ஜென்ம சுபாவங்கள்

Share this page with friends

ஜென்ம சுபாவங்கள்

தொன்று தொட்டு ஒரு குறிப்பிட்ட சுபாவம் நம்மை தொடர்ந்து விழ தள்ளுகிறது என்றால் நிச்சயம் அது நம்முடைய DNA, genetics மற்றும் herdicictory சம்பந்தப் பட்டது. உபாகமம் 28 ஆம் அதிகாரத்தில் சொல்லப் பட்ட தீமையான காரியங்கள் நமது வாழ்வில் தொடர்ந்து சம்பவித்துக் கொண்டே இருந்தால் நமது வாழ்வில் ஏதோ ஒரு இடத்தில் பின்வரும் சுபாவங்கள் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். உபாகமம் 28 இல் சொல்லப் பட்டு இருக்கிற ஆசீர்வாதங்களை விரும்பும் நாம் அதில் சொல்லப் பட்ட நம்மை தொடரும் தீமையான காரியங்களை அறிந்து வெற்றி கொள்ள வேண்டும்.

இன்னும் இவைகளை classify செய்யலாம் எப்படி?
உலகத்தோடு தொடர்புடைய சுபாவங்கள். ( I யோவான் 2 மற்றும் 4 ஆம் அதிகாரங்கள்)
விக்கிரங்கள்/ சாத்தானின் வழிபாடுகளுக்குஉரிய சுபாவங்கள். ( I கோரிந்தியர் 8, 10, 12 அதிகாரங்கள் மற்றும் II கோரி 6)
மாம்சத்துக்குரிய உணர்ச்சிவசப்படும் சுபாவங்கள். (கலா 5:1-22. ரோமர் 8)
பிரமாணங்கள் மற்றும் மனசாட்சிக்கு அடுத்த சுபாவங்கள். ( ரோம 7, 10, 12 மற்றும் கலா 2, 3, 4 மற்றும் 6 ஆம் அதிகாரங்கள்)
மேற்குறிப்பிட்ட ஏதாவது விதத்தில் தொன்று தொட்டு நாம் விழுந்து போனால் அவற்றை கண்டுப் பிடித்து வெற்றி பெற வேண்டும்.
ஜென்ம சுபாவத்தில் நன்மையான சுபாவங்களும் உண்டு தீமையுமான சுபாவங்களும் உண்டு, அவைகளில் தீமைகளை கண்டுபிடித்து நன்மைகளாக மாற்ற வேண்டும்.

1. சந்தேகம் அவுசுவாசம். (எதையும் சந்தேக கண்ணோடு பார்த்தல். இரு மனம்) ஆதாமும் ஏவாளும் கர்த்தரின் வார்த்தையை நம்பாமல் சாத்தானுக்கு இடம் கொடுத்தனர். அது சந்ததி சந்ததியாக இன்னும் தொடருகிறது. ஆபிரகாம் விசுவாசித்தாலும் சாராளின் DNA இல் சந்தேகம் ஒட்டி இருந்தது. அது தான் தொடர்ந்து இஸ்ரவேலர் விசுவாசியாமால் போக காரணமாக இருந்து இருக்கலாம். சகரியா vs யோவான்

2. கீழ்படியாமை, மீறுதல்..இதை கவனிக்காமல் விட்டால் துணிகரம்/ அக்கிரமம்.

3. பயம், கவலை போன்ற எதிர்மறை எண்ணங்கள். அப்படி நடந்து விடுமோ இப்படி நடந்து விடுமோ என்கிற அச்சம். சிலருக்கு பயத்தின் ஆவி பாரம்பரியமாக தொடர்ந்து வருகிறது.

4. செவிக்கொடுக்காமை. யார் என்ன சொன்னாலும் கேட்காமல் தாங்களாகவே ஒன்றை செய்து மாட்டி விடுதல்.

5. கோபம் மற்றும் வைராக்கியம். முற்கோபம், எந்த காரியங்களையும் கோபம் கொண்டு வைராயிக்கியம் கொண்டு செய்தல். நன்மையான காரியங்களுக்கு வைராக்கியம் பாராட்டுதல் நல்லது (லேவி கோத்திரம்)

6. மாம்ச இச்சை. மாம்ச ஆசையை நிறைவேற்ற துடிக்கும் ஆவல். (யூதா, தாவீது, சாலமன்)

7. முரட்டுகுணம் ( காலேபின் சந்ததி)

8. திருட்டு/பொய் பொருளாசை.

9. பொறாமை/ எருச்சல் ( ராகேலின் வழி வந்த பென்யமீன் கோத்திரத்தில் சவுல் வரை அதை பார்க்கலாம்)

இவைகள் சிலுவையில் அனுதினமும் அறையப்பட்டு கிறிஸ்துவின் சுபாவங்களான, இயேசு தன் மலை பிரசங்கத்தில் சொன்ன சுபாவங்கள் அத்தனையும் சிலுவையில் வெளிப்படுத்தியது போல நாம் வெளிபடுத்த வேண்டும்.

எப்படி வெளிப்படுத்தினார்?

1. அந்தஸ்தை ஒரு பொருட்டாக/ கொள்ளையாடின பொருளாக எண்ணாமை. (தாம் தேவனுடைய ரூபமாக சமமாக இருந்தும்)

2. தாம் ஒன்றுமில்லை என்கிற வெருமையாக்குதல்.

3. சாதாரண சாயலாக மாறுதல் ( அடிமையின் ரூபம்)

4. தன்னை தாழ்த்துதல் ( மரணபரியந்தம்)

இந்த சுபாவத்தில் வளர வேண்டும். இவற்றை செய்ய அவர்

பட்டபாடுகளினால் கீழ்படிதலை கற்றுக் கொண்டு,
உரத்த சத்தமிட்டு ஜெபித்து,
நமக்கு மாதிரியாக புதிய மார்க்கம் தந்து
நம்மை மீட்கும் பலியாக மரித்தார்.

அவருடைய தழும்புகளால் சுகம் அடைகிறோம். அவரை போல மாறி அவரது சாயலை பெறுகிறோம்.

செலின்

மக்கள் அதிகம் வாசித்தவை:

சிறுகதைகள் : எது பெரிய உதவி
சென்னை பெந்தேகோஸ்தே போதகர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நினைவு பரிசு மற்றும் நிதி உதவி
தி பெந்தெகோஸ்தே ஸ்தாபனத்தை சேர்ந்த இரு பிரபல போதகர்கள் விபத்தில் பலி
சிறுகதைகள் : நன்மை செய்யும் வாய்ப்பை தவறவிடாதே
தேவனுடைய பிள்ளைகளுக்கும் உபத்திரவங்கள் வருகிறதே.. ஏன் தெரியுமா?
கழுதையினால் வந்த வாழ்வு! வித்யா'வின் பதிவு
பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார்
புதிய ஏற்பாட்டு நடைமுறையை அமல் படுத்துவோம்
கொரோனா தொற்றினால் மரணம் அடைந்த கிறிஸ்தவ அருட்பணியாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க தமிழக மு...
நமக்கு கொடுக்கப்பட்ட குமாரன் எப்படிப்பட்டவர்

Share this page with friends