ஜெபத்திற்கு பதில் அளிக்கிற தேவன்

Share this page with friends

ஜெபத்திற்கு பதில் அளிக்கிற தேவன்

கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார். கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்வார். (சங் 6 : 9).

இயேசு கிறிஸ்துவின் நாமங்களில் ஒன்று, ஜெபத்தைக் கேட்கிறவர் சங் : 65 : 2. ஜெபிக்கிற ஒவ்வொருவரும் அறிந்துக்கொள்ள வேண்டியது கர்த்தர் எந்நாளும் ஜெபத்தைக் கேட்கிறவர். உன்னுடைய ஜெபத்தைக் கேட்டேன் என்று என்று தேவன் சிலரிடம் கூறியுள்ளதை வேதத்தில் காணலாம். அப்படிப்பட்ட சிலர் யார்? அவர்களது ஜெபம் என்ன ? அவர்கள் பெற்ற ஆசீர்வாதம் என்ன என்பதை இந்தக் குறிப்பில் சிந்திக்கலாம்.

  1. குடும்பத்தின் விரிவாக்கத்துக்காக ஆபிராம் எறெடுத்த ஜெபம்

இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன். (ஆதி : 17 : 20). ஆபிரகாம் தமது குடும்ப விருத்திக்காக ஜெபித்த ஜெபத்தைக் கேட்டு அந்தக் குடும்பத்தை விரிவாக்கமும், விருத்தி அடையும்படி செய்தார்.

  1. ஆயுசு நாட்களின் நீட்டிப்புக்காக எசேக்கியா ஏறெடுத்த ஜெபம்

உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்.(2 இராஜா 20 : 5), ஏசாயா 38 : 1-5) கர்த்தர் ஜெபத்தை ஏற்றுக்கொள்வார் என்ற வாக்குத்தத்ததை தினந்தோறும் அறிக்கை செய்து ஆரோக்கியத்தையும் ஆயுசு நாட்களையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

  1. இரக்கமான விடுதலைக்காக யோசியா ஏறெடுத்த ஜெபம்

உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் (2 நாளாக 34 : 27). கர்த்தரிடத்தில் இரக்க மான விடுதலைக்காக கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்வார் என்ற வார்த்தையை அறிக்கை செய்து தேவனிடத்திலிருந்து விடுதலையை பெற்றுக் கொள்ளுங்கள்.

  1. மகிமையான சுவிசேஷப்பணிக்காக சகரியா ஏறெடுத்த ஜெபம்

உன் வேண்டுதல் கேட்கப்பட்டது (லூக்கா 1 : 13 , 18 , 19) சகரியா மகிமையான சுவிசேஷ ஊழியத்திற்காக அவன் ஜெபத்தை
தேவன் கேட்டார். ஊழியக்காரர்களே உங்கள் ஊழியத்திற்காக கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்வார் என்று அறிக்கை செய்து ஜெபியுங்கள் கர்த்தர் உங்கள் ஜெபத்தைக் கேட்டு உங்கள் ஊழியத்தின் தேவைகளைச் சந்திப்பார்.

  1. தெய்வீக மகிழ்ச்சிக்காக கொர்நேலியு ஏறெடுத்த ஜெபம்

உன் ஜெபம் கேட்க்கப்பட்டது (அப் 10 : 31), (அப் 10 : 2) இது கொர்நேலியு ஏறெடுத்த ஜெபமாகும் அதற்கு தேவன் தந்த பதில்தான் இது. இது ஓர் அசரீரி வாக்காகும். கொர்நேலியு தேவபக்தியுள்ளவன். (சங் 4 : 3). கொர்நேலியு பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டான். அவன் வீட்டார் யாவரும் எழுப்புதலையும் தெய்வீக மகிழ்ச்சியையும் பெற்றுக் கொண்டார்கள். கர்த்தர் ஜெபத்தை ஏற்றுக் கொள்வார் என்று விசுவாசித்து ஜெபியுங்கள். கொர்நேலியுவை நிரப்பின பரிசுத்த ஆவியானவர் உங்களையும் நிரப்புவார் தெய்வீக மகிழ்ச்சியையும் தருவார்.

கர்த்தர் ஜெபத்தை ஏற்றுக்கொள்வார் என்ற வார்த்தையின் அடிப்படையில் ஆபிரகாமின் ஜெபம், எசேக்கியாவின் ஜெபம் , யோசியாவின் ஜெபம் , சகரியாவின் ஜெபம், கொர்நேலியுவின் ஜெபம் இவர்களின் ஜெபத்தைக் கேட்டவர் உங்களது ஜெபத்தையும் கேட்ப்பார். நம்முடைய தேவன் ஜெபத்தைக் கேட்கிற தேவன்.

ஆமென் !

S. Daniel Balu
Tirupur

மக்கள் அதிகம் வாசித்தவை:


Share this page with friends