நான்கு ஆசைகள்

Share this page with friends

நீதிமான்களுடைய ஆசை நன்மையே: துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும். (நீதி 11 : 23)

இந்தக் குறிப்பில் ஒரு கிறிஸ்துவனுக்கு இருக்கவேண்டிய நான்கு ஆசைகளைக் குறித்து சிந்திக்கலாம். ஆசைகள் இல்லாத மனிதன் கிடையாது. எல்லோருக்கும் சில ஆசைகள் அவன் உள்ளத்தில் இருக்கும். ஆசையை உள்ளத்தில் போட்டவர் தேவன் ஆனால் அந்த ஆசையை நன்மையானதாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நீதிமானின் ஆசை நன்மைக்கே என்று வேதம் சொல்கிறது. கிறிஸ்துவுக்கு இருக்க வேண்டிய நான்கு ஆசைகளைக் இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.

  1. கிறிஸ்துவனுக்கு இருக்கவேண்டிய ஆசை இயேசுவை காண ஆசை. ….அவரை ( இயேசுவை ) காணும்படி வெகு நாளாய் ஆசைக் கொண்டிருந்தான். அந்தப்படி அவரைக் கண்டபோது மிகவும் சந்தோஷப்பட்டு, (லூக்கா 23 : 8), (யோவா 12 : 20 , 21), (யோவா 8 : 56), (லூக் 19 : 2 , 3 , 2 : 32), (மத் 2 : 11), (ஏசா 6 : 1 , 5), (யோபு 19:25-27, 42:5), (உன் 3 : 1- 4), (சங் 63 : 2)
  1. கிறிஸ்துவனுக்கு இருக்கவேண்டிய ஆசை இயேசுவோடுகூட இருக்க ஆசை. ….கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாய் இருக்கும். (பிலி 1 : 23), (லூக் 8 : 35), (லூக் 10 : 38-42), (மாற்கு 5 : 15), (யோவா 13 : 23)
  1. கிறிஸ்துவனுக்கு இருக்க வேண்டிய ஆசை இயேசுவின் அழைப்பை நிறைவேற்ற ஆசை ….இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப் பட்டேனோ அதை நான் பிடித்துக் கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன். (பிலி 3 : 12), (அப் 20 : 24), (அப் 21 : 13), (2 பேது 1 : 10)
  1. கிறிஸ்துவனுக்கு இருக்க வேண்டிய ஆசை தேவ வசனத்தைக் கேட்க ஆசை. ….அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் வசனத்தைக் கேட்க ஆசையாய் இருந்தான். (அப் 13 : 7 , 20 : 24,25), (யாக் 1 : 22 , 23), (1 பேது 2 : 3), (மத் 7 : 24 — 27,13:22), (யோவா 5 : 32), (லூக் 11 : 28), (நீதி 13 : 13), (எரே 15 : 16), (அப் 16 : 14 , 15) (அப் 17 : 10 , 11), (எஸ்றா 7 : 10)

கிறிஸ்துவனுக்கு இருக்க வேண்டிய நான்கு ஆசைகளைக் குறித்து சிந்தித்தோம். அதில் இயேசுவைக்காண ஆசை , இயேசுவோடுகூட இருக்க ஆசை , இயேசுவின் அழைப்பை நிறை வேற்ற ஆசை , தேவ வசனதத்தைக் கேட்க ஆசை என் நான்கு ஆசைகளை பார்த்தோம் இவைகளே நீதிமானின் நன்மையான ஆசைகள். இப்படிப்பட்ட ஆசையில் நிலைத்திருங்கள். தேவன் நம்முடைய ஆசையை நிறைவேற்றி கொடுப்பார்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur.

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends