• Monday 10 March, 2025 12:03 AM
  • Advertize
  • Aarudhal FM
சிறுமிக்கு பாலியல் தொல்லை வளர்ப்புத் தந்தை கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை வளர்ப்புத் தந்தை கைது

  • மேட்டுப்பாளையம், சிறுமுகை
  • 20250118
  • 0
  • 125

மேட்டுப்பாளையம்,; சிறுமுகையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வளர்ப்புத் தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

சிறுமுகையை சேர்ந்த 15 வயது சிறுமி சற்று மனநலம் குன்றியவர். இவரது வளர்ப்புத் தந்தை கடந்த தீபாவளி பண்டிகையின் போது, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, பக்கத்து வீட்டு பாட்டி ஒருவரிடம், சிறுமி சொல்லியுள்ளார்.இதனால் சந்தேகம் அடைந்த அந்த பாட்டி, சைல்ட் ஹெல்ப் லைன் மூலமாக தொடர்பு கொண்டு குழந்தைகள் நல அலுவலரிடம் தெரிவித்தார். அவர்கள் வந்து ஆய்வு செய்ததில், வளர்ப்பு தந்தை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து சிறுமுகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வளர்ப்புத் தந்தையை பிடித்து, மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசார் அவரை போக்சோவில் கைது செய்தனர்.—-

Conclusion

தொடர்ந்தெட்சியாக சிறு பிள்ளைகளுக்கு எதிராக நடைபெறுகிற பாலியல் வண் கொடுமை மாற ஜெபிப்போம்

Summary

Father arrested for sexually abusing girl