ஊரடங்கு நாட்களில் கிறிஸ்தவ போதகர் மற்றும் விசுவாசிகளின் கனிவான கவனத்திற்கு

Share this page with friends

ஊரடங்கு நாட்களில் கிறிஸ்தவ போதகர் மற்றும் விசுவாசிகளின் கனிவான கவனத்திற்கு,

ஜனவரி 14 முதல் 18 ம் தேதி வரை நமது திருச்சபைகளில் பொதுமக்களின் வருகையை அனுமதிக்க வேண்டாம். திட்டமிட்ட கூடுகைகளை ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடுங்கள்.

நோய் தொற்று உள்ள இக்காலத்தில் வியாதியோடு போராடுபவர்களை நேரில் சந்தித்து ஜெபிப்பதை தவிர்த்து, போன் மூலம் ஜெபிப்பது நல்லது.

அத்தியாவசியமான காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுவதை வழக்கமாகவும், பழக்கமாகவும் மாற்றிக்கொள்ளுங்கள்.

மக்கள் பணி செய்யும் தூய்மை பணியாளர் முதல் ஆட்டோ ஓட்டுனர், கடைகளில் வேலை பார்ப்பவர்கள் என மக்களோடு தொடர்புடைய அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். ஆனால் நம்மில் பலர் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. உங்கள் விசுவாசத்தை மதிக்கிறோம். ஆயினும் விழிப்புணர்வும் விவேகமும் அவசியமானதுதானே.

விசுவாசிகளே, இக்கால சூழ்நிலையை மனிதில் கொண்டு உங்கள் போதகரை புரிந்துகொள்ளுங்கள். உங்கள் சிறப்பு விசேஷ நிகழ்ச்சிகளை கூடுமானவரை சற்று ஒத்திவையுங்கள். அவசியமான நிகழ்வுகளுக்கு போதகரை அழைக்கும் போது அவரது பாதுகாப்பையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.

கடந்த காலங்களில் நமது நாட்டில் ஆயிரக்கணக்கான போதகர்களையும், விசுவாசிகளையும் இழந்துவிட்டோம். இனி ஒருவரை கூட நாம் இழந்துவிட கூடாது என்பதில் மிக கவனமாயிருங்கள்.

சபையாக ஜெபிப்போம், ஞானத்துடன் திட்டமிடுவோம், விழப்புணர்வுடன் நடந்துகொள்வோம்.

இந்த செய்தியை நீங்கள் வாசித்தப்பின் அதோடு நிறுத்தி விடாமல் உங்களுக்கு அறிமுகமானவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களும் பயனடையட்டும்

நன்றி
tcnmedia.in


Share this page with friends