கொரோனாவே உன் கூர் எங்கே ? வைரஸே உன் ஜெயம் எங்கே?
கனத்த மனதோடு கேட்கிறேன்
கொரோனாவே உன் கூர் எங்கே ?
வைரஸே உன் ஜெயம் எங்கே?
இரவின் விளிம்புதான் விடியல்
கொரோனாவுக்கோ இன்னும்
விடிந்தபாடில்லை, அதனுடைய
ஆட்டம் முடிந்தபாடில்லை
பற்றுதல் பரவுதல் நெருப்பின் லட்சணம்
அதுவே கொரோனாவின் கொள்கை
கொரோனாவுக்கு மட்டும்
ஏன் இத்தனை
கொள்கைப்பரப்பு செயலாளர்கள் ?
அவர்களின் எண்ணிக்கை
விலைவாசியைவிட
எகிறிக் கொண்டு போகிறதே !
விழித்தெழும்பு விசுவாசியே
முழங்காலை முடக்கிவிடு
அதிகாலை எழும்பிவிடு
அண்மைச்செய்தியைப் பார்த்துப் பார்த்து
அசைக்கப்பட்டுவிடாதே
விரைவுச்செய்தியைப் பார்த்துப் பார்த்து
விசுவாசத்தை இழந்துவிடாதே
இரவில் நடமாடும்
கொள்ளை நோயை
குடும்பமாய் சேர்ந்து ஜெபித்து
குயக்கலத்தைப்போல
அதை உடைத்துவிடு
குமாரன் கோபங்கொள்ளாமலும்
வழியிலே அழியாமலும்
இருக்கும்படி அவரை முத்தம்செய்துவிடு
கொஞ்சக்காலத்திலே அவருடைய
கோபம் பற்றி எரியும்
அவரை அண்டிக்கொள்ளுகிற
யாவரும் பாக்கியவான்கள் .
பாஸ்டர் ஜே. இஸ்ரேல் வித்ய பிரகாஷ்