முட்டாள்களின் தினம்: வேதத்தின் அடிப்படையில் யார் முட்டாள்?

Share this page with friends

இன்று முட்டாள்களின் தினம் எனவே வேதத்தின் அடிப்படையில் யார் முட்டாள் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

விபச்சாரம் செய்கிறவன் முட்டாள். நீதி. 6: 32

தேவனுடைய சித்தம் அறியாதோர் முட்டாள். எபே. 5:17

வீணரை பின்பற்றுகிவன் முட்டாள். நீதி. 12:11

தேவன் இல்லை என்று கூறுவோர் முட்டாள். சங். 14:1

உடன்படிக்கையை மீறுகிறவன் முட்டாள். யோசு. 7:15

விக்கிரகத்தை பணிகிறவர்கள் முட்டாள். எரே. 10: 8

தேவனுடைய பெயரில் பொய் தீர்க்கதரிசனம் உரைக்கிறவன் முட்டாள். எரே. 23:13

தேவனிடத்தில் பொக்கிஷம் சேர்த்து வைக்காதவன் முட்டாள். லூக்.12:20

கிறிஸ்துவின் வருகைக்கு ஜெபித்து ஆயத்தப்படாதவர் முட்டாள். மத்தேயு 25:2,8

கிறிஸ்துவின் வார்த்தைகளை கேட்டும் அதன்படி வாழாதவன் முட்டாள். மத். 7:26.

என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள். எரேமியா 4: 22


G.பேதுரு ஜெபராஜ்
கர்த்தருடைய வழி ஊழியங்கள்


Share this page with friends