தீ விபத்தில் சிக்கிய பிரபல சீரியல் நடிகர் ஶ்ரீ பகிரங்கமாக இயேசுவை அறிவித்தார்
ஜெபவீட்டில் பயங்கர தீ விபத்து ; குடும்பத்துடன் சிக்கி கொண்ட பிரபல சீரியல் நடிகர் பகிரங்கமாக இயேசுவை அறிவித்தார்.

06, ஜனவரி 2022
சென்னை
சென்னை : பாண்டி பஜாரில் உள்ள வணிக வளாகத்தில் திடீரென ஏற்பட்ட மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது, துணிகடையிலிருந்து பற்றி எரிந்த தீ மூன்றாவது தளத்தில் நடைபெற்று வந்த ஜெப வீட்டிலும் பரவியது. முழுவதும் புகைக்காடாய் மாறியது. அந்த ஜெபவீட்டில் ஞாயிறு ஆராதனைக்காக சிறியோர், வாலிபர், கற்பிணி பெண்கள், வயோதிபர்கள் உட்பட நடிகர் ஸ்ரீ மற்றும் குடும்பத்தினர் என கூடியிருந்த அனைவரும் பயங்க தீ விபத்தில் சிக்கி கொண்டனர்.
சம்பம் அறிந்து தீயணைப்பு துறையினர் 4 வாகனங்களில் அதிரடியாக வந்து தீயை கட்டுப்படுத்தி உள்ளே இருந்த அனைவரையும் மீட்டனர்.
செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஸ்ரீ தன்னை காப்பாற்றிய கடவும் இயேசுவுக்கும், உதவிய தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் அனைவரும் நன்றி கூறினார்.
எங்கள் ஆராதனை ஐந்து நிமிடம் தாமதமாகி முடிந்திருந்தால் நாங்கள் லிப்ட் கருவில் சிக்கியிருப்போம். மேலும் தீயணைப்பு வீரர்கள் வந்து சேர ஒரு ஐந்து நிமிடங்கள் தாமதமாயிருந்தாலும் சூழ்நிலை ஆபாதாக மாறியிருக்கும். இது ஒரு மனிதனுடைய செயல் அல்ல. இயேசுவின் கிருபையினால் மட்டுமே நாங்கள் காப்பாற்றப்பட்டோம்.
பல கோடி மதிப்புடைய சொத்துக்கள் வணிகவளாகத்தில் எரிந்திருந்தும், நாங்கள் கூடியிருந்த ஜெப அறையில் ஒருவருக்கும் ஒரு சேதமுமின்றி மீட்கப்பட்டனர். மேலும் கைகளில் வைத்திருந்தன பைபிள்களில் ஒரு பக்கம் கூட எரிந்து போகவே இல்லை. இது கடவுள் இயேசு செய்த அற்புதம் என்பதை ஆதாரப்பூர்வமாகவும், பகிரங்கமாகவும் பொதுவெளியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அன்று அவர் பேசிய இந்த காணொளியானது இன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த அற்புதமான சாட்சியை உங்கள் நண்பர்களுக்கு மறவாமல் பகிர்ந்துகொள்ளுங்கள், இதுபோன்ற கிறிஸ்தவ செய்திகளை உடனுக்குடன் அறிந்துாெள்ள இந்த இணையத்தோடு இணைந்திருங்கள்.. நன்றி
TCN MEDIA
https://tcnmedia.in/police-crack-down-on-religious-extremists-in-madurai/