என்னை காண்பவரே என்ற தந்தை பெர்க்மான்ஸ் அவர்களது பாடல் ஔிபதிவின்போது இயக்குனர் கண்ட நெகிழ்ச்சி காட்சிகள்

Share this page with friends

தந்தை பெர்க்மான்ஸ் அவர்களது ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் 40-வது பாகம் சில மாதங்களுக்கு முன் வெளியானது. அந்த பாகத்திலுள்ள “என்னை காண்பவரே” என்ற பாடல் வீடியோ காட்சிகளாக பதிவு செய்யப்பட்டு நேற்று (12 மார்ச் 2021) மாலை 6 மணிக்கு ஜெபத்தோட்டம் மினிஸ்ட்ரிஸ் (Jebathottam Ministries) என்ற யூடியூப் தளத்தில் வெளியானது.

சங் 139-யை மையமாக கொண்டு தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் தேவ பிரசனத்தில் அமர்ந்து எழுதி, இராகம் அமைத்து மிக நேர்த்தியாக பாடியுள்ளார். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இந்த பாடலுக்கு சகோ. ஆல்வின் இசையமைத்திருக்கிறார். சகோ. ஜீடா அருண் வீடியோ பதிவு செய்திருக்கிறார். இந்த பாடல் மக்களை வெகுவாய் ஈர்த்துள்ளது.

ஔிப்பதிவாளரும் இயக்குனருமான சகோ. ஜீடா அருண் தந்தையோடு தனக்கிருந்த அனுபவங்ளை பகிர்ந்துள்ளார். (நேர குறியீடுகளை வீடியோவில் பாருங்கள்)

இந்த பாடலின் Director என்ற முறையில் நான் பார்த்து வியந்த அனுபவங்களை எழுத விரும்புகிறேன். பாடலை எப்படி படமாக்குவது என ஜெபத்தோட்ட போதகர்கள் & ஜெபத்தோட்ட மீடியா நண்பர்களோடு  விவாதித்த போது, கால சூழ்நிலை (Pandemic) கருதி ஜெபத்தோட்டத்திலேயே எடுக்க முடிவு செய்து, நாங்கள் காலை முதல் மாலை வரை Father Berchmans எப்படி வாழ்கிறார் என படம் பிடிக்க விரும்பினோம். அதனால் நான் இரண்டு நாள்களுக்கு முன்னமே சென்று எங்கு எடுக்கலாம், எப்படி வாழ்கிறார், என்ன தினமும் செய்கிறார் என்பதை காணவும், ஊழியத்தில் அவருக்கு உதவியாய் இருப்பவர்களிடம்  கேட்க சென்றேன்.  நான் பார்த்த சிலவற்றை படமாக்கி இருக்கின்றோம்.

1.12 – அவரது படுக்கை அறை – நான் முதலில் சென்ற போது திடுக்கிட்டேன், அந்த சிறிய அறை  முழுவதும் மேப்கள் நிறைந்திருக்க ( நீங்கள் பார்க்கும் அந்த சாதாரண பெட்,  நான் உட்கார்ந்தும், படுத்தே பார்த்தேன் ) காலை விழிக்கும்போதும், உறங்கும் போதும் தேசங்களுக்காக ஜெபித்துக்கொண்ட வாழ்கிறார். ( நிறைய மேப்கள் சுற்றி இருந்தது படப்பிடிப்பின் அழகிற்க்காக பலவற்றை அகற்றினோம். )

1.17 – அதிகாலை தினமும் 2.30 மணிக்கு எழுந்து விடுகிறார், ஜெபிக்க ஆரம்பிக்கிறார். நீங்கள் பார்க்கும் பழைய அந்த அலாரமே  இன்னும் உபயோகிறார்.

1.24 – காலை எழுந்து ஜெபிப்பதற்காக நீங்கள் காணும் இந்த ஜெபத்தோட்ட உச்சி மாடிக்கு வருகிறார். (உண்மையில் நான் ஏறி பார்க்க போய் ஆச்சரியப்பட்டேன், எனக்கே கஷ்டமாகத்தான் இருந்தது ஏறுவதற்கு) படப்பிடிப்பின் போது  வழக்கம் போல் ஜெபியுங்கள் என்று சொன்னேன். இந்த வயதிலும் நேர் முழங்காலில் ஜெபிக்கவும், வேதம் வாசிக்கவும் துவங்கினார்.

1.38 – (அந்த டேபிள்) நான் எப்போதும் அவரை காணும் போதும் சில பைபிள்கள், ஜெப குறிப்புகள், ஆவிக்குரிய புத்தகங்களோடு ஜெபித்துக்கொண்டும் வேதத்தை வாசித்து கொண்டும் தான் இருந்தார்.

