில்லை. எப்பாபிராத்து பவுலின் சொந்த இரத்த பந்தம் என்கிற ஒரு ஆராச்சியின் முடிவு சொல்கிறது. அவர் தான் பிலிப்பிய சபையின் போதகர்.

இயேசுவின் அடுத்த வாரிசு என்று எடுத்து பார்த்தால், பேதிரு, யோவான், யாக்கோபு. அதில் யாக்கோபு முதல் இரத்த சாட்சியாக மரித்த பின்னர் அந்த இடத்திற்கு இயேசுவின் அதாவது மரியாளின் உதிரத்தில் பிறந்த யாக்கோபு சபையில் அந்த இடத்தில் வந்து இருக்கிறார். Act 15 ஆம் அதிகாரத்தில் அதை பார்க்கிறோம்.

இவர்கள் அனைவருக்கும் ஊழியர்களின் பிள்ளைகள் ஊழியத்தில் வருவது பிரச்சனை இல்லையாம் ஆனால் தலைமை இடத்தில் வருவது தான் பிரச்சினை என்றால் இது அவர்களது மாய்மாலத்தை மற்றும் பொறாமையை காட்டுகிறது.

பழைய ஏற்பாட்டில் ஆசரியத்துவ ஊழியத்தில் மட்டுமல்ல ராஜரீக ஆளுகையில் கூட தன் தகப்பனுக்கு பின் மகன் என்கிற சலுகையை கர்த்தர் கொடுக்கும் போது புதிய ஏற்பாட்டில் மல்லு கட்டுவது ஏனோ?

ஏற்கனவே என் பதிவில் சொல்லப்பட்டது போல

1. அழைப்பு மற்றும் தெரிந்து கொள்ளுதல் இருந்தால் தகப்பன் ஊழியத்தில் மகன் செயல்பட முடியும் என்றால் தலைமை இடத்திலும் செயல்பட முடியும். யாரும் இங்கு தானாக வருவதில்லை. கர்த்தரே ஏற்படுத்துகிறார். மொத்த சபையும் அப்படி அவர்கள் சொல்வது போல இன்று குடும்ப பிடிகளில் சிக்கி கொண்டு தவிக்கவும் இல்லை. பொதுவாக எல்லா ஸ்தாபனங்கள் வாக்கெடுப்பு மற்றும் தெரிந்து எடுப்பு மூலம் தான் அதை செய்கின்றது. சபைகளில் தேவன் போதக பிள்ளைகளின் அழைப்பை உறுதி படுத்தி அவர்களை ஊழியத்தில் ஏற்படுத்தவும் செய்கின்றார்.

2. நீதியுள்ள தேவன் ஒரு தகப்பன் தனக்கு ஊழியம் செய்யும் புத்திரனை கடாட்ச்சிக்க முடியும் என்றால், தேவ சித்தம் செய்யும் எந்த புத்திரணும் கூட தலைமை இடத்தில் வர முடியும். ஊழியரின் பிள்ளைகளில் ஒருவர் ஊழியத்திற்கு வர முடியும் என்றால் தேவன் அவரை தலைமை இடத்தில் கொண்டு வருவதற்கு தடை போடும் அநியாயக்காரர் அல்ல.

3. தேவன் தனது சித்தத்தின் படி ஒருவருக்கு விருப்பத்தை கொடுக்கிறார். எனவே தேவ சித்தத்தின் படி ஒரு ஊழியரின் பிள்ளைகளுக்கு அவரை தொடர்ந்து அந்த ஊழியத்தை நேரடியாக செய்ய அல்லது தலமை தாங்கி செய்ய விருப்பம் வர கூடாது என்று எப்படி சொல்ல முடியும். தகப்பனாகிய தாவீதை கணப்படுதும் தேவன் அவன் நிமித்தம் சலோமனை அன்பு கூர்ந்தார் என்று எழுத பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டில் அது நடக்க கூடாது என்று எப்படி இவர்கள் எதிர் பார்க்க முடியும். ஒருவன் கர்த்தருக்கு ஊழியம் செய்தால் பிதவானவர் நிச்சயம் கணப்படுதுவார். ஏனெனில் கனம் leadership க்கும் பொருந்தும்.

4.தகப்பனின் ஆவியையும் பிள்ளைகளின் இருதயத்தையும் திருப்புகிற ஊழியத்தை புதிய ஏற்பாட்டு எலியாவாகிய யோவான் ஸ்நாபகன் செய்து வந்தார் என்று வேதம் நமக்கு சொல்கிறது. அப்படி என்றால் தகப்பனின் அன்புள்ள பிரயாசதத்தை மறந்து விட அவர் அநீதி உள்ள தேவன் அல்ல. பிள்ளைகளின் சுதந்திரம் பிள்ளைகளுக்கு தான்.

ஊழியர்களின் பிள்ளைகள் ஏலியீன் பிள்ளைகள் மற்றும் சாமுவேல் பிள்ளைகள் போன்று இல்லாமல் தகப்பன் வழியில் நீதி மற்றும் பரிசுத்த வழியில் நடந்தால் பிள்ளைகள் நிச்சயம் அவர்கள் நீதியின் பலனை அனுபவிப்பாரகள். புதிய ஏற்பாட்டில் ஏலி மற்றும் சாமுவேல் இன்னும் தாழ்த்தி விண்ணப்பம் பண்ணினால் அப்படிப்பட்ட பிள்ளைகளையும் மனம் திரும்ப பண்ணி ஊழியத்தை தொடர செய்ய முடியும். ஏனெனில் அவர் அன்பு உள்ளவர், நீதி உள்ளவர், கிருபை உள்ளவர். அவரது சுபாவம் OT க்கு ஒன்று NT ககு ஒன்று என்று மனிதனை போல மனம் மாற அவர் ஒரு மாய்மாலக்கார மைந்தன் அல்ல.

செலின்.


Share this page with friends