1.42 – பலரும் ஜெபத்தோட்டம் பற்றி அறிவர். ஆனால் எப்படி இருக்கும் என்று தெரியாது. எனவே அதை பதிவு செய்ய விரும்பினேன் (முக்கியமாக வெளிநாட்டு வாழ் தமிழ் நெஞ்சங்களுக்காக ) .

1.56 – இன்றையை ஜெபத்தோட்ட ஆலயம்

2.30 – அலமாரி நிறைய ஜெபக்குறிப்புகளும், ஆவிக்குரிய புத்தங்கங்கள் தவிர வேறொன்றுமே இல்லை. (படப்பிடிப்பின் அழகிற்க்காக பலவற்றை அகற்றினோம்.)

2.40 – நான் எப்படி எல்லா பாடலை கம்போஸ் பண்ணுவீர்கள் என்று கேட்டேன், அதை மக்களுக்கு பதிவு செய்யவும் விரும்பினேன். கீ போர்டு எடுத்து வாசிக்கவும், பாடல் வரிகளை எழுதவும் துவங்கினார். எனக்கு அப்போதுதான் தெரியும் தந்தை அவர்கள் கீ போர்டும் வாசிப்பாரா என்று... (நீங்கள் பார்த்த அதே பெட்  அறையின் மறுபக்கத்தில் இந்த காட்சி ஔிபதிவு செய்யப்பட்டது )

3.30 –  ஜெபத்தோட்ட ஊழியத்தில் இணைந்து செயலாற்றும் ஊழியர்கள் மற்றும் குழந்தைகள் (மற்றோரு வெள்ளை டிரஸ் சஃபாரி  பாதர் பெர்க்மான்ஸ் அவர்களின் உடன்பிறந்த இளைய சகோதரர்)

6.21 – ஜெபத்தோட்ட ஆரம்ப நிலை கட்டிடம்

ஷூட்டிங்க்காக டிரஸ் செலேச்டின், டிரஸ் காட்டுங்க என்றேன். அந்த ஸெல்ப்பில் மொத்தமே நாலு அஞ்சு டிரஸ் தான் இருந்தது. என்னப்பா இவ்ளோதானா என்றேன்? இவ்ளோதான் இருக்கு என்றார்கள்.

ஜெபிக்கிறார், வேதம் வாசிக்கிறார், பாடல் கேட்கிறார், எழுதுகிறார், மொத்தத்தில் தேசம் தேவனை அறிய வேண்டும் என்ற பாரத்தை காண முடிந்தது. இப்படி ஒரு உண்மையுள்ள ஊழியருக்கு பணியாற்றியதில்  என் வாழ்நாளில் தேவன் தந்த பரிசாகவே கருதுகின்றேன் :: Judah Arun

இவ்வாறு இயக்குனர் ஜீடா அருண் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அன்பானவர்களே, இந்த பாடலை நீங்களும் பாருங்கள்.. பாடுங்கள்.. பாக்கியம் பெறுங்கள். தந்தை அவர்களுக்காகவும் அவர்களது ஊழியங்களுக்காகவும் தொடர்ந்து ஜெபம் பண்ணுங்கள். தேவன் அவர்களை அகில உலக மாபெரும் எழுப்புதலுக்கு அற்புதமான கருவியாக பயன்படுத்துவாராக..


Ennai Kaanbavarae :: Jebathotta Jeyageethangal Vol 40 :: Fr. S.J. Berchmans (Official full Video)


Ennai kaanbavarae Song Lyrics

என்னைக் காண்பவரே
தினம் காப்பவரே-2
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்-2

நான் அமர்வதும் நான் எழுவதும்-2
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்-2
– என்னை காண்பவரே

1.எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திருக்கின்றீர்-2
நடந்தாலும் படுத்தாலும்
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்-2

நன்றி ராஜா இயேசு ராஜா-2
– என்னை காண்பவரே

2.முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி
சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்-2
உம் திருக்கரத்தால் தினமும் என்னை
பற்றி பிடித்திருக்கின்றீர்-2

நன்றி ராஜா இயேசு ராஜா-2
– என்னை காண்பவரே

3.(என்) கருவை உம் கண்கள் கண்டன
மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே-2
அதிசயமாய் பிரமிக்கத்தக்க
பக்குவமாய் உருவாக்கினீர்-2

நன்றி ராஜா இயேசு ராஜா-2
– என்னை காண்பவரே


JEBATHOTTA JEYAGEETHANGAL VOL 40
Song: ENNAI KAANBAVARAE
Lyrics / Tunes / Sung: FR. S.J. BERCHMANS
Music: ALWYN M | Video: JUDAH ARUN
Produced & Marketed: MELCHI EVANGLICAL
Mixing & Mastering: AUGUSTIN PONSEELAN
YouTube: Jebathottam Ministries


Share this page with friends